Wednesday, November 18, 2020

✍🏻 இயற்கை வாழ்வியல் முறை🍌🍌 வாழையின் நன்மைகள்.

 ✍🏻 இயற்கை வாழ்வியல் முறை🍌🍌 வாழையின் நன்மைகள்.

🍌🍌🍌🍌🍌🍌

பாரம்பரிய உணவுகளில் இன்று வரை இன்றியமையாததாக இருந்து வருவது வாழை மற்றும் வாழை சார்ந்த உணவுகள். நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான் இந்த வாழை. மறந்து போன நமது பாரம்பரியம் மிக்க வாழையின் நன்மைகளை பற்றி தெரிந்து கொள்வோம்.

🍌🍌🍌🍌🍌🍌

வாழைப்பூ துவரம் பருப்புடன் வாழைப்பூசேர்த்து கூட்டுவைத்து சாப்பிட வேண்டும். பித்த நோய்கள் குணமாகும்; இரத்தம் விருத்தியாகும்.

வாழைப்பூவுக்குத் தசைகளை உறுதிப்படுத்தும் தன்மை உண்டு. இதைத் தொடர்ந்து உண்டுவந்தால் மாதவிடாய் காலத்தில்  ஏற்படும் அதிக ரத்தப்போக்கைத் தடுக்கலாம். வாரம் இரு முறையாவது வாழைப்பூவை அனைவரும் கட்டாயம் சாப்பிட  வேண்டும்.  ஆனால் செரிமானக் கோளாறு இருக்கும் போது, வாழைப்பூ உண்பதைத் தவிர்க்க வேண்டும்.

🍌🍌🍌🍌🍌🍌

வாழைக்காய்

உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்கள் வாழைக்காயை அவியல் செய்து சாப்பிடலாம். இதில், மாவுச்சத்து அதிகம்  இருப்பதால், வாழைக்காய் சிறிதளவு எடுத்துக்கொண்டாலே உடலுக்குத் தேவையான சக்தி கிடைக்கும்.

பிஞ்சு வாழைக்காய் கூட்டு செய்து சாப்பிட்டால் உடல் உறுதி அதிகரிக்கும். வயிற்றுப் புண்கள் மாறும். வாரம் ஒரு முறை வாழைக்காய் பொரியல், வறுவல் போன்றவை செய்து சாப்பிட்டு வந்தால் இரத்தம் பெருகும்; உடல் உறுதியாகும்.

வாழைக்காயை மசித்து  சிறிதளவு உப்பு போட்டு வேகவைத்து சூப்பாகவும் அருந்தலாம். வாழைக்காய் வறுவல், வாழைக்காய் சிப்ஸ் போன்றவற்றை மிகக்  குறைந்த அளவே சாப்பிட வேண்டும்.  இல்லையெனில் வயிறு மந்தமாகிவிடும். செரிமானக் கோளாறு உள்ளவர்கள், மூட்டு வலி  இருப்பவர்கள், உடல் பருமனானவர்கள் வாழைக்காயைத் தவிர்க்க வேண்டும்.

🍌🍌🍌🍌🍌🍌

வாழைப்பழம்

அதிக கலோரி மற்றும் பொட்டாசியம் கொண்டது. உடலில் தங்கியிருக்கும் தேவையற்ற சோடியம் உப்பை நீக்கி, உடல் சோர்ந்து  போகாமல் இருக்கத் தேவையான பொட்டாசியம் உப்பை சேமித்து வைக்கிறது. உடலில் நீர்ச்சத்து குறையும்போது இயற்கையான  குளுக்கோஸாக வாழைப்பழம் பயன்படுகிறது. குடலை சுத்தம் செய்வது மட்டுமின்றி மலச்சிக்கலுக்கு சிறந்த நிவாரணியாகப்  பயன்படுகிறது. தினமும் காலை எழுந்தவுடன் ஒரு வாழைப்பழம், இரவு உணவுக்குப் பின் ஒரு மணி நேரம் கழித்து ஒரு  வாழைப்பழம் சாப்பிட வேண்டும். சிலர் வாழைப் பழத்தை பால், தயிருடன் சேர்த்து மில்க்‌ஷேக் ஆக குடிக்கிறார்கள். இது தவறு.  வாழைப்பழத்தை எந்தப் பொருளுடனும் கலந்து உண்ணக் கூடாது. ஆஸ்துமா மற்றும் சர்க்கரை நோயாளிகள் தவிர  அனைவருமே வாழைப்பழத்தை தினமும் உண்ணலாம்.

வாழைப்பழத்தில் எவ்வளவு வகைகள் இருக்குனு தெரியுமா?

🍌🍌🍌🍌🍌🍌

வாழைத்தண்டு

உடலில் தேவையற்ற உப்பை சிறுநீர் மூலமாக வெளியேற்றுவதில் வாழைத்தண்டுக்கு நிகர் இல்லை. சிறுநீரகத்தில் கற்கள்  வராமல் தடுக்கவும், அதிகப்படியான கால்சியத்தை வெளியேற்றவும் இது உதவுகிறது. வாரத்துக்கு நான்கு முறையாவது  வாழைத்தண்டைக் கட்டாயம் சாறாகவோ, பொரியலாகவோ அல்லது அவியலாகவோ சமைத்து உணவில் சேர்த்துக்  கொள்ளவேண்டும்.

🍌🍌🍌🍌🍌🍌 வாழைத்தண்டு சூப்பை கடைகளில் வாங்கிக் குடிப்பதை முடிந்த வரையில் தவிர்ப்பது நல்லது. உப்பு குறைவாக சேர்த்துக் கொண்டு மிளகு  அல்லது சீரகத்தூள் சேர்த்து, வீட்டிலேயே வாழைத்தண்டு சூப் வைத்து அருந்தலாம். உடல் மெலிய விரும்புபவர்கள் நார்ச்சத்து  மிக்க வாழைத் தண்டைச் சாப்பிடலாம். உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் உப்பு சேர்க்காமல் வாழைத் தண்டை உணவில்  சேர்த்துக் கொள்ள வேண்டும்.

வாழையின் நன்மைகள் - வாழையடி வாழையாய் தொடரும்

🍌🍌🍌🍌🍌🍌

வாழை இலை பச்சையம் நிறைந்தது. இரும்பு,  மக்னீசியம் உள்ளிட்ட சத்துகள் உள்ளன. இதனால் வாழை இலையில் உணவை  வைத்து உண்ணுமாறு பரிந்துரைக்கிறது சித்த மருத்துவம். வாழை இலையில் சூடான உணவுப்பொருளை வைத்து உண்ணும் போது வாழை இலையில் இருக்கும் சத்துக்களும் நமது உடம்பில் சேர்கின்றன. மேலும், இதில் பாலிபீனால் இருப்பதால்  நமது உணவுக்கு இயற்கையாகவே கூடுதல் சுவை கிடைக்கிறது. எவர்சில்வர் தட்டுகளைத் தவிர்த்து, தினமும் வாழை  இலையில் உண்ணுவது சிறந்தது

🍌🍌🍌🍌🍌🍌

வாழை இழையில்  சிறிது தேங்காய் எண்ணெய் ஊற்றி நம்முடைய சருமத்தில் அரிப்பு ஏற்படும் இடத்தில் வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் நம் தோல் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். இதனை தொடர்ந்து செய்வதால் நமக்கு தோல் அரிப்பு ஏற்படுவது தடுக்க படுகிறது.

Gulabikaurgifs GIF | Gfycat

🍌🍌🍌🍌🍌🍌

மிகினும் குறையினும் நோய்செய்யும் அளவோடு பயன்படுத்தி நலமோடு வாழ்வோம்.

🍌🍌🍌🍌🍌🍌

🌷🌷🌷🌷🌷🌷

உடல் ஆரோக்கியமாக  இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்

🦚🦚🦚🦚🦚🦚

உடலில் உள்ள   எல்லா உடல் நல குறைபாடுகளையும்  சரிசெய்ய  இயற்கை வாழ்வியல் முறை சார்ந்த   ஆலோசனைகள் வழங்கபடும்.

🦚🦚🦚🦚🦚🦚

நன்றி : பெருசங்கர், 🚍 ஈரோடு  மாவட்டம், பவானி

🍌🍌🍌🍌🍌🍌

(( செல் நம்பர்)) (( 6383487768))

(( வாட்ஸ் அப்))  (( 7598258480 ))

🍌🍌🍌🍌🍌🍌

_______

குரு வாழ்க குருவே துணை

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

No comments:

Post a Comment

Notification for Student’s Registrations in ISRO START Programme

Notification for Student’s Registrations in ISRO START Programme. இஸ்ரோ ஆன்லைன் படிப்பு பதிவு பதிவுகளுக்கான அறிவிப்பு. ISRO has an active sp...