உடலின் ஆக்சிஜன் அளவை SMS அனுப்பும் கருவியை கண்டுபிடித்த பட்டதாரி மாணவர்.
விழுப்புரத்தை சேர்ந்தவர் முகமது சாகுல்(25). இன்ஜினியரான இவர், மனித உடலில் ஆக்சிஜன் பற்றாக்குறையை உடனே எச்சரிக்கும் புதிய கருவியான ஆக்சிஜன் அலர்ட் சேஃப்டி டிவைஸ் ஒன்றை ஸ்மார்ட் வாட்ச் வடிவில் கண்டுபிடித்துள்ளார். இந்த சாதனத்தில் சிம்கார்டு ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. கையில் வாட்ச் கட்டுவதை போல, இந்த சாதனத்தை அணிந்து கொள்ள வேண்டும். அப்படி அணிந்து கொள்பவருக்கு, அவருடைய உடலில் ஆக்சிஜன் அளவு குறைவாக இருந்தால் தெரிய வரும்.
அதாவது, ஆக்சிஜன் அலர்ட் சேஃப்டி டிவைசில் பொருத்தப்பட்டுள்ள சிம் கார்டில், யாருடைய எண்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதோ, அந்த எண்களுக்கு முதலில் மெசேஜ் போகும். அடுத்து அழைப்பு போகும். அதன்பிறகு அவர்களுடைய செல்போன் வைப்ரேட் ஆகும். இதையடுத்து சம்பந்தப்பட்ட நபருக்கு உடலில் ஆக்சிஜன் அளவு குறைவாக இருப்பது தெரிய வரும்.
வீட்டில் தனியாக இருப்பவர்கள், இதனை வாங்கி கையில் அணிந்து கொண்டால், அவர்களுக்கு ஆக்சிஜன் அளவு குறைவாக இருப்பது தெரிய வந்தால், உடனடியாக அதில் பதிவு செய்யப்பட்டுள்ள அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் எண்களுக்கு தகவல் போய் சேரும். அப்போது, உடனடியாக அவர்கள் வந்து, சம்பந்தப்பட்ட நபரை காப்பாற்றுவதற்கு ஏதுவாக இருக்கும். காப்புரிமை வழங்க கோரிக்கை: முகமது சாகுல், ஏற்கனவே கல்லூரியில் படிக்கும்போது கார் விபத்தை தடுக்கும் கருவி ஒன்றை தயாரித்து சாதனை படைத்துள்ளார். கொரோனா நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்து வழங்கும் மினி கார் ஒன்றை ரிமோட் மூலம் இயக்குவதையும் கண்டுபிடித்துள்ளார்.
https://chat.whatsapp.com/GU0BJhBILJc3oySzsedd6J
இந்த WhatsApp குழுவில் இணையவும்.
நன்றி.
இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
மேலும் படிக்க
Super sir
ReplyDeleteThank you
Delete