Friday, May 7, 2021

மின்னூட்ட இணைகருவி (charge-coupled device, CCD) கண்டறிந்து நோபல் பரிசு பெற்ற, கனடிய அறிவியலாளர் வில்லார்டு ஸ்டேர்லிங் பாயில் நினைவு நாள் இன்று (மே 7, 2011).

மின்னூட்ட இணைகருவி (charge-coupled device, CCD) கண்டறிந்து நோபல் பரிசு பெற்ற, கனடிய அறிவியலாளர் வில்லார்டு ஸ்டேர்லிங் பாயில் நினைவு நாள் இன்று (மே 7, 2011).

வில்லார்டு ஸ்டேர்லிங் பாயில் (Willard Sterling Boyle) ஆகஸ்டு 19, 1924ல் கனடாவில் நோவா இசுக்கோசியா மாநிலத்தில் உள்ள ஆம்ஃகெர்சுட்டு (Amherst) என்னும் இடத்தில் பிறந்தார். இவருக்கு மூன்று அகவை இருக்கும் பொழுது இவர் பெற்றோர்களுடன் இவர் கியூபெக் மாநிலத்துக்கு இடம் மாறினார்இவர் தன் 14 ஆம் அகவை வரை வீட்டிலேயே தன் தாயாரால் பயிற்றுவிக்கப்பட்டு பின்னர் மான்ட்ரியாலில் உள்ள கீழக கனடா கல்லூரியில் (Lower Canada College) சேர்ந்து உயர்நிலைப்பள்ளிப் படிப்பை முடித்தார்பின்னர் கனடாவில் மெக்கில் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படித்தார். ஆனால் படிப்பு 1943ல் சற்று தடைபட்டு பின்னர் இரண்டாம் உலகப்போரின் பொழுது அரசக் கனடிய கடற்படையில் (ராயல் கனடிய நேவியில்) சேர்ந்தார். பின்னர் இவர் பிரித்தானிய அரச கடற்படைக்கு மாற்றப்பட்டு அதில் வானூர்தி தாங்கிக் கப்பலில் சுபிட்ஃவையர் (Spitfire) என்னும் வானூர்தி ஓட்டியாக இருந்தார். இவர் 1947ல் அறிவியலில் இளநிலைப் பட்டமும், 1948ல் அறிவியல் முதுநிலைப் பட்டமும், 1950ல் மெக்கில் பல்கலைக்கழத்தில் முனைவர் பட்டமும் பெற்றார். 


File:CCD Belichtung animation.gif - Wikimedia Commons
See-MOS by The Sony Tech Guy - ProVideo Coalition

பாயில் முனைவர் பட்டம் பெற்ற பின்னர் ஓராண்டு கனடாவின் கதிரியக்க ஆய்வகத்தில் (Radiation Lab) பணியாற்றினார். அதன் பின்னர் கனடாவின் ராயல் மிலிட்டரிக் கல்லூரியில் இரண்டாண்டு இயற்பியல் படிப்பித்தார்1953ல் பாயில் பெல் ஆய்வகத்தில் (Bell Labs) சேர்ந்து அங்கு 1962ல் டான் நெல்சன் (Don Nelson) என்பவருடன் சேர்ந்து தொடர்ந்து இயங்கும் சிவப்புக்கல் (ரூபி) ஒளிமிகைப்பியைக் கண்டுபிடித்தார். குறைக்கடத்தி ஒளிமிகைப்பி பற்றிய முதல் காப்புரிமத்தில் இவர் பெயர் சுட்டப்பட்டிருந்தார். பின்னர் பெல் ஆய்வகத்தின் கீழியங்கும் பெல்க்காம் (Bellcomm) என்னும் நிறுவனத்தின் ஒரு பகுதியாக இருந்த விண்வெளி புதுப்புலத் தேடுதல் அறிவியல் ஆய்வுகள் துறையின் (Space Science and Exploratory Studies) இயக்குநராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன்வழி அப்போலோ விண்வெளித் திட்டத்துக்கு உதவிகள் செய்தார்குறிப்பாக நிலாவில் இறங்குதளங்கள் தேர்வில் உதவினார். பின்னர் 1964ல் பெல் ஆய்வகத்துக்குத் திரும்பி வந்து நுண்மின் தொகுசுற்று ஆய்வு வளர்ச்சியில் பங்கு கொண்டார். 



1969ல் பாயிலும் சியார்ச்சு இ.சுமித்தும் சேர்ந்து மின்மம் வழிந்துநகர் கருவியைக் (charge-coupled device, CCD) கண்டுபிடித்தார். இதற்காக இவ்விருவரும் 1973ல் பிராங்க்கிலின் கழகத்தின் (Franklin Institute), இசுட்டூவர்ட் பாலன்ட்டைன் பதக்கம் (Stuart Ballantine Medal) பெற்றார்கள். 1974ல் ஐ.இ.இ.இ நிறுவனத்தின் மாரிசு லீபுமன் நினைவுப் பரிசும் (IEEE Morris N. Liebmann Memorial Award), 2006ல் டிரேப்பர் பரிசும் (Charles Stark Draper Prize), 2009ல் இயற்பியலுக்கான நோபல் பரிசும் பெற்றார்கள். பாயில் 1975 முதல் அவருடைய ஓய்வு பெற்ற ஆண்டாகிய 1979 வரை பெல் ஆய்வகத்தின் ஆய்வுக்கான செயல்வடிப்பு இயக்குநராகப் பணியாற்றினார். ஓய்வு பெற்ற பின்னர் கனடாவில் நோவா இசுக்கோசியாவில் உள்ள வால்லசு (Wallace, Nova Scotia) என்னும் இடத்தை உறைவிடமாகக் கொண்டார். அங்கு தன் மனைவியுடன் சேர்ந்து உதவி ஒரு கலைக் காட்சியகத்தைத் துவக்கினார். நோபல் பரிசு பெற்றகனடிய அறிவியலாளர் வில்லார்டு ஸ்டேர்லிங் பாயில் மே 7, 2011ல் தனது 86வது அகவையில், கனடாவில் நோவா இசுக்கோசியா மாநிலத்தில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.

Source By: Wikipedia

தகவல்: இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இது போன்ற தகவல் பெற

https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc

இந்த Telegram  குழுவில் இணையவும்.

நன்றி.





இது போன்ற தகவல் பெற

நன்றி.

இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

🛑📕 3231 பக்கங்கள் கொண்டTNPSC Overall Previous Year Question.

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

No comments:

Post a Comment

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல்லூரி மாணவர்கள்.

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல...