Monday, December 7, 2020

400 ஆண்டுகளுக்கு பின்னர் வியாழன், சனி ஆகிய இரண்டு கோள்களும் நெருங்கி இணையும் அரிய காட்சி.

400 ஆண்டுகளுக்கு பின்னர் வியாழன், சனி ஆகிய இரண்டு கோள்களும் நெருங்கி இணையும் அரிய காட்சி. 


சூரிய மண்டலத்தில் சுமார் 400 ஆண்டுகளுக்கு பின்னர் வியாழன், சனி ஆகிய இரண்டு கோள்களும் ஒன்றோடு ஒன்று நெருங்கி இணைந்து ஒரே கோள் போன்று காட்சியளிக்கும் அபூர்வ நிகழ்வை வரும் டிசம்பர் மாதம் 20-ஆம் தேதி முதல் மூன்று நாட்கள் வெறும் கண்களால் காணமுடியும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். சூரிய குடும்ப வரிசையில் ஐந்தாவது இடத்தில் இருக்கும் வியாழன் மற்ற கோள்களை விட இரண்டு மடங்கு பெரியது. ஆறாவது இடத்தில் இருக்கும் இரண்டாவது மிகப் பெரிய கோளான சனி, வியாழனை காட்டிலும் பிரகாசமாக அமைந்துள்ளது. இந்நிலையில் வியாழன் சனி ஆகிய இரண்டு கோள்களும் நெருங்கி இணையும் அரிய காட்சி வரும் டிசம்பர் 20, 21, 22 ஆகிய மூன்று நாட்களிலும் வான்வெளியில் தோன்றவுள்ளது. தெற்கு, தென்மேற்கில் வானம் இருட்டியவுடன் பிறை நிலவு தோன்றிய சிறிது நேரத்திற்குப் பின்னர் வியாழன், சனி ஆகிய இரண்டு கோள்களையும் காணமுடியும். 



Oasisnetwork Sun GIF - Oasisnetwork Sun Planets - Discover & Share GIFs

பெரும்பாலும் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு வியாழனும் அதனை அடுத்து சனியும் தோன்றும் இந்த மாதத்திலும் அடுத்த மாதத்திலும் இந்த இரண்டு கோள்களுக்கான இடைவெளி படிப்படியாகக் குறைகிறது. கடந்த 1-ம் தேதியில் 5.1 டிகிரியாக இருந்த இடைவெளி வரும் டிசம்பர் 15-ஆம் தேதிக்குள் 0.7 டிகிரியாக குறைகிறது. இதன் பின்னர் ஒவ்வொறு இரவும் 0.08 டிகிரி  நெருங்கும் வியாழனும், சனியும் வரும்  டிசம்பர் 21-ஆம் தேதி அன்று ஒற்றை நட்சத்திரம் போன்று வானில் தோன்றும். 1623- ஆம் ஆண்டு ஜூலை 16-ம் தேதிக்கு பிறகு தற்போதுதான் அதாவது 398- ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த இரண்டு கோள்களும் ஒன்றோடு ஒன்று இணைந்த நிலையில் ஏறக்குறைய ஒரே கோள் போல காட்சியளிக்கும் அபூர்வ நிகழ்வு நடைபெற உள்ளது. 0.1 டிகிரி மிகக் குறுகிய இடைவெளியில் வியாழன், சனி ஆகிய இருகோள்களும் ஒன்றிணைந்து தோன்றும் அபூர்வ நிகழ்வை எந்த சிறப்பு உபகரணங்களையும் பயன்படுத்தாமல் வெறும் கண்களால் காண முடியும் என வானியல் நிபுணர்கள் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Source By: Dilyhunt.

தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.




No comments:

Post a Comment

சந்திர கிரகணம் 2025: மார்ச் 14 அன்று அரிய 'இரத்த நிலவு'.

சந்திர கிரகணம் 2025: மார்ச் 14 அன்று அரிய 'இரத்த நிலவு'. பூமி சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் வந்து , சந்திரனின் மேற்பரப்ப...