✍🏻🎴🎴இயற்கை வாழ்வியல் முறை🎴🎴மன அழுத்தத்தை குறைக்க சில வழிமுறைகள்.
🎴🎴🎴🎴🎴
மன அழுத்தம் என்பது இல்லாமல் இன்றைய வேகமாக உலகில் யாராலும் இருக்க முடிவதில்லை காரணம் சூழ்நிலை தாக்குதல்கள் நீங்கள் வேலைக்குச் செல்பவரோ வீட்டில் இருப்பவரோ வயதானவரோ, இள வயதோ மன அழுத்தம் நீங்க நீங்கள் செய்ய வேண்டிய முக்கியமான ஒன்று உடற்பயிற்சிதான். உடற்பயிற்சி உடலுக்கு மட்டும் நன்மை அளிப்பதில்லை. மனதிற்கும் நம்மை அளிக்கின்றன. மன அழுத்தம் நீங்குகின்றது என ஆய்வுகள் கூறுகின்றன
🎴🎴🎴🎴🎴
எளிதான உடற்பயிற்சி, நடைபயிற்சி, அதையாவது செய்யுங்கள். குழந்தைகளுக்கு நீச்சல், ஓட்டம், சைக்கிள் போன்றவற்றினை இப்பொழுதிலிருந்தே நன்கு பழக்கி விட்டீர்கள் என்றால் மன அழுத்தம் என்ற பாதிப்பின் பிடியில் அவர்கள் சிக்க மாட்டார்கள்.
🎴🎴🎴🎴🎴
வேலையை பிரித்துக் கொடுங்கள். அனைத்துமே நான் செய்தால் தான் சரியாக இருக்கும்’ என சொல்லி எல்லா வேலைகளையும் தலை மேல் இழுத்து போட்டு திணறுபவர் ஏராளம் இவ்வாறு செய்வதால் உடல், மனம் இரண்டும் சோர்ந்து விடும். வேலையும் சீராக முடியாது அவரவர் வேலையை அவரவரை செய்ய விடாது தானே செய்வதும் தவறே. ஆக வேலையினை பிரித்துக் கொடுங்கள் மற்றவர்களையும் பொறுப்பேற்கச் செய்யுங்கள்.
🎴🎴🎴🎴🎴
கடுமை இல்லாத கண்டிப்பு இருக்க வேண்டும். இதன் பொருள் என்ன? ஒருவர் சற்று ஏமாந்தவர் போல் இருந்தால் அனைவரும் எல்லா வேலைகளையும் அவர் மீதே திணிப்பர். ஆகவே ‘முடியாது’ என்பதனையும் ‘உங்களுக்கு வேலை கூடுதல்’ என்பதனையும் கடுமை இல்லாத வார்த்தைகளால் கண்டிப்பாக சொல்லி விடுங்கள்.
🎴🎴🎴🎴🎴
குடி பழக்கமும் புகை புழக்கமும் மன அழுத்தத்தினை கூட்டவே செய்யும். அநேகரும் மன அழுத்தம் தீர குடி பழக்கத்தினை ஏற்படுத்திக் கொள்கின்றனர். புகை பிடித்தல், டென்ஷன் ஏற்பட்டவுடன் முதல் தீர்வாக செய்வர் இவை இரண்டும் ஒருவரை மிக மோசமான நிலைக்கு கொண்டு செல்லும் இதனை அடியோடு நீக்குவதே மன அழுத்த தீர்வாகும்
🎴🎴🎴🎴🎴
இதே போல் காபி குடிப்பதும். அடிக்கடி காபி குடிக்கும் பழக்கம் உடையோர் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகி விடுவர். அதிக காபி குடிக்கும் பழக்கம் இருந்தால் இன்றே அதனை கை விடுங்கள்.
🎴🎴🎴🎴🎴
சத்தான உணவு பழங்களும் காய் கறிகளும் மன அழுத்தம் நீக்கும் மிக சிறந்த உணவுகள் அதிக எண்ணெய் மசாலா உணவுகளை கண்டிப்பாய் தவிர்த்து பழங்களையும், காய்கறிகளையும் உண்ணுங்கள்.
🎴🎴🎴🎴🎴
நேரம் எதனையும் நேரப்படி முறையாகச் செய்யுங்கள். விடிய விடிய கண் விழிப்பது, பகலில் தூங்குவது, பாதி ராத்திரி உண்பது காலை பட்டினி கிடப்பது போன்று தாறுமாறான வாழ்க்கை முறைகள் காலப் போக்கில் மன அழுத்தத்தினை ஏற்படுத்தும்.
🎴🎴🎴🎴🎴
மூச்சுப் பயிற்சி யோகா பயிற்சி முறையில் மன அழுத்தம் இன்றி இருப்பதற்கான சில மூச்சு பயிற்சி முறைகள் பயிற்றுவிக்கப்படுகின்றன
🎴🎴🎴🎴🎴
மனம் விட்டு பேச சில நல்ல உறவுகள், நட்பு அவசியம்
🎴🎴🎴🎴🎴
தியானம் யோகா, மன இறுக்க தளர்ச்சி பயிற்சி முறைகள் அனைவருக்குமே அவசியம்.
🎴🎴🎴🎴🎴
மன அழுத்தம் குறைக்கும் உணவுகள் சில
🎴🎴🎴🎴🎴
மாதுளம்பழச் சாற்றை வெள்ளைச் சர்க்கரை ஐஸ் துண்டுகள் சேர்க்காமல் தினசரி அருந்தலாம் இதில் இருக்கும் நிறமிச் சத்து மன இறுக்கத்தைக் குறைக்க உதவும்.
🎴🎴🎴🎴🎴
மூளையில் சுரக்கும் செரட்டோனின் சத்தைச் சீராக்கும் தன்மை கொண்டது வாழைப்பழம் இந்தச் சத்து குறைவினாலும், சீரற்ற நிலையிலும்தான் பல்வேறு உளவியல் நோய்கள் வருகின்றன வாழைப்பழம் மனஅழுத்தத்துக்கு நல்லது.
🎴🎴🎴🎴🎴
உறங்குவதற்கு முன் ஒரு குவளைப் பாலில் அரை தேக்கரண்டி அமுக்கரா கிழங்குப் பொடி சேர்த்து சூடாக அருந்தவும் நிம்மதியான தூக்கம் வரும்.
🎴🎴🎴🎴🎴
பதற்றமும் கற்பனைகளும் நிறைந்த இரவுத் தூக்கத்தில் உழல்பவர்கள்ஒரு சிட்டிகை ஜாதிக்காய்த் தூளை பாலில் சேர்த்து அருந்திவிட்டு உறங்கச் செல்லலாம். நல்ல பலன் கிடைக்கும்
🎴🎴🎴🎴🎴
மனஅழுத்தம் உள்ளவர்கள் தினமும் சீரகத் தண்ணீர் அல்லது வெட்டிவேர் போட்ட மண்பானைத் தண்ணீரை அருந்துவது நல்லது
🎴🎴🎴🎴🎴
தினசரி இருமுறை குளிப்பது அன்றாட அழுக்கோடு மன அழுத்தத்தையும் நீக்கும் மனஅழுத்தத்துக்கு மருந்து எடுத்துக்கொள்பவர்கள், மருத்துவரிடம்ன ஆலோசனை செய்து, அவர்களுக்காகவே பிரத்யேகமாக உள்ள பிரமித் தைலம் அசைத் தைலம், குளிர்தாமரைத் தைலம் இவற்றில் ஒன்றை வாரத்துக்கு ஒருமுறை அல்லது இருமுறை பயன்படுத்துவது நல்லது.
🎴🎴🎴🎴🎴
எண்ணெயில் பொரித்த உணவுகள் பித்தத்தைக் கூட்டும்; செரிக்கவும் நீண்ட நேரம் ஆகும். தந்தூரி உணவுகளை மனஅழுத்த நோயாளிகள் தவிர்ப்பது நல்லது ஆவியில் வேகவைத்த உணவுகளே சிறந்தவை.
🎴🎴🎴🎴🎴
உணவில் சேர்க்கப்படும் செயற்கை நிறமூட்டிகள் குழந்தைகளுக்கு கவனச் சிதைவு நோயை ஏற்படுத்தக் கூடியவை நிறமூட்டிகள் சேர்க்கப்பட்ட உணவுப் பொருட்களைத் தவிர்க்கவும்
🎴🎴🎴🎴🎴
அகத்திக் கீரையுடன் சீரகம் சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டி தூள் செய்து சாப்பிட்டு வந்தால் மன அழுத்தம் மாறும். ஆரம்ப நிலை மனநோய் குணமாகும்.
🎴🎴🎴🎴🎴🌷🌷🌷🌷🌷
மிகினும் குறையினும் நோய்செய்யும் அளவோடு பயன்படுத்தி நலமோடு வாழ்வோம்.
🌷🌷🌷🌷🌷
உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்
🦚🦚🦚🦚
உடல் நல குறைபாடுகளையும் சரிசெய்ய இயற்கை வாழ்வியல் முறை சார்ந்த ஆலோசனைகள் வழங்கபடும்.
🦚🦚🦚🦚🦚
நன்றி: பெருசங்கர், 🚍ஈரோடு மாவட்டம், பவானி.
செல் நம்பர் 7598258480, 6383487768.
((வாட்ஸ் அப்)) 7598258480
குரு வாழ்க குருவே துணை
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
N.P. RAMESH: 9489666102.
இது போன்ற தகவல் பெற