Tuesday, March 16, 2021

தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று

தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று


தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு இருவாரங்களுக்கு முன்பு 300 என்ற அளவில் குறைந்து வந்தது. ஆனால், அதன் பின்னர் படிப்படியாக அதிகரித்து கடந்த 24 மணி நேரத்தில் 836 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8 லட்சத்து 60 ஆயிரத்து 562ஆக அதிகரித்துள்ளது. அதேநேரத்தில் ஒரே நாளில் 553 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டு இதுவரை 12 ஆயிரத்து 551 பேர் உயிரிழந்துள்ளனர்.

மாவட்டங்கள் அளவில் குறிப்பாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதிகபட்சமாக சென்னையில் ஒரே நாளில் 317 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 81 பேருக்கும், கோவை மாவட்டத்தில் 70 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் நான்கு நாட்களில் ஒருநாள் பாதிப்பு வேகமாக அதிகரித்திருப்பது அப்பகுதி மக்களை அச்சமடையச் செய்துள்ளது.

கடந்த ஆண்டில் மார்ச் தொடக்கத்தில் இருந்து கொரோனா பாதிப்பு சிறிது சிறிதாக பரவினாலும் சில வாரங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதேபோன்று தற்போது மீண்டும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை ஏற்படுகிறதோ என்ற அச்சம் எழுந்துள்ள நிலையில் மக்கள் கொரோனா முன்னெச்சரிக்கை கட்டுப்பாடுகளை கடைபிடித்தால் மற்றொரு பொதுமுடக்கத்தை தவிர்க்க முடியும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்

Source By : puthiyathalaimurai.

இது போன்ற தகவல் பெற

https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc

இந்த Telegram  குழுவில் இணையவும்.

நன்றி.

No comments:

Post a Comment

விண்வெளியில் முளைத்த காராமணி விதை இஸ்ரோ சாதனை

விண்வெளியில் முளைத்த காராமணி விதை இஸ்ரோ சாதனை. நாட்டின் சொந்த விண்வெளி மையம் அமைக்கும் முயற்சியின் ஒருபகுதியாக நுண் புவி ஈர்ப்ப...