Friday, December 18, 2020

உலகின் முதல் பண்பலையைக் (F.M) வானொலி ஒலிபரப்பு கண்டுபிடித்த எட்வின் ஆர்ம்ஸ்ட்ராங் பிறந்த தினம் இன்று (டிசம்பர் 18, 1890).

உலகின் முதல் பண்பலையைக் (F.M) வானொலி ஒலிபரப்பு கண்டுபிடித்த எட்வின் ஆர்ம்ஸ்ட்ராங் பிறந்த தினம் இன்று (டிசம்பர் 18, 1890). 

எட்வின் ஹோவர்ட் ஆர்ம்ஸ்ட்ராங் (Edwin Howard Armstrong) (டிசம்பர் 18, 1890ல் அமெரிக்காவின் நியூயார்க், செல்சியா என்ற இடத்தில் பிறந்தார். இவரின் அப்பா பெயர் ஜான், அம்மாவின் பெயர் எமிலி ஆகும். இவரின் அப்பா ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி பிரஸ்ஸில் வேலை செய்தார். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் தீட்டா ஜி பற்றிய பாடத்தை எடுத்துப்படித்தார். பின்னர் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகச் சேர்ந்தார். அவர் படித்த கொலம்பியா பல்கலைக்கழக்கத்திலேயே முதலில் பேராசிரியராகப் பணிபுரிந்தர். அதன் பின்பு முதல் உலகப்போரின் போது சமிக்ஞை அதிகாரியாக சேவை செய்தார். எப்.எம் வானொலியைக் கண்டுபிடித்த இவர் 1935ஆம் ஆண்டு நியூஜெர்ஸி மாநிலத்தில் ஒலிபரப்பு செய்தார். அதன் பின்னர் இவரின் தயாரிப்பைப் பல தனியார் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொண்டன. ஆனால் அதற்கான உரிமைத்தொகையைத் தராமல் அலைக்கழித்தார்கள். இதனால் நீதிமன்றம் சென்றார். நிம்மதியை இழந்தார். நீதிமன்றத்தில் இவருக்குச் சாதகமாகவே தீர்ப்பு வந்தது. ஆனாலும் எப்.எம் என்பது பற்றி யாருக்கும் புரியவில்லை என்று தீர்ப்பில் கூறப்பட்டது. 



வானொலி பயன்பாட்டின் வரலாற்றில் இவர் ஒலி பண்பேற்றம் மூலம் மறக்க முடியாதவர் ஆவார். இவர் உலகின் முதல் எப்.எம் ஒலிபரப்பிற்காக காப்புரிமை பெற்றார். இவரின் மறுமீட்டாக்க மின்சுற்றுக்காக 1941ஆம் ஆண்டு காப்புரிமை கிடைத்தது. அதன் பின் இரண்டாவது முறை மேம்பட்ட மறுமீட்டாக்க மின்சுற்றுக்காக 1933ஆம் ஆண்டும் காப்புரிமை பெற்றார். 1918ஆம் ஆண்டில் சூப்பர்ஹெடரோடைன்னை (Superheterodyne receiver) மேம்படுத்தினார். இவர் ஒரு வானொலி ஒலிபரப்பில் நவீன அதிர்வெண் பண்பலைபண்பேற்றம் (FM) கொண்டுவந்து புரட்சியை ஏற்படுத்தினார். நிதி நெருக்கடி அதிகமானதாலும், மன உளைச்சல் காரணமாகவும் தன் வேலைகளில் நெருக்கடி நிலைக்குத் தள்ளப்பட்டார். அதோடு மனைவி மேரின் மேக்லின் அவரின் தங்கையைப் பார்க்க வேறு குடியிருப்பிற்குச் சென்று விட்டார். உலகின் முதல் பண்பலையைக் (F.M) வானொலி ஒலிபரப்பு கண்டுபிடித்த எட்வின் ஆர்ம்ஸ்ட்ராங் ஜனவரி 31,1954ல் தனது 63வது அகவையில் நியூயார்க்கில் மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்ட்டார்.

Source By: Wikipedia

தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.

இது போன்ற தகவல் பெற

நன்றி.

இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

No comments:

Post a Comment

நிலவில் சந்திரயான் கண்டறிந்த ரகசியம்.. உலகமே திரும்பிப்பார்த்த தருணம்.

நிலவில் சந்திரயான் கண்டறிந்த ரகசியம்.. உலகமே திரும்பிப்பார்த்த தருணம். ஒரு நாளைக்கு 16 முறை சூரிய உதயத்தையும் மறைவையும் பார்க்கும் விண்வெளி ...