Tuesday, June 22, 2021

கோப்பென் காலநிலை வகைப்பாடு முறையை உருவாக்கிய விளாதிமிர் பீட்டர் கோப்பென் நினைவு தினம் இன்று (ஜூன் 22, 1940).

கோப்பென் காலநிலை வகைப்பாடு முறையை உருவாக்கிய விளாதிமிர் பீட்டர் கோப்பென்  நினைவு தினம் இன்று (ஜூன் 22, 1940). 

விளாதிமிர் பீட்டர் கோப்பென் (Wladimir Peter Koppen) செப்டம்பர் 25, 1846ல் ரஷ்யாவில் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க்கில் பிறந்தார். 20 வயது வரை அங்கு வாழ்ந்தார். ரஷ்யப் பேரரசி இரண்டாம் கேத்தரின் ரஷ்யாவிற்கு அழைக்கப்பட்ட பல செருமனிய மருத்துவர்களில் கோப்பெனின் தாத்தாவும் ஒருவர். கிரிமியாவின் சிம்ஃபெரோப்போலில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் பயின்ற கோப்பென், 1864 ஆம் ஆண்டில் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் பல்கலைக்கழகத்தில் தாவரவியல் குறித்த தனது ஆய்வைத் தொடங்கினார். கிரிமியன் கடற்கரையில் உள்ள தனது குடும்பத்தைப் பார்க்க செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கிலிருந்து மற்றும் தீபகற்பத்தின் உட்புறத்தில் உள்ள சிமிபெர்புலுக்கு அடிக்கடி பயணம் செய்வது வழக்கமாக கொண்டிருந்தார். இது கிரிமியன் தீபகற்பத்தின் மலர் மற்றும் புவியியல் பன்முகத்தன்மையும், புவியியல் மாற்றங்களும், காலநிலைகள் மாற்றம் மற்றும் இயற்கை மாற்றங்கள் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வத்தை தொடர் பயணங்கள் தூண்டியது. 


via GIPHY | Global warming, Giphy, Gif

1867 ஆம் ஆண்டில், அவர் ஜடல்பேர்க் பல்கலைக்கழகத்திற்கு மாற்றப்பட்டார். மேலும் 1870 ஆம் ஆண்டில் லீப்சிக் பல்கலைக்கழகத்தில் தாவர வளர்ச்சியில் வெப்பநிலையின் விளைவுகள் குறித்த தனது முனைவர் பட்ட ஆய்வைப் தொடர்ந்தார். செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள மத்திய உடல் ஆய்வகத்தில் பணியாற்றினார். வெப்பமண்டல மழை காலநிலை, வறண்ட காலநிலை, வெப்பமான வெப்பநிலை மழை காலநிலை, பனி மற்றும் குளிர் காலநிலை மற்றும் துருவ காலநிலை ஆகிய ஐந்து மிக முக்கியமான காலநிலைக் குழுக்களை கண்டறிந்தார். கோப்பன் நவீன தட்பவெப்பநிலை மற்றும் வானிலை தட்பவெப்பநிலை முதன்மை நிறுவனர் ஆவார். 1850 மற்றும் 1860க்கு இடையில், அட்லாண்டிக், பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல்களுக்கான சீவர்ட்டின் படகோட்டி கையேடு புத்தகத்தை உருவாக்க கோப்பன் உறுதுணையாக இருந்தார். 1872 மற்றும் 1873க்கு இடையில் கோப்பன் ரஷ்சியா வானிலை சேவையில் உதவியாளராகப் பணியாற்றினார். அங்கு அவர் தினசரி சினோப்டிக் வானிலை வரைபடத்தைத் தயாரிக்க உதவினார்.

1875 ஆம் ஆண்டில், அவர் மீண்டும் செர்மனிக்குச் சென்று, ஆம்பர்கு தளமாகக் கொண்ட ஜேர்மன் கடற்படை ஆய்வகத்தில் கடல்சார் வானிலை ஆய்வின் புதிய பிரிவின் தலைவரானார். அங்கு, செர்மனியின் வடமேற்கு பகுதி மற்றும் அருகிலுள்ள கடல் பகுதிகளுக்கு வானிலை முன்னறிவிப்பு சேவையை நிறுவுவதற்கு அவர் பொறுப்பேற்றார். நான்கு வருட வேலைக்குபின் அவர் தனது முதன்மை ஆராய்ச்சிக்கு செல்ல முடிவு எடுத்தார். கோப்பன் காலநிலை குறித்த முறையான ஆய்வைத் தொடங்கினார். மேலும் வளிமண்டலத்தின் மேல் அடுக்குகளிலிருந்து மாரிதிகளை சேகரிக்க வானிலைபலூன்களை அனுப்பி ஆய்வுகள் செய்தார். 1884 ஆம் ஆண்டில், அவர் தனது காலநிலை மண்டலங்களின் வரைபடத்தின் முதல் ஆய்வை வெளியிட்டார். அதில் பருவகால வெப்பநிலை வரம்புகள் திட்டமிடப்பட்டன. இது 1900 ஆம் ஆண்டில் கோப்பன் காலநிலை வகைப்பாடு முறையின் வளர்ச்சிக்கு வழிவகுத்தது. 


கோப்பென் தனது வாழ்நாள் முழுவதும் முன்னேறிக்கொண்டே இருந்தார். அவரது அமைப்பின் முழு ஆய்வு முதலில் 1918ல் தோன்றியது. பல மாற்றங்களுக்குப் பிறகு, இறுதி ஆய்வு 1936ல் வெளியிடப்பட்டது. கோப்பன் அறிவியலின் பல கண்டுபிடிப்புகளுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கியுள்ளார். கோப்பென் காலநிலை வகைப்பாடு முறையை உருவாக்கிய விளாதிமிர் பீட்டர் கோப்பென் ஜூன் 22, 1940ல் தனது 93வது அகவையில் ஜெர்மனியின் கிராசு நகரில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.

Source By: Wikipedia

தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.

இது போன்ற தகவல் பெற

                                                         இது போன்ற தகவல் பெற

நன்றி.

இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

🛑📕 3231 பக்கங்கள் கொண்டTNPSC Overall Previous Year Question.

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

No comments:

Post a Comment

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல்லூரி மாணவர்கள்.

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல...