Monday, March 15, 2021

புத்தனாம்பட்டி, நேரு நினைவுக் கல்லூரியில் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் - இணையவழிக் கருத்தரங்கம்.

புத்தனாம்பட்டி, நேரு நினைவுக் கல்லூரியில் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் - இணையவழிக் கருத்தரங்கம்.



திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், புத்தனாம்பட்டி, நேரு நினைவுக் கல்லூரி, வணிகவியல் துறையின் சார்பாக நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் என்ற தலைப்பில் இணையவழிக் கருத்தரங்கம் 13.03.2021 மாலை 06.00 மணியளவில் நடைபெற்றது. கருத்தரங்கில் முதலாவதாக வணிகவியல் துறை இயக்குநர் முனைவர் இரா. மதிவாணன் அனைவரையும் வரவேற்றதுடன் சிறப்பு விருந்தினரையும் அறிமுகம் செய்துவைத்தார். கல்லூரி
முதல்வர், முனைவர் அ.ரா. பொன்பெரியசாமி தலைமைத் தாங்கி பேசியபோது, இன்றையச் சூழலில் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் என்னென்ன வழிகளில் பொதுமக்களுக்கும் நுகர்வோர்களுக்கும் பாதுகாப்பாக உள்ளது என்பதை தலைமையுரையாற்றினார். மேலும், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு எந்த அளவுக்குத் தேவைப்படுகின்றது என்பதையும் வலியுறுத்திக் கூறினார். 


அதனைத் தொடர்ந்து
கல்லூரியின் தலைவர் பொறியாளர், பொன். பாலசுப்ரமணியன் அவர்கள்  வாழ்த்துரை வழங்கினார். அப்போது ஒரு நுகர்வோர் ஒருபொருளை வாங்குவதற்கு முன்பாக அப்பொருள் தொடர்பான எந்தெந்த செய்திகளை முக்கியமாகக் கருத்தில்கொள்ள வேண்டுமென்பதையும், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் அவசியம் பற்றியும் தெளிவாகக் கூறினார். அதனைத் தொடர்ந்து கல்லூரிச் செயலர், பொன். ரவிச்சந்திரன் அவர்கள், வாழ்த்துரை வழங்கும்போது, இதுபோன்ற பயனுள்ள பல்வேறு இணையவழிக் கருத்தரங்குகளை ஏற்பாடு செய்யவேண்டுமென்று கூறினார். இதுபோன்ற நிகழ்ச்சியானது மாணவர்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறினார். கல்லூரி ஒருங்கிணைப்பாளர் முனைவர் எம். மீனாட்சிசுந்தரம் கலந்துகொண்டு சிறப்பித்தார்.



இந்நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மன்றத்தின் செயலாளர் பேராசிரியர் சி. புஷ்பவனம் சிறப்புரையாற்றினார். அப்போது, நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் எதற்காக ஆரம்பிக்கப்பட்டது என்பதைப் பற்றியும் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019 - ல் உள்ள பல்வேறு சிறப்பம்சங்களைப் பற்றி மாணவ, மாணவிகள் மத்தியில் எடுத்துரைத்தார். ஒரு நுகர்வோர் இரண்டு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம், வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்கும்போது நுகர்வோர்கள் என்னென்ன முக்கிய அம்சங்களைக் கடைபிடிக்க வேண்டும். அவ்வாறு பொருட்கள் வாங்கும்போது அப்பொருட்களிலிருந்து என்னென்ன நுகர்வோர்க்குரிய பயன்பாடு கிடைக்காத பட்சத்தில் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் மூலமாக எப்படி அப்பொருட்களுக்கான இழப்புத் தொகையை பெறமுடியும் என்று மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். அது மட்டுமல்லாமல் தகவல் அறியும் உரிமைச்சட்டம், கல்விக் கற்கும் உரிமைச் சட்டம் போன்ற மாணவர்களுக்குத் தேவையான முக்கியச் செய்திகளையும் தன் சிறப்புரையின் போது குறிப்பிட்டார். மேலும், மாணர்வர்கள், கேட்ட பல்வேறு சந்தேகங்களுக்கும் மாணவர்களுக்குப் புரியும் வண்ணத்தில் எடுத்துரைத்தார். 



இந்த நிகழ்வில் 250க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வணிகவியல் துறை இயக்குநர், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர். இறுதியாக வணிகவியல் துறை பேராசிரியை செல்வி பு. புவிஷ்வி நன்றி கூறினார்.  

No comments:

Post a Comment

CSIR-NET PHYSICS BOOKS

  CSIR-NET PHYSICS BOOKS NOW IT IS EASY TO PREPARE FOR CSIR-NET, GATE, JEST, TIFR ,IIT-JAM, SET, Assistant Professor Exam The following book...