பிரபல உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் முன்னோடி அமெரிக்க மருத்துவக் கண்டுபிடிப்பாளர், ஜேம்ஸ் டேனியல் ஹார்டி பிறந்த தினம் இன்று (மே 14, 1918).
ஜேம்ஸ் டேனியல் ஹார்டி (James D.Hardy) மே 14, 1918ல் ஐக்கிய அமெரிக்காவின் தென் பிராந்திய மாநிலமான அலபாமாவின் நெவாலா எனும் நகரில் பிரெட், ஜூலியா தம்பதியருக்கு பிறந்தார். அவரது தந்தை பிரெட், சுண்ணாம்பு ஆலை அதிபராவார். ஹார்டி, பள்ளி மாணவனாக இருந்தபோது அந்நாட்டில் கடுமையான பொருளாதார மந்தநிலை நிலவியதால், பணம் சம்பாதிப்பதற்காக தனது 2 இரட்டைச் சகோதரர்கள் ஜூலியன், டெய்லர், மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து நடனக் குழு அமைத்தார். மேலும், மேல்நிலைப் பள்ளியில் கால்பந்து குழுவில் இருந்துள்ளார். இதுபோன்ற அனுபவங்கள்தான் வாழ்க்கையில் வெற்றிக்கான உத்வேகத்தை தந்ததாக குறிப்பிட்டுள்ளார். 1938ல், அலபாமா பல்கலைக்கழகத்தில் வேதியியல், உயிரியல், ஜெர்மன் மொழியில் பயின்று பட்டப் படிப்பை முடித்த ஹார்டி. 1942ல் பென்சில்வேனியா பல்கலையில் சேர்ந்து, மருத்துவத்தில் எம்.டி. பட்டம் பெற்றார்.
1944ம் ஆண்டில் நடந்த இரண்டாம் உலகப்போரின்போது, அமெரிக்க ராணுவத்துக்கு சேவை செய்ய அழைக்கப்பட்டு, ராணுவ சேவையில் 2 ஆண்டுகள் ஈடுபட்டதால், தான் ஒரு அறுவை சிகிச்சை நிபுணராகி, மனித குலத்துக்கு சேவையாற்ற வேண்டும் என்று அவர் முடிவு செய்தார். சர்ஜரி அண்ட் தி எண்டோக்ரைன் சிஸ்டம் (Surgery and the endocrine System) என்ற தனது முதல் மருத்துவ நூலை 1950ல் எழுதிய டேனியல் ஹார்டி, அதை தொடர்ந்து பல மருத்துவ நூல்களை எழுதினார். மீண்டும் பென்சில்வேனியா பல்கலையில் சேர்ந்து, மனித உடலின் திரவங்கள் குறித்து ஆய்வு செய்தவர், உடலியல் வேதியியலில் 1951ல் முதுகலைப் பட்டம் பெற்றார். டென்னஸி பல்கலையில் அறுவை சிகிச்சைத் துறையின் உதவிப் பேராசிரியராகவும், அறுவை சிகிச்சை ஆய்வுக்கான இயக்குநராகவும் நியமிக்கப்பட்டார். 2 ஆண்டுகளில் அறுவை சிகிச்சை துறை தலைவரானர். 1955ல் தொடங்கப்பட்ட மிசிசிபி பல்கலை மருத்துவ மையத்தில் அறுவை சிகிச்சை துறை தலைவராகப் பதவியேற்று, 1987-ஆம் ஆண்டு வரை பணிபுரிந்தார்.
மிசிசிபி பல்கலை மருத்துவ மையத்தில் இவரது தலைமையில் உறுப்பு மாற்று ஆராய்ச்சிகள் தீவிரமாக நடந்தன. இதையடுத்து, பல விலங்குகளிடம் வெற்றிகரமாக இந்த அறுவை சிகிச்சைகளை குழுவாக செய்தனர். முதன்முதலாக 1963ல் மனித நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொண்ட அக்குழு, விலங்கிடம் இருந்து மனிதனுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்தனர். 1964ல் இரட்டை நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை ஆகியவற்றை வெற்றிகரமாக மேற்க்கொண்ட ஹார்டி, விலங்கிடம் இருந்து மனிதனுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்தார். அவ்வறுவை சிகிச்சை வெற்றி பெற்றாலும், சம்பந்தப்பட்ட நபர் 90 நிமிடங்கள் மட்டுமே உயிருடன் இருந்தார். அச்சிகிச்சை சர்ச்சைகளைக் கிளப்பினாலும் இவரது முனைப்பால், மனித இதய மாற்று அறுவை சிகிச்சைத் துறை வளர்ச்சியடைய வழிவகுத்தது.
ஜேம்ஸ் டி
ஹார்டி, அறுவை சிகிச்சை குறித்து பல நூல்களை
எழுதியுள்ளதோடு, அறுவை சிகிச்சைகள் குறித்த தகவல்களை
வெளியிடும் இதழின் ஆசிரியராகவும், பல்வேறு அறுவை சிகிச்சை அமைப்புகளில்
உறுப்பினராகவும் செயல்பட்டார். அமெரிக்காவில் உள்ள சுமார் 3 டசன் மருத்துவக் கல்லூரிகளிலும், வெளிநாடுகளில் பல பல்கலைகளிலும், கல்லூரிகளிலும் வருகைதரு பேராசிரியராகப் பணிபுரிந்தார். 20-ஆம் நூற்றாண்டின் முக்கிய மருத்துவக் கண்டுபிடிப்பாளரும், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை துறையின் முன்னோடியுமான ஜேம்ஸ் ஹார்டி
பிப்ரவரி 19, 2003ல் தனது 85வது அகவையில், அமெரிக்காவில் இவ்வுலகை விட்டு
பிரிந்தார்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ்,
இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
இது போன்ற தகவல் பெற
https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc
இந்த Telegram குழுவில் இணையவும்.
நன்றி.
இது போன்ற தகவல் பெற
நன்றி.
இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், p.ramesh704@gmail.com மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப் அனுப்பிட வேண்டுகிறோம்.
🛑📕 3231 பக்கங்கள் கொண்டTNPSC Overall Previous Year Question.
மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், p.ramesh704@gmail.com மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப் அனுப்பிட வேண்டுகிறோம்.
🛑📕 3231 பக்கங்கள் கொண்டTNPSC Overall Previous Year Question.
மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.
No comments:
Post a Comment