Saturday, August 21, 2021

செப்.1 ஆம் தேதி பள்ளிகள் திறப்பதில் தமிழக அரசு உறுதி : அமைச்சர்.

செப்.1 ஆம் தேதி பள்ளிகள் திறப்பதில் தமிழக அரசு உறுதி : அமைச்சர்.

செப்டம்பர் 1ம் தேதி முதல் 9, 10, +1, +2 வகுப்புகளுக்கு பள்ளியை திறக்க பள்ளிக் கல்வித்துறை ஆலோசனை செய்துவருகிறது என, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். இவ்விவகாரத்தில் பள்ளி திறப்பு குறித்து அரசு உறுதியாக இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்தபோது இத்தகவல்களை அவர் பகிர்ந்துள்ளார். மேலும் அவர் பேசுகையில், மதுரையை தொடர்ந்து, பள்ளிக்கல்வித்துறை சார்பில் திருச்சியிலும் கலைஞர் நூலகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் உறுதியளித்துள்ளார்.

முன்னதாக இன்று காலை, தமிழ்நாட்டில் ஊரடங்கை நீட்டிப்பது பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச்செயலாளர், மருத்துவத்துறை செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அரசு உத்தேசித்துள்ள நிலையில், அது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டதாக சொல்லப்பட்டது. அதன்முடிவாகவே பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் இந்த பேட்டியும் இருக்குமென பார்க்கப்படுகிறது.







இது போன்ற தகவல் பெற
https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc

நன்றி.

தகவல்: இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

                                                       மேலும் படிக்க 

🛑🤔 நாம் பிறந்ததில் இருந்து நம் உடலில் வளராத உறுப்பு எது?

🛑✍️ TNPSC-ஆன்லைனில் தமிழக அரசு இலவச பயிற்சி.

🛑✍️ தேசிய அளவில் 35,000 ரூபாய் வரை கல்வி உதவித்தொகை பெற ஓர் வாய்ப்பு -National Scholarship Exam (NSE – 2021).

🛑👏 Facebook, Instagram செயலிகளுக்கு மாற்றாக புதிய  இந்திய செயலி. வீட்டிலிருந்து தினமும் ரூ.500 வரை சம்பாதிக்கலாம்.

🛑✍️நீங்கள் நினைத்தவை எல்லாம் நடக்கிற வாழ்க்கை ரகசியம்- காணொளி.

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

No comments:

Post a Comment

Notification for Student’s Registrations in ISRO START Programme

Notification for Student’s Registrations in ISRO START Programme. இஸ்ரோ ஆன்லைன் படிப்பு பதிவு பதிவுகளுக்கான அறிவிப்பு. ISRO has an active sp...