Monday, December 7, 2020

செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன்-ல் நடைபெறும் - உயர்கல்வித்துறை-காணொளி.

 செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன்-ல் நடைபெறும் - உயர்கல்வித்துறை-காணொளி.

அனைத்து பல்கலைகளிலும் நடப்பு செமஸ்டர் தேர்வுகள் அனைத்தும் ஆன்லைனிலேயே நடைபெறும் என உயர்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளன. தமிழகத்தில் இறுதியாண்டு மாணவர்களுக்கு இன்று முதல் கல்லூரிகள் திறக்கப்பட்டது. அதுவும் விருப்பமுள்ளவர்கள் மட்டும் கல்லூரிக்கு வரலாம் என்றும் மற்றவர்கள் ஆன்லைனில் வகுப்புகளில் பங்கேற்கலா என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில், கொரோனா நெறிமுறைகளுடன் வாரத்தில் 6 நாட்கள் கல்லூரிகள் செயல்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, முகக்கவசம் அணிந்தபடியே 50% மாணவர்களை மட்டும் அனுமதிக்க வேண்டும். சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ற்போது, ஆன்லைனிலேயே வகுப்புகள் நடைபெற்று நிலையில், செமஸ்டர் தேர்வுகள் குறித்து கேள்விகளும், குழப்பங்களும் எழுந்து. இந்நிலையில், தேர்வுகள் அனைத்தையும் ஆன்லைன் மூலமாகவே நடத்தும் படி அனைத்து பல்கலைக்கழகங்கள திட்டமிட்டன. இது குறித்து, உயரகல்வித்துறை அதிகாரிகள், அனைத்து பல்கலைகளிலும் நடப்பு செமஸ்டர் தேர்வுகள் அனைத்தும் ஆன்லைனிலேயே நடைபெறும் என உயர்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளன.

இதற்கிடையில், பொறியியல் மாணவர்களுக்கான நடப்பு செமஸ்டர் தேர்வுகள் தள்ளிவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அந்த வகையில், இறுதியாண்டு மாணவர்களுக்கான தேர்வுகள் டிசம்பர் 14ஆம் தேதி முதல் தொடங்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

                                          

No comments:

Post a Comment

முனைவர் படிப்பு - UGC புதிய அறிவிப்பு.

முனைவர் படிப்பு - UGC புதிய அறிவிப்பு. இது போன்ற தகவல் பெற https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc இந்த Telegram  குழுவில் இணையவும். https://...