ஆசு வானியல் கழகப் பொற்பதக்கம் வென்ற அமெரிக்க வானியலாலர் வில்லியம் வாலசு கேம்ப்பெல் பிறந்த நாள் இன்று (ஏப்ரல் 11, 1862).
வில்லியம் வாலசு கேம்ப்பெல் (William Wallace Campbell) ஏப்ரல் 11, 1862ல் ஓகியோவில் உள்ள ஏன்காக் ஊரில் ஒரு பண்ணையில் பிறந்தார். தந்தையார் இராபர்ட் வில்சன், தாயார் ஆரியத்வேல்சு கேம்ப்பெல் ஆவார். இவர் தன் ஊரில் பள்ளிப் படிப்பு முடித்துவிட்டு, மிச்சிகன் பல்கலைக்கழ்கத்தில் கட்டிடப் பொறியியலில் அறிவியல் இளவல் பட்டம் பெற 1886ல் சேர்ந்தார். பல்கலைக்கழகத்தில் பயிலும்போதே சைமன் நியூகோம்பின் மக்கள் வானியல் நூலைப் படித்ததால் இவர் வானியலில் ஆர்வத்தை வளர்த்துக்கொண்டார். பட்டம் பெற்றதும் இவர் கொலராடோ பல்கலைக்கழகத்தில் கணிதவியல் பேராசிரியராக பணியமர்த்தப்பட்டார். விரைவில் இவர் மிச்சிகனுக்குத் திரும்பிவந்து வானியல் பயிற்றுநராக வேலையில் சேர்ந்தார். 1891ல் கலிபோர்னியாவில் உள்ள இலிக் பல்கலைக்கழகத்தில் கதிர்நிரலியலில் பணிபுரிய அழைக்கப்பட்டார். இவர் வானியல் கதிர்நிரலியலில் முன்னோடியாவார். இவர் விண்மீன்களின் ஆர விரைவுகளை அட்டவணைப்படுத்தினார்.
1893ல் வுல்ஃப்-இரேயத் விண்மீன் HD 184738ஐக் கண்டுபிடித்தார். இது கேம்ப்பெல் நீரக உறை விண்மீன் எனவும் அழைக்கப்படுகிறது. 1901 முதல் 1930 வரை இலிக் வான்காணக இயக்குநராகவும் பணியமர்த்தப்பட்டார். 1919ல் இவரது நோக்கிடுகள் பொய்த்துவிட்டதால், இவர் அவற்றை 1922ல் மீண்டும் மேற்கொண்டார். எனவே 1922ல் ஆஸ்திரேலியாவில் ஒரு குழுவுக்குத் தலைமைதாங்கிச் சூரிய ஒளிமறைப்பை ஒளிப்படம் எடுத்தார். இந்தத் தரவுகள் ஆல்பர்ட் ஐன்சுட்டைனின் சார்பியல் கோட்டுக்கு மேலும் சான்றாக விளங்கியது. மூன்றாண்டுகளுக்குப் பின்னர், எடிங்டன் 1931ல் அமெரிக்கத் தேசிய அறிவியல் கல்விக்கழகத்தின் தலைவர் பொறுப்பை வாழ்சிங்டனில் ஏற்றார். கேம்ப்பெல் 1923 முதல் 1930 வரை கலிபோர்னியா பல்கலைக்கழக தலைவரானார். அறிவியல் சேவைக்கான வாரியத்திலும் அறக்கட்டளைக் குழுவில் 1923 முதல் 1926 வரை இருந்துள்ளார். இது இப்போது அறிவியலுக்கும் மக்களுக்குமான கழகம் எனப்படுகிறது. இவர் 1895, 1909, 1918 ஆகிய ஆண்டுகளில் மும்முறை பசிபிக் வானியல் கழகத்தின் தலைவராகத் திகழ்ந்துள்ளார்.
பிரெஞ்சு அறிவியல் கல்விக்கழகத்தின் இலாலண்டே பதக்கம்(1903), தேசிய அறிவியல் கல்விக்கழகத்தின் என்றி டிரேப்பர் பதக்கம்(1906), ஆசு வானியல் கழகப் பொற்பதக்கம்(1906), ஜான்சன் பதக்கம்(1910), புரூசு பதக்கம்(1915), இலண்டன் அரசு கழகத்தின் அயல்நாட்டு உறுப்பினர்(1918), எடிபரோ அரசு கழகத்தி தகைமை உறுப்பினர்(1920) போன்ற புத்தகங்கள் பெற்றுள்ளார். நிலாக் குழிப்பள்ளம் கேம்ப்பெல், குறுங்கோள் 2751 கேம்ப்பெல், செவ்வாயின் ஒரு மொத்தல் குழிப்பள்ளம் இவர் பெயர் இடப்பட்டுள்ளது.
கேம்ப்பெல்
பெரும்பாலும் பார்வையின்றி தவித்துள்லார். மேலும் இவர் பேச்சு, எழுத்து, தகவல் தொடர்புத் துண்டிப்பு நோயால்
அல்லல்பட்டுள்ளார். இவர் தனது குடும்பத்துக்கு இதனால் காப்பும் பணமும் தரவியலாத,
எதற்குமே பயன்படாத நிலைகண்டு நொந்து வாடியுள்ளார்.
இச்செய்திகள் அவரது இறப்புக் குறிப்புகளில் இருந்து அறியமுடிகிறது. இவர் எலிசபெத்
பல்லார்டு தாம்சனை மணந்துகொண்டார். இவருக்கு மூன்று மகன்கள் உண்டு. அமெரிக்க
வானியலாலர் வில்லியம் வாலசு கேம்ப்பெல் ஜூன் 14, 1938ல் தனது 76வது அகவையில்சான்பிரான்சிசுகோவில்
உள்ள நான்காம் மாடிச் சாளரத்தில் இருந்து பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
Source By: Wikipedia.
தகவல்: இரமேஷ்,
இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc
இந்த Telegram குழுவில் இணையவும்.
நன்றி.
இது போன்ற தகவல் பெற
நன்றி.
இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், p.ramesh704@gmail.com மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப் அனுப்பிட வேண்டுகிறோம்.
🛑📕 3231 பக்கங்கள் கொண்டTNPSC Overall Previous Year Question.
மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், p.ramesh704@gmail.com மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப் அனுப்பிட வேண்டுகிறோம்.
🛑📕 3231 பக்கங்கள் கொண்டTNPSC Overall Previous Year Question.
மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.
No comments:
Post a Comment