Sunday, December 13, 2020

புவிமின்னோட்டச் சுற்றமைப்பையும் கண்டுபிடித்த யோகான் வான் இலாமாண்ட் பிறந்த தினம் இன்று (டிசம்பர் 13, 1805).

புவிமின்னோட்டச் சுற்றமைப்பையும் கண்டுபிடித்த யோகான் வான் இலாமாண்ட் பிறந்த தினம் இன்று (டிசம்பர் 13, 1805).


ஜான் வான் இலாமாண்ட் (Johann von Lamont) FRSE டிசம்பர் 13, 1805ல் ஸ்காட்லாந்தில் உள்ள அபர்டீன்சயரில் இன்வெரே பகுதிக்கு அருகில் அமைந்த கோரீமுல்சீயில் பிறந்தார். இவரது தந்தையார் இராபர்ட் இலாமாண்ட். இவரது தாயார் எஇலிசபத் ஏவான். இவர் பிரேமார் பக்கத்தில் அமைந்த இன்வெரே பள்ளியில் கல்வி பயின்றார். இவர் தந்தையார் 1817ல் இறந்துவிட்டார். எனவே இவர் செருமனிக்கு, புனித ஜேம்சு துறவுமடத்தின் இரேட்டிசுபானில் உள்ள சுகாட்சு பெனெடிக்டைன் கல்லூரிக்கு, அனுப்பப்பட்டார். இவர் போகங்கவுசன் வான்காணகத்தில் சேர்ந்து வானியல் பணியைத் தொடங்கினார். 1835ல் அதன் இயக்குநரானார். முனைவர் பட்டத்தை 1830 இல் முடித்து 1852 இல் மூனிச் பல்கலைக்கழக வானியல் பேராசிரியர் ஆனார். சுமார் 35,000 உள்ளீடுகளைக் கொண்ட ஒரு நட்சத்திர பட்டியலை உருவாக்கும் பணியை அவர் ஆய்வகத்தில் மேற்கொண்டார். 

இவரது சிறப்புப் புலம் புவியின் காந்தவியலாகும். இவர் புவியின் காந்த அளக்கைகளைப் பவாரியா, வடக்குச் ஜெர்மனி, பிரான்சு, சுபெயின், டென்மார்க் ஆகிய இடங்களில் மேற்கொண்டார். இவர் 1850ல் காந்தப் பத்தாண்டு அலைவுநேரத்தையும் (பத்தாண்டு வட்டிப்பு புவிக்காண்டஹ்ப்புலத்தை உருவாக்கும்) புவிமின்னோட்டச் சுற்றமைப்பையும் கண்டுபிடித்தார். இது ஓரளவு சூரியக் கரும்புள்ளி வட்டிப்பை ஒத்தமைந்தது. அதே ஆண்டில் என்றிச் சாமுவேல் சுவாபே சூரியனின் கரும்புள்ளிகளின் வட்டிப்பைக் கண்டறிந்தார். இவர் யுரேனசு, காரிக்கோள் ஆகியவற்றின் வட்டணைகளைக் கணக்கிட்டார்.யுரேனசின் பொருண்மையின் முதன்மதிப்பைக் கொணர்ந்தார். தற்செயலாக இவர் 1845ல் ஒருமுறையும் 1846ல் இருமுறையும் கண்ணுற்றுள்ளார். எனினும் அதை இவர் ஒரு புதிய கோளாக உய்த்துணரவில்லை. இவர் Handbuch des Erdmagnetismus (1849) எனும்நூலின் ஆசிரியர் ஆவார். 


இலாமாண்ட் அரசு கழகத்தின் அயல்நாட்டு உறுப்பினரும் எடிபர்கு அரசு கழக உறுப்பினரும் ஆவார். இவர் 1867ல் பவாரிய அரசரால் பவாரிய முடித்தகைமை ஆணை வழங்கப்பட்டார். இவர் இதன்வழி வான் எனும் முன்னடையைப் பயன்படுத்தலாம். புவிமின்னோட்டச் சுற்றமைப்பையும் கண்டுபிடித்த யோகான் வான் இலாமாண்ட் ஆகஸ்ட் 6, 1879ல் தனது 73வது அகவையில் ஜெர்மனி மூனிச் நகரில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். மூனிச்சில் உள்ள இவரது சிலை திறந்த கையோடு வடிக்கப்பட்டுள்லது. இக்கையில் மக்கள் சிறு காசுகளை வைக்கின்றனர். டீசைடு களக்குழு 1934ல் ஸ்காட்லாந்தில் இன்வெரேவில் பளிங்கு நினைவு பேழையை நிறுவியது. இச்சிலை சர் ஜேம்சு ஜீன்சு அவர்களால் திறக்கப்பட்டது. இலாமாண்ட் (செவ்வாய்க் குழிப்பள்ளம்), இலாமாண்ட் (நிலாக் குழிப்பள்ளம்) ஆகியவற்றிக்கு இவர் பெயர் இடப்பட்டுள்ளன.

Source By: Wikipedia

தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.

இது போன்ற தகவல் பெற

நன்றி.

இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

No comments:

Post a Comment

லட்சக்கணக்கில் சம்பளம்.. இஸ்ரோ வேலை! டிகிரி போதும்.. எப்படி விண்ணப்பிப்பது?

லட்சக்கணக்கில் சம்பளம்.. இஸ்ரோ வேலை! டிகிரி போதும்.. எப்படி விண்ணப்பிப்பது? இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவில் (ISRO) Indian Space Re...