Saturday, June 5, 2021

✍🏻🧂🧂இயற்கை வாழ்வியல் முறை🧂🧂ஆடாதோடா நன்மைகள்.

✍🏻🧂🧂இயற்கை வாழ்வியல் முறை🧂🧂ஆடாதோடா நன்மைகள்.

🧂🧂🧂🧂🧂🧂

மக்கள் ஆரோக்கியமாக வாழ சித்தர்கள் பல வழிமுறைகளை கண்டறிந்து கூறினார்கள். அதில் நரை, திரை, மூப்பு, சாக்காடுநீக்கி, என்றும் இளமையுடனும் சுறுசுறுப்புடனும் வாழச் சொல்லப் பட்டவைதான் காய கற்ப மூலிகைகள். 

🧂🧂🧂🧂🧂🧂

ஆடுகள் தொடாத இலை என்பதால் இது ஆடாதோடா என அழைக்கப்படுகிறது. சிறு செடியாகவும், ஒருசில இடங்களில் மரமாகவும் வளரும். இதன் இலை மாமர இலை வடிவில் இருக்கும். தென்னிந்தியாவில் பல இடங்களில் காணப்படும் மூலிகையாகும். 

🧂🧂🧂🧂🧂🧂

எந்தவகையான மண்ணாக இருந்தாலும் இந்த ஆடாதோடை செழித்து வளரும் தன்மை கொண்டது. கிராமப்புற மக்களும் சரி, அங்கு மருத்துவம் செய்யும் மருத்துவர்களும் சரி, ஆடாதோடை இலையை அதிகம் பயன்படுத்துவார்கள். 

🧂🧂🧂🧂🧂🧂

மனிதனை அன்றாடம் துரத்தும் சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு இது அருமருந்தாகும் இது அதிகளவு ஆக்ஸிஜனை வெளியிடுவதால் இதனை ஆயுள் மூலிகை என்றும் அழைக்கின்றனர். மனித உடலில் நுரையீரல் முக்கிய உறுப்பாகும். 

🧂🧂🧂🧂🧂🧂

இது சுவாசக் காற்றை உள்வாங்கி அதிலுள்ள பிராணவாயுவைப் பிரித்து எடுத்துக் கொண்டு கரியமில வாயுவை வெளியேற்றுகிறது. நுரையீரல் நன்கு செயல் பட்டால்தான் இரத்தம் சுத்தமடையும். 

🧂🧂🧂🧂🧂🧂

இதனால் நீண்ட ஆயுளும் கிடைக்கும். இத்தகைய சிறப்பு வாய்ந்த நுரையீரலைப் பலப்படுத்த ஆடாதோடை சிறந்த மருந்தாக உள்ளது. இது நுரையீரல் காற்றுச் சிற்றறைகளில் உள்ள அசடுகளை (சளி) நீக்கி ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இதனால் இதை மரணமாற்று மூலிகை என்றும் கூறுகின்றனர். 

🧂🧂🧂🧂🧂🧂

இதன் வேர், பட்டை, பூ, இலை அனைத்தும் மருத்துவத் தன்மை கொண்டது. . நெஞ்சில் சளி, அதனுடன் வலி, உடலில் தசைப்பகுதிகளில் வலி போன்றவற்றிற்கு ஆடாதோடை இலையைப் பறித்து காயவைத்து பொடியாக்கி கஷாயம் செய்து கொடுப்பார்கள்.

 🧂🧂🧂🧂🧂🧂

இது சிறந்த நிவாரணியாக பயன்படுகிறது. அதுபோல் தடுக்கி விழுந்து மார்புப்பகுதியில் அடிபட்டால் உடனே முதலுதவியாக ஆடாதோடை இலை ஒன்றுடன் வெற்றிலை 2 சேர்த்து மென்று தின்னக் கொடுப்பார்கள்.இது உடனடி நிவாரணமாகும்

🧂🧂🧂🧂🧂🧂

ஆடாதோடை இலைகளை நன்கு அலசி, நீரில் காய்ச்சி,மூன்றில் ஒரு பங்காக நீர் சுடும்வரை வைத்திருந்து, பின்னர் தேனுடன் கலந்து பருகிவர, ஜுரம், சளி, இருமல், உடல்வலி மற்றும் ஆஸ்துமா பாதிப்புகளை நீக்கும். இந்த பாதிப்புகள் தீரும்வரை, தினமும் இந்த முறையில் இலைகளை நீரிலிட்டு காய்ச்சி பருகிவரலாம்.

🧂🧂🧂🧂🧂🧂

ஆடாதோடை இலை,தூதுவளை இலைகளை சம அளவு எடுத்து, உலர்த்தி பொடியாக்கி, தினமும் இருவேளை தேனுடன் கலந்து உண்டுவர, சளி பிரச்னைகள் நீங்கி, நுரையீரல் பாதிப்புகள் யாவும் விலகி, இரத்தத்தை சுத்தம் செய்து, நுரையீரலை வலுவாக்கும்.

🧂🧂🧂🧂🧂🧂

இதுவே, மனிதனைக்கொல்லும் கொடிய வியாதியாகக்கருதப்படும் எலும்புருக்கி வியாதிக்கு முதல் மருந்தாகும். முறையாக நாற்பத்தெட்டு நாட்கள் பருகிவர, கொடிய பாதிப்புகள் தரும் T.B என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் அந்த காச வியாதி விலகிவிடும்.

தொண்டை கிருமி தொற்றை தடுக்கும் ஆடாதோடை மூலிகை! - Anti-throat herb! | பெமினா  தமிழ்

ஆடாதோடை இலைகளுடன், திப்பிலி, அதிமதுரம், ஏலக்காய் மற்றும் தாளிசபத்திரி போன்ற மூலிகைகளை கலந்து பருகிவர,நாள்பட்ட இருமல், இளைப்பு மற்றும் ஜுரம் போன்ற பாதிப்புகள் அகலும்.

ஆடாதோடை இலைச்சாற்றை வெறுமனே பருகினால், ஒவ்வாமை அல்லது சூட்டினால் உண்டாகும் வயிற்றுபோக்குகள் குணமாகும்.

🧂🧂🧂🧂🧂🧂

ஆடாதோடை இலைச்சாற்றை தேனுடன் கலந்து பருகிவர, இரத்த கொதிப்பு, மஞ்சள் காமாலை போன்ற வியாதிகள் விலகிவிடும்.

🧂🧂🧂🧂🧂🧂

ஆடாதோடை இலைச்சாற்றுடன் தேன் கலந்து அத்துடன் பனங்கற்கண்டு அல்லது கருப்பட்டி எனும் பனை வெல்லம் சேர்த்து, தினமும் இரண்டு அல்லது மூன்றுவேளை பருகிவர, சுவாசக் கோளாறுகளால் உண்டாகும் இரத்த வாந்தி, நுரையீரலில் சளி மிகுதியால் உண்டாகும் மூச்சுத்திணறல், வறட்டு இருமல் மற்றும் இரத்தம் கலந்து வரும் சளி போன்ற பாதிப்புகள் விரைவில் நீங்கி, உடல் நலம் சீராகும்.

🧂🧂🧂🧂🧂🧂

இந்த சாற்றை பெரியவர்கள் ஒரு தேக்கரண்டியில் பாதி அளவும், சிறுவர்கள் அதில் பாதி அளவும் பருகிவந்தாலே, வியாதிகள் விலகிவிடும்.

🧂🧂🧂🧂🧂🧂

ஆடாதோடை இலைகள் இரண்டு, வெற்றிலை இரண்டு ஐந்து மிளகு மற்றும் சிறு துண்டு சுக்கு இவற்றை நீரில் இட்டு காய்ச்சி, குடிநீராக அருந்திவந்தால், கடுமையான சளியால் உண்டான உடல் வலிகள் மற்றும் நெஞ்சு சளி பாதிப்புகள் விரைந்து நீங்கிவிடும்.

🧂🧂🧂🧂🧂🧂

ஆடாதோடை இலைச்சாற்றை ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து, இருநூறு மிலி காய்ச்சிய பாலில் சேர்த்து பருகிவர, உடல் சூட்டினால் உண்டாகும் பேதி எனும் வயிற்றுப்போக்கு மற்றும் இரத்தம் கலந்த வயிற்று போக்கு குணமாகும்.

🧂🧂🧂🧂🧂🧂

உடலில் ஏற்பட்ட விஷப்பாதிப்புகள் அகல, விஷம் முறிய, ஆடாதோடை இலைகள், துளசி இலைகள், குப்பைமேனி இலைகள் இவற்றை கைப்பிடி அளவு எடுத்து, ஐந்தில் ஒரு பங்கு அளவு நீராக சுண்டக்காய்ச்சி பருகவேண்டும்.

🧂🧂🧂🧂🧂🧂

ஆடாதோடை இலைகளை சிவனார் வேம்பு இலைகளுடன் அரைத்து பாதி எலுமிச்சை அளவு உட்கொண்டு பின்னர் சுடுநீர் பருகிவர, உடலின் உள்ளே உள்ள கட்டிகள், தோல் நமைச்சல், சொறி மற்றும் பூச்சிகள் கடிப்பதால் உண்டான விஷங்கள் விலகிவிடும்.

🧂🧂🧂🧂🧂🧂

ஆடாதோடை இலைகளுடன் வேப்பிலை, அரிவாள்மனைப்பூண்டு இலை, சிரியா நங்கை இலை ஆகியவற்றை சம அளவில் அரைத்து, தோலில் உள்ள புண்கள் மீது இட்டுவர, புண்கள் யாவும் தழும்புகள் இன்றி மறைந்துவிடும்.

🧂🧂🧂🧂🧂🧂

இறுக்கமான உள்ளாடைகள் அணிவதால் இடுப்பில் ஏற்படும் புண்களின் பாதிப்புகள் நீங்கி அவற்றின் தழும்புகள் மறைய, ஆடாதோடை இலைகளுடன் குப்பைமேனி இலைகளை கலந்து அரைத்து, இடுப்புப்புண்களின் மீது தடவி வர வேண்டும்.

🧂🧂🧂🧂🧂🧂

ஆடாதோடை இலைகள், காய்கள் இவற்றை கைப்பிடி அளவு எடுத்து அரைத்து, மூன்று டம்ளர் நீரில் ஒரு டம்ளர் நீராக காய்ச்சி, தினமும் இரண்டு வேளை சாப்பிட்டுவர, சரும வியாதிகளான படை, ஊறல், விக்கல், வாந்தி வயிற்றுவலி போன்ற பாதிப்புகள் குணமாகும்.

🧂🧂🧂🧂🧂🧂

குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படும் சளித்தொல்லைகள் நீங்க :

ஆடாதோடை இலைகளை உலர்த்தி பொடியாக்கி, தினமும் தேனில் கலந்து குழந்தைகளைப் பருகவைத்துவர, குழந்தைகளை அதிகம் பாதிக்கும் இரைப்பு, சளி இருமல் தொல்லைகளை போக்கும். ஆடாதோடை இலைகளில் உள்ள உயிர்ச்சத்தான பச்சையம் குழநதைகளின் நெஞ்சில் உள்ள சளியைக் கரைத்து, நீடித்த இருமல் தொண்டைக்கட்டு போன்ற பாதிப்புகளை சரிசெய்து, குழநதைகளின் உடல்நலனை மேம்படுத்தும்.

இந்த மருந்தை, ஒரு மண்டலம் எனும் அளவு அதாவது நாற்பத்தெட்டு நாட்கள் தினமும் விடாமல் குழந்தைகள் பருகிவரச் செய்தால், குழந்தைகளுக்கு எப்போதும், இருமல் சளி போன்ற சுவாச பாதிப்புகள் அணுகாது.

தொண்டை கிருமி தொற்றை தடுக்கும் ஆடாதோடை மூலிகை! - Anti-throat herb! | பெமினா  தமிழ்

🧂🧂🧂🧂🧂🧂

குழந்தைகளுக்கு நெஞ்சு சளியால் ஏற்படும் இரைப்பை உடனே சரிசெய்ய, ஆடாதோடை இலைகளை மையாக அரைத்து, குழந்தைகளின் நெஞ்சில் தடவிவர, நெஞ்சு சளி உடனே கரைந்து, சுவாசம் சீராகும்.

🧂🧂🧂🧂🧂🧂

ஆடாதோடை வேருடன் கண்டங்கத்திரி வேர் சேர்த்து காய்ச்சிய நீரில் திப்பிலி சேர்த்து பருகிவர, வறட்டு இருமல் உள்ளிட்ட அனைத்துவகை இருமலும் ஓடிவிடும்.

🧂🧂🧂🧂🧂🧂

இந்தக்கலவையை தேனில் கலந்து தினமும் தொடர்ந்து இரண்டு வேளைகள் சாப்பிட்டுவர, நரம்பு சுருட்டல், சளியினால் ஏற்படும் ஜன்னிக்காய்ச்சல் சுவாச இழுப்பு தசை வலிகள் போன்றவை குணமாகும்.

🧂🧂🧂🧂🧂🧂

ஆடாதோடை வேர், ஆடாதோடை பூ இலை இவற்றை பொடியாக்கி, தினமும் பாலில் கலந்து வருகிவர, உடல் சூட்டினால் உண்டாகும் சுவாச பாதிப்புகள் மற்றும் இரைப்பு இருமல் போன்ற பாதிப்புகள் அகலும்.

🧂🧂🧂🧂🧂🧂

கழுத்து வலி, கை, கால் மூட்டு வலி, தோள்பட்டை வலி இவைகளுக்கு ஆடாதோடை காய்ந்த இலையுடன்  வசம்பு, மஞ்சள், சுக்கு இவைகளை சம அளவு எடுத்து இடித்து அதனுடன் தவிடு சேர்த்து துணியில் கிளி பொட்டலமாகக்  கட்டி சட்டியில் வைத்து சூடாக்கி வலி உள்ள இடங்களில் ஒற்றடம் கொடுத்தால் வலிகள் நீங்கும்.

🧂🧂🧂🧂🧂

மிகினும் குறையினும் நோய்செய்யும் அளவோடு பயன்படுத்தி நலமோடு வாழ்வோம்.

🌷🌷🌷🌷🌷

உடல் ஆரோக்கியமாக  இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்

🦚🦚🦚🦚

உடல் நல குறைபாடுகளையும்  சரிசெய்ய இயற்கை வாழ்வியல் முறை சார்ந்த  ஆலோசனைகள் வழங்கபடும்.

🦚🦚🦚🦚🦚

நன்றி: பெருசங்கர், 🚍ஈரோடு  மாவட்டம், பவானி.              

செல் நம்பர் 7598258480, 6383487768.

((வாட்ஸ் அப்))  7598258480

குரு வாழ்க குருவே துணை

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

N.P. RAMESH: 9489666102.

இது போன்ற தகவல் பெற

No comments:

Post a Comment

நெருப்பு வளைய சூரிய கிரகணம் Ring of Fire Solar Eclipse.

நெருப்பு வளைய சூரிய கிரகணம் Ring of Fire Solar Eclipse புதன்கிழமை அக்டோபர் 2- ம் தேதி   வானத்தில் தோன்றவுள்ளது . பூமிக்கும் சூரிய...