Monday, March 15, 2021

திருச்சியில் கல்லூரி மாணவர் இருவருக்கு கொரோனா - கொரோனா 2ம் அலை வாய்ப்பு.

திருச்சியில் கல்லூரி மாணவர் இருவருக்கு கொரோனா - கொரோனா 2ம் அலை வாய்ப்பு.

திருச்சியில் தனியார் கல்லூரி மாணவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார். தமிழகத்தில் கொரோனா வைரசின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. இதனை தொடர்ந்து ஊரடங்கு தளர்த்தப்பட்டு இயல்பு நிலை திரும்பியது. பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகளும் நடைபெற்று வருகிறது.

கடந்த சில நாட்களாக கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் கொரோனா வைரஸ் மீண்டும் வேகமாக பரவி வருகிறது. இதனால் தமிழகத்திலும் பொதுமக்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என்பதை தீவிரமாக வலியுறுத்தி வருகிறார்கள்.


இந்தநிலையில் திருச்சி-திண்டுக்கல் சாலையில் உள்ள தேசிய கல்லூரியில், திருச்சி அரியமங்கலம் காட்டூர் பகுதியை சேர்ந்த 21 வயதுடைய வாலிபர் ஒருவர் இயற்பியல் இரண்டாமாண்டு படித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளிக்கு சென்ற அந்த மாணவர் உடல் சோர்வுடன் இருந்தார். அவருக்கு சளியும் இருந்துள்ளது. இதனால் அந்த மாணவர் திருச்சி அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை மேற்கொண்டார்.

அதில், அவருக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டது. உடனே இதுபற்றி கல்லூரி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மாணவரை கல்லூரிக்கு வர வேண்டாம் என்று கூறியதோடு, உரிய சிகிச்சை எடுத்து கொள்ளும்படி கல்லூரி தரப்பில் இருந்து அறிவுறுத்தப்பட்டது. மேலும், அந்த மாணவரோடு வகுப்பில் ஒன்றாக அமர்ந்து இருந்த மற்ற மாணவர்களும் உரிய பரிசோதனை செய்து கொள்ள கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது போன்ற தகவல் பெற

https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc

இந்த Telegram  குழுவில் இணையவும்.

நன்றி.



No comments:

Post a Comment

த. பாதர் பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வானவியல் கண்காட்சி.

த. பாதர் பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வானவியல் கண்காட்சி. இன்று உப்பிலியபுரம் ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி த.பாதர்பே...