Saturday, October 17, 2020

ஐன்ஸ்டீன் சமன்பாடுகளின் அண்டவியல் ஒருமைப்பாட்டுடன் பொதுவான தீர்வைக் (B.K.L) கண்டுபிடித்த இயற்பியலாளர், ஐசாக் மார்க்கோவிச் கலாத்னிகோவ் பிறந்த தினம் இன்று (அக்டோபர் 17, 1919).

ஐன்ஸ்டீன் சமன்பாடுகளின் அண்டவியல் ஒருமைப்பாட்டுடன் பொதுவான தீர்வைக் (B.K.L) கண்டுபிடித்த  இயற்பியலாளர், ஐசாக் மார்க்கோவிச் கலாத்னிகோவ் பிறந்த தினம் இன்று (அக்டோபர் 17, 1919). 

ஐசாக் மார்க்கோவிச் கலாத்னிகோவ் (Isaak Markovich Khalatnikov) அக்டோபர் 17, 1919ல் யூதக் குடும்பத்தில் தினிப்ரோபெத்ரோவ்சுக் எனுமிடத்தில் பிறந்தார். இவர் தினிப்ரோபெத்ரோவ்சுக் அரசு பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று 1941ல் இயற்பியலில் பட்டம் பெற்றார். 1944ல் இருந்து சோவியத் பொதுவுடைமைக் கட்சியின் உறுப்பினரா இருந்துள்ளார். இவர் 1952ல் தன் முனைவர் பட்டத்தைப் பெற்றார். இவரது மனைவியான வாலன்டினா புரட்சியாளர் நிகோலாய் சுக்கோர்சுவின் மகளாவார். மீப்பாய்மைக்கான இலாந்தவு-கலாத்னிகோவ் கோட்பாடு உட்பட, இவரது பெரும்பாலான ஆய்வுப்பணிகள் இலாந்தவோடு இணைந்தோ அல்லது பின்னவரின் ஆர்வம் தூண்டிய ஊக்கத்தோடோயே மேற்கொள்ளப்பட்டன.

 

ஐசாக் 1970ல் பிரின்சுடன் பல்கலைக்கழக சார்லசு மைசுனர் அறிமுகப்படுத்திய மிக்சுமாசுட்டர் அண்டப்படிமத்தால் ஈர்க்கப்பட்டு, விளாதிமிர் ஏ.பெலின்சுகி அவர்களுடனும் எவ்கேனி மீகயீலொவிச் இலிப்சிட்சுடனும் இணைந்து BKL கருதுகோள் எனும் கருத்துப்படிமத்தை அறிமுகப்படுத்தினார். இது செவ்வியல் ஈர்ப்புக் கோட்பாட்டில் உள்ள மிக உயர்ந்த திறந்தநிலைச் சிக்கல்களில் ஒன்றாக பரவலாக்க் கருதப்படுகிறது. இதில் B என்பது பெலின்சுகியையும் K என்பது கலாத்னிகோவையும் L என்பது இலிப்சிட்சையும் குறிக்கும். 1965 முதல் 1992 வரை மாஸ்கோவில் உள்ள இலாந்தவு கோட்பாட்டு இயற்பியல் நிறுவனத்தை நெறிபடுத்தினார். இவர் 1984ல் சோவியத் அறிவியல் கல்விக்கழகத்துக்குத் தேர்வு செய்யப்பட்டார். இவர் இலாந்தவு பருசும் அலெக்சாந்தர் வான் அம்போல்ட் விருதும் பெற்றார். இலண்டன் அரசு கழக அயல்நாட்டு உறுப்பினராக உள்ளார். 

Spherical Harmonics

ஐசாக் நிகோலொவால் அவர் பிடித்த அனைத்துக்குமான கோட்பாடு எனும் 2014 ஆம் ஆண்டுத் திரைப்படத்தில் படம்பிடிக்கப்பட்டுள்ளார். இவர் பொது சார்பியல் கோட்பாட்டில் BKL கருதுகோள் உருவாக்கியதற்காகப் பெயர் பெற்றார். சுடாலின் பரிசு (1953), BKL வழுப்புள்ளி அல்லது தனிவழுப்புள்ளி எனப்படும் அண்டவியல் குழப்ப அலைதகவுப் பான்மை தனிமைப்புள்ளியுடன் அய்ன்சுட்டீன் சார்பியல் சமன்பாடுகளுக்கான பொதுத் தீர்வைக் கண்டுபிடித்ததற்காக மார்சல் கிராசுமன் விருது (2012) போன்ற விருதுகளை பெற்றுள்ளார்.

Source By: Wikipedia

தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி.

இது போன்ற தகவல் பெற

https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc

நன்றி.
இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

No comments:

Post a Comment

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல்லூரி மாணவர்கள்.

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல...