Monday, January 11, 2021

தேசிய இளைஞர் தினம்: 150 பேர் ரத்த தானம்.

தேசிய இளைஞர் தினம்: 150 பேர் ரத்த தானம்.

விவேகானந்தரின் பிறந்தநாளை முன்னிட்டு, சேலம் மாவட்டம்  வீரபாண்டியில் ரத்ததான முகாம் நடந்தது.

நேரு யுவகேந்திராவுடன், விவேகானந்தர் இளைஞர் சங்கம், (தேசிய இளைஞர் தினம்) விவேகானந்தர் பிறந்த நாளை முன்னிட்டு, நேற்று புத்தூர்  அக்ரஹாரம் வள்ளலார் திருமண மண்டபத்தில் ரத்ததான முகாம் நடத்தப்பட்டதது.

சேலம் ஏ.டி.எஸ்.பி V.அன்பு முகாமை துவக்கி வைத்து  எதிர் காலத்தில் இளைஞர்கள் சமுதாயத்தில்  சிறந்து விளங்க வழிகாட்டினார். 


திருச்சி நேரு நினைவு  கல்லூரி பேராசிரியர் P. ரமேஷ் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு சுவாமி விவேகானந்தர் மற்றும் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் ஐயா அவர்களை முன்னுதாரணமாக வைத்து இளைஞர்கள் கல்வியிலும் சேவையிலும் சிறப்பாக செயல்பட சிறப்பு சொற்பொழிவு ஆற்றினார்.  

வீரபாண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் R.ரேவதி தலைமை வகித்தார் . சிவராம் ஜி ரத்த வங்கி , மோகன் அவர்கள் ரத்த தானம் செய்வது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். 150க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்துகொண்டு ஆர்வமுடன்  ரத்த தானம் செய்தனர்.

வீரபாண்டி ஒன்றியம், புத்தூர் அக்ரஹாரம் ஊராட்சிமன்ற தலைவர் K. குமார், பெருமாம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் P.மாரியம்மாள் பழனிசாமி ,S. செந்தில் முருகன் , கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் ,  S.கதிர்வேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஏற்பாடுகளை புத்தூர் அக்ரஹாரம் மற்றும் பெருமாம்பட்டி  சேர்ந்த சுவாமி விவேகானந்தர் இளைஞர் சங்க உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

No comments:

Post a Comment

CSIR-NET PHYSICS BOOKS

  CSIR-NET PHYSICS BOOKS NOW IT IS EASY TO PREPARE FOR CSIR-NET, GATE, JEST, TIFR ,IIT-JAM, SET, Assistant Professor Exam The following book...