Sunday, August 15, 2021

சூரிய ஆற்றல், காற்று ஆற்றல் மற்றும் ஓசோன் அளவீடுகள் ஆகியவற்றை ஆய்வு நடத்திய அன்னா மாணி நினைவு தினம் இன்று (ஆகஸ்டு 16, 2001).

சூரிய ஆற்றல், காற்று ஆற்றல் மற்றும் ஓசோன் அளவீடுகள் ஆகியவற்றை ஆய்வு நடத்திய அன்னா மாணி நினைவு தினம் இன்று (ஆகஸ்டு 16, 2001).

அன்னா மாணி ஆகஸ்டு 23, 1918ல் பீருமேடுதிருவாங்கூரில் பிறந்தார். அவரது தந்தை ஒரு குடிசார் பொறியாளர். அவரது குடும்பத்தில் எட்டு குழந்தைகளில் இவர் ஏழாவது குழந்தை. அவரது குழந்தைப் பருவத்தில் பெருவேட்கையுடைய வாசகராக இருந்தார். அவர் வைக்கம் சத்தியாக்கிரகத்தின் போது காந்தியின் நடவடிக்கைகள் மூலம் ஈர்க்கப்பட்டார். தேசிய இயக்கதின்பால் ஈர்க்கப்பட்டுஅவர் கதர் ஆடைகள் மட்டுமே அணிய முடிவு எடுத்தார். அவர் நடனத்தைத் தொடர விரும்பினார். மருத்துவம் பயில வேண்டும் என்று ஆர்வம் கொண்ட போதிலும்இயற்பியல் மீது கொண்ட பற்றால் இயற்பியல் கற்க முற்பட்டார். 1939 ஆம் ஆண்டில்மெட்ராஸில் உள்ள பச்சையப்பாஸ் கல்லூரியில்இயற்பியல் மற்றும் வேதியியலில் பி.எஸ்சி ஹானர்ஸ் பட்டம் பெற்றார். 1940 ஆம் ஆண்டில்பெங்களூரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸில் ஆராய்ச்சிக்கான உதவித்தொகை பெற்றார். 

மாநிலக் கல்லூரிசென்னையில் படிப்பை முடித்த பிறகுஅவர் பேராசிரியர் ச.வெ.இராமன் கீழ்மாணிக்கம் மற்றும் வைர ஒளியியல் பண்புகள் ஆராய்ச்சியில் வேலை செய்தார். அவர் ஐந்து ஆராய்ச்சி கட்டுரைகள் எழுதிய போதிலும்இயற்பியலில் முதுகலை பட்டம் இல்லை என்பதால்முனைவர் பட்டம் அவருக்கு மறுக்கப்பட்டது. அவர் இயற்பியல் படிப்பைத் தொடர பிரிட்டன் சென்றார் என்றாலும்அவர் இம்பீரியல் காலேஜ் லண்டனில் வளிமண்டலவியல் கருவி மயமாக்கல் படிப்பை தேர்ந்தேடுத்தார். அவர் வானிலை கருவிகளில் நிபுணத்துவம் பெற்றார்.  1948 ல் இந்தியா திரும்பிய பிறகுஅவர் புனேவில் உள்ள வானிலை ஆராய்ச்சி துறையில் சேர்ந்தார். அவர் வளிமண்டலவியல் கருவியாக்கம் பற்றிய பல ஆராய்ச்சி கட்டுரைகள் வெளியிட்டார். 

அன்னா மாணி 1976 ஆம் ஆண்டில் இந்திய வானிலை ஆராய்ச்சி துறை துணை இயக்குனராக ஓய்வு பெற்றார். 1980ல் 'The Handbook for Solar Radiation data for India மற்றும் 1981 ல். Solar Radiation over India இரண்டு புத்தகங்களை எழுதியுள்ளார்.  அவர் 1987ல் KR ராமநாதன் பதக்கம் வென்றார். அவர் இந்திய வானிலை ஆராய்ச்சி துறையின் துணை இயக்குநராக பணி புரிந்தார். அவர் வளிமண்டலவியல் கருவி மயமாக்கல் துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை அளித்தார். அவர் சூரிய மற்றும் காற்று ஆற்றல் அளவீடுகள்ஓசோன் அளவீடுகள் ஆகியவற்றை ஆய்வு நடத்தி ஏராளமான ஆய்வேடுகளைப் வெளியிட்டார். அன்னா மாணி 1994ல் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுஆகஸ்டு 16, 2001ல் தனது 82வது அகவையில் திருவனந்தபுரத்தில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.

Source By: Wikipedia

தகவல்: இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.


இது போன்ற தகவல் பெற

https://chat.whatsapp.com/JLgK0szSQzoGrB39M90W94

இந்த WhatsApp  குழுவில் இணையவும்.

நன்றி.

தகவல்: இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

                                                       மேலும் படிக்க 

No comments:

Post a Comment

லட்சக்கணக்கில் சம்பளம்.. இஸ்ரோ வேலை! டிகிரி போதும்.. எப்படி விண்ணப்பிப்பது?

லட்சக்கணக்கில் சம்பளம்.. இஸ்ரோ வேலை! டிகிரி போதும்.. எப்படி விண்ணப்பிப்பது? இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவில் (ISRO) Indian Space Re...