தொடர்ந்து பேசிய அவர், ’’உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு என்றால் அது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு. இந்த மண்ணில் பிறந்த வீரர்கள் அனைவரும் சீறிவரும் காளைகளை பக்குவத்தோடு அடக்க இங்கு வந்துள்ளனர். நாட்டு மக்கள் அனைவருமே இந்த நிகழ்ச்சியை தொலைக்காட்சிகளில் பார்த்துக்கொண்டுள்ளனர். நமது பாரம்பரியத்தை, கலாசாரத்தை காக்கக்கூடிய இந்த ஜல்லிக்கட்டு விளையாட்டு அதிமுக அரசுதான் நிலைநிறுத்துகிறது என்பதை இந்நேரத்தில் குறிப்பிட விரும்புகிறேன்’’ என்று பேசினார்.
மேலும் காளைகளை அடக்க வந்துள்ள இளைஞர்களுக்கும், அவற்றை வளர்த்த விவசாயிகளுக்கும், வந்துள்ள அனைவருக்கும் நன்றி தெரிவித்து தனது உரையை முடித்தார் முதல்வர் பழனிசாமி.
வாடிவாசலில் இருபுறத்திலும் 300 மீட்டர் நீளத்திற்கு 8 அடி உயரத்தில் பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது. ஒரு சுற்றுக்கு 75 வீரர்கள் வீதம் போட்டியில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். சிறந்த காளை மற்றும் சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு கார்கள் பரிசாக வழங்கப்பட உள்ளது. கார், இருசக்கர வாகனம், தங்க காசுகள், சைக்கிள், பீரோ, கட்டில், அண்டா, டிவி, பிரிட்ஜ், கிரைண்டர் உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்படுகின்றன. 20 ஆயிரம் பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்கும்வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதால் மதுரை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்த காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பார்வையாளர்களுக்கு வெப்ப பரிசோதனை செய்தபிறகு தனிமனித இடைவெளியுடன் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். 150 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் இங்கு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். காயம்பட்டவர்களை அழைத்து செல்ல பத்து 108 வாகனங்களும் தயார் நிலையில் உள்ளன. மேலும் 5 தீயணைப்பு வாகனங்களுடன் 200-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்களும் தயார் நிலையில் உள்ளனர். இந்த ஜல்லிக்கட்டுப் போட்டி மாலை 4 மணிவரை நடைபெறும்.
No comments:
Post a Comment