Thursday, May 6, 2021

✍🏻🍂🍂இயற்கை வாழ்வியல் முறை🍂🍂பெருங்காயத்தின் நன்மைகள்.

✍🏻🍂🍂இயற்கை வாழ்வியல் முறை🍂🍂பெருங்காயத்தின் நன்மைகள்.

🍂🍂🍂🍂🍂 

பெருங்காயம் கைப்பு, கரகரப்புச் சுவைகள் கொண்டது. வெப்பத் தன்மையானது.         

🍂🍂🍂🍂🍂          

பெண்களுக்கு இது சிறந்த மருந்து. ஆனால், கர்ப்பிணிகள் அதிகம் சேர்க்கக் கூடாது. மாதவிடாய் சரியாக வராத பிரச்னையையும், அதிக ரத்தப் போக்கு இல்லாமல், லேசாக வந்து செல்லும் பிரச்னையையும் இது சீர் செய்யும். மாதவிடாய் தள்ளித் தள்ளி வரும், சினைப்பை நீர்க்கட்டி (Polycystic Ovary) உள்ள பெண்களும் பெருங்காயத்தை உணவில் அவ்வப்போது சேர்த்துக்கொண்டே வருவது நல்லது.

🍂🍂🍂🍂🍂

குறித்த நாளில் மாதவிடாய் வராமல் தவிக்கும் பெண்கள், வாலேந்திர போளம், பெருங்காயம், மிளகு ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து, இரண்டு மிளகு அளவுக்கு உருட்டிச் சாப்பிட்டால் மாதவிடாய் வந்து, அந்த சூதகக் கட்டும் அகலும்.

🍂🍂🍂🍂🍂

குழந்தை பிறந்த பின்னர் கர்ப்பப்பையில் இருந்து ஒருவகையான திரவம் (லோசியா - Lochia) வெளிப்படும். அது முழுமையாக வெளியேற, பெருங்காயத்தைப் பொரித்து, வெள்ளைப்பூண்டு, பனைவெல்லம் சேர்த்து, பிரசவித்த முதல் ஐந்து நாட்களுக்குக் காலையில் கொடுப்பது நல்லது. 

🍂🍂🍂🍂🍂

அஜீரணத்துக்கு இது சிறந்த மருந்து. புலால் சமைக்கும்போதும், வாய்வு தரக்கூடிய வாழை, கொண்டைக்கடலை, பட்டாணி, முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகளைச் சமைக்கும்போதும் துளியூண்டு பெருங்காயத்தை உணவில் சேர்க்க மறக்கவே கூடாது. 

பெருங்காயத்தின் மருத்துவ நன்மைகள் - Expres Tamil

🍂🍂🍂🍂🍂

சுக்கு, மிளகு, திப்பிலி, ஓமம், சீரகம், கறிவேப்பிலை, இந்துப்பு ஆகியவற்றை தலா 10 கிராம் எடுத்துக்கொள்ளவும். அத்துடன் இரண்டரை கிராம் பெருங்காயத்தை எடுத்துச் சேர்த்துப் பொடித்து வைத்துக்கொள்ளவும். இதை சாதத்தில் போட்டுப் பிசைந்து, முதல் உருண்டையாகச் சாப்பிடவும். பிறகு சாப்பாடு சாப்பிட்டால், அஜீரணம், குடல் புண் (Gastric Oesophagal Reflex Disease-GERD) முதலான வாயு நோய்களுக்கு மிகச் சிறந்த மருந்தாக இருக்கும். 

🍂🍂🍂🍂🍂

நெஞ்சு எலும்பின் மையப் பகுதியிலும், அதற்கு நேர் பின் பகுதியிலும் வாயு வலி வந்து, சில நேரங்களில் இதய வலியோ என பயமுறுத்தும். அதற்கு, பெருங்காயம் ஒரு பங்கு, உப்பு இரண்டு பங்கு, திப்பிலி நான்கு பங்கு எடுத்து செம்முள்ளிக் கீரையின் சாற்றில் அரைத்து மாத்திரையாக உருட்டிக்கொள்ளவும். இதை காலையும் மாலையும் ஒன்றிரண்டு மாத்திரையாக ஏழு நாட்களுக்குச் சாப்பிட்டால் வாயுக்குத்து முழுமையாக நீங்கும். ஆனால், அதற்கு முன்னர் வந்திருப்பது ஜீரணம் தொடர்பான வலியா அல்லது ஒருவகையான நெஞ்சு வலியா (Unstable Angina) என உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டியது அவசியம்.

🍂🍂🍂🍂🍂

இர்ரிடபுள் பௌல் சிண்ட்ரோம் எனும் சாப்பிட்டவுடன் வரும் கழிச்சல், அடிக்கடி நீர் மலமாகப் போகும் குடல் அழற்சி நோய்களுக்கும் பெருங்காயம் பலன் தரக்கூடியது. 

பெருங்காயம் - சில மருத்துவப் பயன்கள் - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்

🍂🍂🍂🍂🍂

குழந்தைகளுக்குக் கொஞ்சம் ஓம நீரில், துளியூண்டு பெருங்காயப்பொடியைக் கலந்து கொடுத்தால் மாந்தக் கழிச்சலை நீக்கி பசியைக் கொடுக்கும்      🍂🍂🍂🍂🍂    பல் வலி அதிகம் உள்ளவர்கள், பெருங்காயப் பொடியை வாணலியில் போட்டு வறுத்து, வலி உள்ள சொத்தைப் பல்லின் குழியில் வைத்து கடித்துக் கொண்டால், பல்வலி நொடியில் பறந்துவிடும் ‌‌🍂🍂🍂🍂🍂

½ கிராம் பொரித்த பெருங்காயத்தை சிறிதளவு பனை வெல்லத்துடன் சேர்த்து சாப்பிட்டு வர வயிற்றுப் பொருமல், வயிற்று வலி குணமாகும்.

🍂🍂🍂🍂🍂

2கிராம் பெருங்காயத்தை 20 மிலி நல்லெண்ணெயில் இட்டுக் காய்ச்சி வடிகட்டி ஒரு துளி அளவு காதில் விட காதுவலி குணமாகும்.

🍂🍂🍂🍂🍂

குடலின் இயக்கத்தை அதிகமாக்க, நீரில் உரைத்து பசையாக்கப்பட்ட பெருங்காயம் வயிற்றின் மீது தடவப்படுகின்றது.இதன் உணர்ச்சியைத் தூண்டும் தன்மை இதய பரிசோதனைகள் மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. உள் மருந்தாக பெருங்காயத்தை உபயோகிக்கும்போது பொரித்து உபயோகிப்பதே நல்லது.

🍂🍂🍂🍂🍂 

(பின்குறிப்பு) பெருங்காயத்தை அதிக அளவில் தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் தொண்டைப்புண், கழிச்சல், வயிற்று உப்புசம், சிறுநீர் எரிச்சல் புளியேப்பம் போன்றவற்றை உண்டாக்கும்.

பெருங்காயத்தை ஏன் தினமும் சாப்பிட வேண்டும்? நன்மைகள் உண்டா? - Tamil 360 News

🍂🍂🍂🍂🍂

மிகினும் குறையினும் நோய்செய்யும் அளவோடு பயன்படுத்தி நலமோடு வாழ்வோம்.

🌷🌷🌷🌷🌷

உடல் ஆரோக்கியமாக  இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்.

🦚🦚🦚🦚🦚

உடல் நல குறைபாடுகளையும்  சரிசெய்ய   இயற்கை வாழ்வியல் முறை சார்ந்த  ஆலோசனைகள் வழங்கபடும்.

🦚🦚🦚🦚🦚

நன்றி: பெருசங்கர்,🚍ஈரோடு  மாவட்டம், பவானி.              

செல் நம்பர்  7598258480

வாட்ஸ் அப்  7598258480

குரு வாழ்க குருவே துணை

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

N.P. RAMESH: 9750895059.

இது போன்ற தகவல் பெற

https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc

இந்த Telegram  குழுவில் இணையவும்.

நன்றி.

No comments:

Post a Comment

CSIR-NET PHYSICS BOOKS

  CSIR-NET PHYSICS BOOKS NOW IT IS EASY TO PREPARE FOR CSIR-NET, GATE, JEST, TIFR ,IIT-JAM, SET, Assistant Professor Exam The following book...