50 வருட பாராளுமன்ற உறுப்பினர், இந்தியாவின் பிரதமராக பதவி வகித்த அடல் பிகாரி வாஜ்பாய் பிறந்த தினம் இன்று (டிசம்பர் 25, 1924).
அடல் பிகாரி வாஜ்பாய் (Atal Bihari Vajpayee) டிசம்பர் 25, 1924ல் கிருஷ்ணா தேவி மற்றும் கிருஷ்ணா பிஹாரி வாஜ்பாயிக்கு குவாலியரில் பிறந்தார். அவரது தாத்தா, பண்டிட் ஷியாம் லால் வாஜ்பாய், உத்தரப்பிரதேசத்தின் பாதேஷ்வர் என்ற அவரது பூர்வீக கிராமத்திலிருந்து குவாலியருக்கு குடியேறினார். அவரது தந்தை, கிருஷ்ணா பிஹாரி வாஜ்பாயி, தனது சொந்த ஊரில் ஒரு கவிஞரும் பள்ளிக்கூட ஆசிரியருமாவார். வாஜ்பாயி சரஸ்வதி ஷிஷு மந்திர், கோர்கி, பரா, குவாலியரில் தனது ஆரம்ப பள்ளி படிப்பை முடித்தார். வாஜ்பாய் குவாலியரின் விக்டோரியா கல்லூரியில் (லக்ஷ்மி பாய் கல்லூரி) சேர்ந்தார். மேலும் இந்தி, ஆங்கிலம் மற்றும் சமஸ்கிருத மொழிகளில் தனி தகுதியுடன் பட்டம் பெற்றார். கான்பூரில் உள்ள டி.ஏ.ஏ. கல்லூரியில் எம்.ஏ., அரசியல் அறிவியல் துறையில் முதல் வகுப்பு பட்டம் பெற்றார். ஆர்வ சமாஜின் இளைஞர் பிரிவான ஆர்யா குமாரின் ஆர்யா குமார் சபாவுடன் 1944ல் பொதுச் செயலாளராகப் பணியாற்றினார். 1939ல் ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கம் (ஆர்.எஸ்.எஸ்) ஒரு ஸ்வேயெம்சேவாவில் இணைந்தார்.
பாபா சாஹேப்
ஆப்டி அவர்கள் மீதான ஈடுபாடு காரணமாக 1940-44ல்
ஆர்.எஸ்.எஸ் அதிகாரிகளின் பயிற்சி முகாமுக்குச் சென்று 1947
ஆம் ஆண்டில் ஒரு முழுநேர ஊழியர் ஆனார். பிரிவினை கலவரம் காரணமாக சட்ட படிப்பினை
அவரால் தொடர இயலவில்லை. உத்தரபிரதேசத்திற்கு ஒரு விஸ்டாராக (probationary
pracharak) அனுப்பப்பட்டார். விரைவில் டீன்யல் உபாடியாயா,
ராஷ்டிரதர்மம் (இந்தி மாதத்தில்), பஞ்சஜானியா
(ஒரு இந்தி வார இதழ்) மற்றும் நாவல்கள் ஸ்வாதேஷ் மற்றும் வீர் அர்ஜூன் ஆகியோரின்
பத்திரிகைகளில் பணிபுரியத் தொடங்கினார். இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை.
இவருடைய முழு வாழ்வும் இந்த இந்திய தேசத்திற்கு அர்ப்பணித்தார். 1996ம் ஆண்டு சில காலமும், 1998ல் இருந்து 2004 வரையிலும் இந்தியாவின் பிரதமராக பதவி
வகித்தவர். இவர் இரண்டாவது முறையாகப் பிரதமராகப் தேர்ந்தெடுக்கப்பட்ட பின் நாடு
பல கோணங்களில் முன்னேறியது. குறிப்பாகத் தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் சாலைப்
போக்குவரத்துத் துறைகள் போன்றவையாகும்.
இந்தியா இப்போது அணு ஆயுதங்கள் கொண்ட நாடு. நம்மிடம் அணு ஆயுதங்களை வைத்துக்கொள்வதற்கான தகுதி இருக்கிறது. நாம் அதை ஒரு போதும் ஆத்திரத்திற்காக பயன்படுத்த மாட்டோம் என்று கூறியவர் வாஜ்பாய். போக்ரான் அணு குண்டு சோதனைக்கு பின்பு வாஜ்பாய் சொன்ன வார்த்தைகள் இவை. போக்ரான் அணு குண்டு சோதனைக்கு பின்பு, மேற்கத்திய நாடுகள் வாஜ்பாய்க்கு கண்டனங்கள் தெரிவித்தனர். இந்தியா மீது பொருளாதார தடைகளையும் விதித்தது. ஆனால் அதையும் மீறி இந்தியாவை 1999 இல் அணு ஆயுதங்கள் கொண்ட நாடாக உருவாக்கியவர் வாஜ்பாய். ராஜீவ் காந்தி இறந்த பிறகு இந்தியாவின் தொலை தொடர்பு வளர்ச்சியானது 0.6 % இல் இருந்து 2.8% த்திற்கு உயர்ந்தது. இதற்கு பத்தாண்டுகள் எடுத்துக் கொண்டது இந்தியா. ஆனால், வாஜ்பாய் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட புதிய தொலை தொடர்பு கொள்கை (NTP - New Telecom Policy) இந்தியாவின் தொலை தொடர்பு வளர்ச்சியை 3% இல் (1999) இருந்து 70% த்திற்கு (2012) உயர்த்தியது. இந்தச் சாதனையை ஒரு தொலைத் தொடர்பு துறையில் ஒரு புரட்சி என மாற்றுக் கட்சியினரும் பாராட்டினர்.
வாஜ்பாய் பிரதமராக இருந்த காலக்கட்டத்தில்தான் "ரைட் டூ எடுகேஷன் இன் இந்தியா" என்ற திட்டத்தை சர்வ சிக்ஷா அபியான் என்ற பெயரில் கொண்டு வந்தார். இது அனைவருக்கும் கல்வி என்ற பெயரில் இந்தியா முழுக்க மிகவும் பிரபலமானது. இதனால் பலர் கல்வி வாய்ப்பு பெற்றனர். கல்விதுறையில் ஏற்பட்ட மிக முக்கியமான மாற்றமாக இன்று வரை பார்க்கப்படுகிறது. வாஜ்பாய் ஆட்சியின் கீழ் தான் கார்கில் போர் மோதலை எதிர்கொண்டது இந்தியா. அதே போல 1999, 2000 ஆம் ஆண்டுகளில் இரண்டு பெரும் சூறாவளி காற்று தாக்குதல், 2001ல் பெரும் பூகம்பம். 2002-2003ல் வறட்சி மற்றும் எண்ணெய் நெருக்கடி, இரண்டாம் கல்ஃப் போர் என பல தாக்கங்கள்.. ஆனால், ஒருபோதிலும் இவை அனைத்தும் இந்தியாவின் ஜி.டி.பி'யில் சரிவு ஏற்படாமல் பார்த்துக் கொண்டார் வாஜ்பாய். 2000 ஆம் ஆண்டு பில் கிளிண்டன் இந்தியாவிற்கு வருகை புரிந்தார். ஜிம்மி கார்டர்க்கு பிறகு இந்தியாவுக்கு வருகை தந்த முதல் அமெரிக்க அதிபர் கிளிண்டன். இந்த சந்திப்பின் போது இந்தியா - அமெரிக்கா மத்தியிலான உறவு வலுவடைந்தது. டெல்லி - லாகூர் இடையே முதல் மக்கள் போக்குவரத்து துவக்கி முதல் ஆளாக பயணித்தார் வாஜ்பாய்.
பிராந்திய
மோதல்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து சீனாவுடன் வணிக கூட்டு அமைத்தார். டெல்லியில்
மெட்ரோ ரயில் திட்டத்துக்கு முதலில் ஒப்புதல் வழங்கியவர் வாஜ்பாய். நிலாவுக்கு
2008 இல் இந்தியா விண்கலம் அனுப்பவிருக்கிறது என்று பெருமையுடன் கூறியவர்
வாஜ்பாய். அதன் பின்புதான் இஸ்ரோ சந்திராயன் திட்டத்தை உருவாக்கியது. 1998ல்
இந்தியாவில் நேஷனல் ஹைவே டெவலப்மென்ட் பிராஜக்ட் (தங்கநாற்கர) என்ற பெயரில்
உலகத்தரமான தேசிய நெடுஞ்சாலைகளை உருவாக்கியவர் வாஜ்பாய். இந்த திட்டத்தின் கீழ்
49,260 கிலோமீட்டர் தொலைவிற்கு தேசிய நெடுஞ்சாலைகள் சர்வதேச தரத்தில்
அமைக்கப்பட்டன. பழங்குடி, சமூக நலன், சமூக நீதி போன்றவைக்கு அமைச்சகம் மற்றும் வடகிழக்கு பகுதிக்கு தனி
துறை என்று பல புதிய விஷயங்களை புகுத்தியவர் வாஜ்பாய்.
இந்தியாவின் உயரிய பாரத் ரத்னா விருதினை, மார்ச் 27, 2015ல் அன்று இந்தியக் குடியரசுத் தலைவரும் மற்றும் இந்தியப் பிரதமரும், வாஜ்பாயின் இல்லம் சென்று வழங்கி கௌரவித்தனர். 50 வருட பாராளுமன்ற உறுப்பினரான இவர் மக்களவைக்கு 9 முறையும் மாநிலங்களவைக்கு 2 முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 4 முறை வெவ்வேறு மாநிலங்களில் (உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், டெல்லி) இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே உறுப்பினர் ஆவார். மொரார்ஜி தேசாய் அமைச்சரவையில், வெளியுறவுத் துறை அமைச்சராகவும் இவர் பணியாற்றியுள்ளார். இந்தியாவின் பிரதமராக பதவி வகித்த அடல் பிகாரி வாஜ்பாய் வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமான ஆகஸ்ட் 16, 2018ல்20, 1727ல் தனது 93வது அகவையில் டெல்லியில் இவ்வுலகை விட்டு மறைந்தார். அவரது பூத உடலுக்கு, இந்திய அரசு இராணுவ மரியாதையுடன், ராஜ்காட் அருகே உள்ள தேசிய நினைவிடத்தில் (இராஷ்டிரிய ஸ்மிரிதி ஸ்தல்) வைத்து, அவரது வளர்ப்பு மகள் நமிதா பட்டாச்சாரியா கொள்ளி வைத்தார்.
Source By: Wikipedia, Puthiyathalaimurai.
தகவல்: இரமேஷ்,
இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு
கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
இது போன்ற தகவல் பெற
நன்றி.
இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், p.ramesh704@gmail.com மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப் அனுப்பிட வேண்டுகிறோம்.
மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், p.ramesh704@gmail.com மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப் அனுப்பிட வேண்டுகிறோம்.
மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.
No comments:
Post a Comment