Friday, January 1, 2021

✍️கவிதை✍️ஆங்கில புத்தாண்டு✍️இரஞ்சிதா தியாகராஜன் and Gihan.

 ✍️கவிதை✍️ஆங்கில புத்தாண்டு✍️இரஞ்சிதா தியாகராஜன் and Gihan.



  

தினம்தோறும் இரவில் விழிக்கிறேன் உன் அழகை இரசிக்கையில்... 


தித்திக்கும் நிலவே!!! நீயோ தனிமையில்... 


பூவே!!! உன் மெல்லிய சத்தம் என் காதோரம்... 


உன் இதழ் விரிக்கும்....பட்டாம்பூச்சி, வண்டு உன்னில்  தேன் சுவைக்கும் அந்த நேரம்...


இன்று என் இரவில் சிறிய வித்தியாசம்... 


நிலவே!!! வாணவேடிக்கைகள் உன்னைத் தொட வந்து திடிரென காணாமல் கண்ணாமூச்சி ஆட... 


சிறுவர்கள், பெரியவர்கள் அனைவரும் தெருக்களில் நடனம் ஆட... 


"ஆ" க்கள் நடப்பது புரியாமல் வாயில் அசை போட... 


2022 ஆம் ஆண்டு வருத்தத்தில் வாட... 


இனிதாய் பிறந்தாள் ஆங்கில புத்தாண்டு தேவதை...




 

💐💐💐இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

✍️கவிதை ✍️: இரஞ்சிதா தியாகராஜன், இயற்பியல், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.

Thank you 2022🍂🍁

End of 2022

வாழ்க்கை முழுதும் சொல்லி தராத பாடங்களை அனுபவமாய் கற்று தந்தாய்  ... 

ஆமாம் எனக்கும் 2022 இல்  இன்பத்தை விட துன்பங்களும்!!ஆச்சரியங்களும்!!! அதிர்ச்சிகளும்!!! 

அதிகம் தான்....

ஆனால்....

உன்னால் பல வேடிக்கை மனிதரை அறிந்தேன்....

நிலையில்லாத அனைத்தையும் அறிந்தேன்....

எதையெல்லாம் என் வாழ்வின் பொக்கிஷம் என்று நினைத்தேனோ!!!

அத்தனையும் இழந்தேன்... 

நீ கற்று தந்த பாடங்கள் !!!

என் பட்ட படிப்பிலும் கூட இல்லை....!!

உன்னால் உண்மையான உறவுகள் அனைத்தையும் அறிந்தேன்....

உண்மையாய் நடிக்கும் உறவுகளையும் அறிந்தேன் ....

கவலைகளை கலைத்தெரிய கற்று  கொண்டேன் ....

சுற்றி உள்ள அத்தனையும் ஆடம்பரம்!!! 

அத்தனையும் மாயைகள்!!! எல்லாம் அறிந்து கொண்டேன்....

என் வாழ்வில் கண்ட சிறந்த அனுபவ ஆசான் நீ.... 

என்னை எனக்கு அறிய வைத்த உனக்கு நன்றி....

மிக்க நன்றி....

Mr. Gihan, BBA -நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.



ஆண்டே! 
புத்தாண்டே, 
இனிமை நீ கொண்டு வா;
ஆலமர இலை போலே பசுமை துளிர்க்க வா 

இயற்கை வளம் காக்க இதயம் நீ கொண்டு வா;
இளமை களம் பார்க்க இமயம் பனி போர்த்தி வா 

பூமியின் கனிமங்களை அறிவால் நீ கொண்டு வா; பூக்களின் வாசம் அது காற்றில் வீசிட அசைவைத்தா 

கனி மரம் காத்திடும் பறவையின் சிறகுகள் நீ கொண்டு வா; கதைகளை சொல்லிடும் பாட்டின்  முதிர்வை தா 

அறிவியல் உண்மைகள் ஆய்ந்து அறிந்திடும் செயலை நீ கொண்டு வா; அணுக்களின் பயன்களை அளந்து சொல்லிடும் அறிவை தா 

மொத்த மனிதரும் கூடி வாழ்ந்திட அன்பை நீ கொண்டு வா; சத்தமின்றியே நன்மை செய்திடும் மனித பண்பை தா 

கணித அறிவியல் இலக்கண இலக்கியம் பரிசாய் நீ கொண்டு வா; கற்கண்ட விட அதுவே இனிக்கும் எண்ணத்தை தா 

சுற்றுச்சூழல் கெட்டுப்போகா இயற்கை வாழ்வை நீ கொண்டு வா; சுத்தம் சுகாதாரம் காத்து பழகும்  பொது இடத்தை தா

விடியும் வாழ்க்கை அனைவருக்கும் கிடைக்க வழியை நீ கொண்டு வா; விதைப்போம் கதைகளை நம்பிக்கை விதைகளாய் விடியலை தா 

சுவாசக் காற்றை தூய்மை செய்யும் சுதந்திரம் நீ கொண்டு வா; சொர்க்கம் எதுவும் இல்லை என்னும் சுத்த பூமியை தா

நமது வாழ்வின்
வெற்றி பூக்களை ஏந்தி '2023 புத்தாண்டு' வருகிறது புன்னகையோடு வரவேற்போம்...

நல் அனுபவமும் வளர்ச்சியும்
கொடுத்த 2022 ஆம் ஆண்டிற்கு விடைகொடுப்போம்..

முயற்சியும் உழைப்பும்
மூச்சாய் சுவாசிப்போம்..
வளமும் வளர்ச்சியும் 
நமக்கானதாக்குவோம்..

 அனைவருக்கும் 'இனிய ஆங்கில புத்தாண்டு' நல்வாழ்த்துக்கள்.. 💐🤝🙏

- என்றென்றும் 
மக்கள் அறிவியல் சமூகப் பணியில்..

மு. மணிகண்டன்,
மாவட்டச் செயலாளர்,
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்,
திருச்சிராப்பள்ளி மாவட்டம்.



இன்று ஒரே நாள் தான்  இருக்கிறது இந்த வருடம் முடிய .......

என்னை வெறுத்தவர்களுக்கு நன்றி நான் உங்களால் அதிக மனபலம் அடைந்தேன் ..

🌴என்னை விரும்பியவர்களுக்கு நன்றி நான் உங்களால் மகிழ்ச்சி அடைந்தேன் ..👍👍

எனக்காக வருத்தப்பட்டவர்களுக்கு நன்றி என் மேல் உள்ள அக்கறையை அறிந்தேன் ..

என்னோடு இணைந்தவர்களுக்கு நன்றி என் பயணம் உங்களோடு தொடரும்..

🌴🌸என்னை விட்டு பிரிந்தவர்களுக்கு நன்றி நான் உங்கள் சுயரூபத்தை தெரிந்து கொண்டதற்க்கு ..

🌹என்னோடு எனக்காக இணையவிருக்கும் புது நட்புகளுக்கும் நன்றி பயணம் சிறக்கும்...


.......💥💬   பிறக்கும் இனிய புத்தாண்டு,

நம் அனைவரின் வாழ்விலும் அன்பையும் , மகிழ்ச்சியையும்

நோய் இல்லாத வாழ்வையும் குறைவில்லாத செல்வத்தையும்

கொடுக்கும் ஒரு புதிய புத்தாண்டாக மலர வாழ்த்துக்கள்.

🙏 நன்றி


No comments:

Post a Comment

ஓநாய் சூப்பர்மூன் Wolf Supermoon 2026 #supermoon

ஓநாய் சூப்பர்மூன் Wolf Supermoon 2026 #supermoon இது போன்ற தகவல் பெற https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc இந்த Telegram  குழுவில் இணையவும...