Wednesday, February 17, 2021

தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரி கலெக்டரிடம் மனு

தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரி கலெக்டரிடம் மனு.

தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி நர்சரி பிரைமரி பள்ளிகள் நலச்சங்க நிர்வாகிகள் தேனி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.


இச் சங்க மாவட்ட தலைவர் தேவகுமார், மாவட்ட செயலாளர் முருகன் மனுவில், 'கொரோனா பாதிப்பு குறைந்து 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை செயல்படுத்தப்படுகின்றன. அடுத்த கட்டமாக முதல் வகுப்பு முதல் 8 ம் வகுப்புவரையும், அடுத்து எல்.கே.ஜி,. யு.கே.ஜி. வகுப்புகளை திறக்க அரசு வழிகாட்டுதல்களை வெளியிட வேண்டும்.


கொரோனா பிரச்னையால் தேனி மாவட்டத்தில் 80 தனியார் பள்ளிகளில் 10,000 ஆசிரியர்களுக்கு 2020ஜூன் முதல் சம்பளம் வழங்க முடியவில்லை. அவர்கள் வாழ்வாதாரம் பாதித்து பலர் நூறுநாள் வேலைக்கு செல்கின்றனர். தனியார் சுய நிதி பள்ளி ஆசிரியர்களின் துயர் துடைக்க அரசு நிவாரணம் வழங்கிட வேண்டும்,' என கோரினர்.

தனியார் பள்ளிகளில் பணி புரியும்ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தினை கருத்தில் கொண்டு, 10 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க கோரி, தனியார் பள்ளி ஆசிரியர்கள் மவுன போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்டம் போளுரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் சமூக விலகலை கடைபிடித்து கையில் பதாகைகளை போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களிடம் இருந்து கல்வி கட்டணத்தினை வசூலிக்க தமிழக அரசு அனுமதியளிக்க கோரியும், தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் நிவாரணமாக வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இது போன்ற தகவல் பெற

https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc

இந்த Telegram  குழுவில் இணையவும்.

நன்றி.

No comments:

Post a Comment

விண்வெளியில் முளைத்த காராமணி விதை இஸ்ரோ சாதனை

விண்வெளியில் முளைத்த காராமணி விதை இஸ்ரோ சாதனை. நாட்டின் சொந்த விண்வெளி மையம் அமைக்கும் முயற்சியின் ஒருபகுதியாக நுண் புவி ஈர்ப்ப...