புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரியில் சர்வதேச முகக்கவசம் தயாரிப்பு பயிற்சிப் பட்டறை.
கொரோனா வைரஸிடம்
இருந்து பாதுகாத்துக்கொள்ள மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்
முகக்கவசம் தயாரிப்பு பயிற்சிப் பட்டறையானது சர்வதேச அளவில் புத்தனாம்பட்டி நேரு
நினைவுக் கல்லூரி விலங்கியல் துறையில்
நடத்தப்பட்டது. திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையம், பிசினஸ்
இங்குபேஷன் மையம், நாட்டு நலப்பணித்திட்ட மையம்
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருநெல்வேலி
மற்றும் கியோட்டோ, பல்கலைக்கழகம், ஜப்பான்
இணைந்து இணைய வழி மூலமாக இலவச எளிதில்
கிடைக்கும் பொருள்கலைக் கொண்டு தரமான விலைக் குறைவான முகமூடி தயாரிப்பு பயிற்சி
பட்டறை 18.11.2020 அன்று நடத்தப்பட்டது.
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் உயர் வேதியல் துறை மூத்த பேராசிரியர் முனைவர் சா.சுதாகர் அவர்கள் பயிற்சிப் பட்டரை பற்றிய முன்னுரையையும் முக்கியத்துவத்தையும் பற்றிப் பேசினார்.
- ·
இந்த முககவசம் மிகவும் பாதுக்காப்பானது,
- ·
மற்ற முககவசத்தை விட இதில் நன்றாக சுவாசிக்க முடியும்,
- ·
அரிப்பு ஏற்படாது,
- · இதில் கிருமிகள் உள்ளே செல்லமுடியாது, ஏனெனில் கிருமிகளால் நேராக மட்டுமே செல்ல முடியும் `'S' போன்று வளைந்து செல்லமுடியாது,
- · இது, கண், மூக்கு, வாய் போன்ற பாகங்களை மூடிப்பாதுகாக்கிறது என இவற்றின் பல்வேறு சிறப்புகளை எடுத்துரைத்தார்.
திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தை சேர்ந்த மாவட்ட அறிவியல் அதிகாரி திரு எஸ்.குமார் அவர்கள் நம்மிடையே கிடைக்கக்கூடிய மிக குறைந்த விலையுள்ள பொருள்களை பயன்படுத்தி எவ்வாறு முகமூடி தயாரிப்பது என்பதனைப் பற்றியும் முகமுடி தயாரிப்பது பற்றிய செய்திகளை மற்றவர்களிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று சிறப்புரை ஆற்றி சிறப்பித்தார். திருநெல்வேலி மாவட்டம் அறிவியல் மையத்தை சேர்ந்த திரு.மர்லின் அவர்கள் பிளாஶ்டிக் பேப்பர் ( X- ரே அல்லது பேப்பர்) மூலம் முகமுடி தயாரிப்பு பற்றிய பயிற்சி அளித்தார்.
- இந்த முகக்கவசத்தை தயாரிப்பதற்கு 10 ரூபாய் மட்டுமே ஆகும்.
- இதை மறுப்படியும் பயன்படுத்தலாம்.
- நீண்ட நாட்களுக்கு பயன்படுத்தலாம்.
- இதை தயாரிக்க ஒரு X ரே பேப்பர் மற்றும் நூல் போதுமானது.
ஜப்பான் கியோட்டோ பல்கலைக்கழகத்தைச் சார்ந்த பேராசிரியர் முனைவர் நமச்சிவாய கணேஷ் பாண்டியன் அவர்கள் இப்பயிற்சிப் பட்டறையில் துவக்க உரையாற்றி துவக்கி வைத்தார் இவ்வுரையில் அவர் முகமூடி முக்கியத்துவத்தைப் பற்றி உரையாற்றி சிறப்பித்தார். ஜப்பான் கியோட்டோ பல்கலைக் கழகத்தை சேர்ந்த முனைவர் பேராசிரியர் ஈசன் சிவனயன் அவர்கள் முகமூடி பற்றியும் அதன் பயன்பாடு பற்றியும் விளக்க உரை அளித்தார். முனைவர். ஈசன் அவர்கள் இதற்கு காப்புருமை வாங்கியுள்ளார். இருந்த போதும் அதற்காக எந்த ராயல்டி தொகையும் வேண்டாமென தெரிவித்துள்ளார். ஆணால் இதை அனைவரும் தயாரித்து பயன்பெறவேண்டும் இந்த செய்தி அனவரிடமும் சென்றடைய வேண்டும் என்பது தான் என் நோக்கம் என கூறினார்.
அதே பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆண்ட்ரியா
கிப்பன்ஸ் அவர்கள் முகமூடி தயாரிப்பு
பற்றியும் அதன் முக்கியத்துவம், பயன்பாடு, பாதுகாப்பு முறை பற்றியும் விரிவுரை
ஆற்றினார். இப்பயிற்சிப் பட்டறையில் எமது கல்லூரியை சார்ந்த அனைத்து துறை
பேராசிரியர்கள், பிற கல்லூரிகளை சார்ந்த அனைத்து துறை
பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் 200 க்கும் மேற்ப்பட்ட இளங்கலை, முதுகலை பயிலும்
மாணவர்கள் கலந்துகொண்டடு பயன்பெற்றனர். புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரி கல்வி குழு தலைவர் பொறியாளர் பொன் பாலசுப்பிரமணியம், கல்விக் குழு செயலர் திரு பொன்.ரவிச்சந்திரன், கல்லூரி முதல்வர் முனைவர் ஏ.ஆர்.பொன் பெரியசாமி அவர்க ளும் வாழ்த்துரை வழங்கி சிறப்பித்தார்.
முன்னதாக விலங்கியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் க.சரவணன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். இப்பயிற்சி பட்டறை சிறப்பாக நடத்துவதற்கு எமது விலங்கியல் துறை சார்ந்த உதவி பேராசிரியர்கள் ஒத்துழைப்பு நல்கினர்.
இப்பயிற்சிப் பட்டறையில் இறுதியாக புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரி விலங்கியல் துறை உதவி பேராசிரியை செல்வி க.ரேவதி நன்றியுரை வழங்கினார். விலங்கியல் துறை மூன்றாம் ஆண்டு பயிலும் செல்வி எஸ்.எம்.மோனிஸ்ரீ இப்பயிற்சிப் பட்டறையை தொகுத்து வழங்கினார். கல்லூரியின் விலங்கியல் துறை தலைவர் பேராசிரியர் மு.பி.சாந்தி அவர்கள் பயிற்சிப்பட்டறையை ஏற்பாடு செய்திருந்தார்.
No comments:
Post a Comment