Saturday, August 21, 2021

நீட் தேர்வு மையங்கள் இணையதளத்தில் தகவல் வெளியானது.

நீட் தேர்வு மையங்கள் இணையதளத்தில் தகவல் வெளியானது.

செப்டம்பர் 12-ஆம் தேதி மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் நடைபெறவுள்ளது. 198 நகரங்களில் இந்த ஆண்டு நீட் தேர்வு நடைபெறவுள்ளது. கடந்த ஜூலை 13ஆம் தேதி முதல் நீட் தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு தொடங்கி ஆக்ஸ்ட் 10 வரை நடைபெற்றது. அதன்பிறகு விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்வதற்கு 14ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது.

தற்போது நீட் நுழைவுத் தேர்வு நடைபெறவுள்ள தேர்வு மையங்கள் பற்றி தேசிய தேர்வு முகமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நீட் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளவர்கள் http://neet.nta.nic.in என்ற இணையதளத்தில் தங்கள் தேர்வு மையத்தை அறிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தேர்வு மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஓஎம்ஆர் தாளை பூர்த்தி செய்யும் நடைமுறை குறித்தும் இணையதளத்தில் தேர்வர்கள் அறிந்துகொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

தேர்வு மையங்கள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் கணிசமாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற தகவல் பெற

நன்றி.

தகவல்: இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

                                                       மேலும் படிக்க 

🛑🤔 நாம் பிறந்ததில் இருந்து நம் உடலில் வளராத உறுப்பு எது?

🛑✍️ TNPSC-ஆன்லைனில் தமிழக அரசு இலவச பயிற்சி.

🛑✍️ தேசிய அளவில் 35,000 ரூபாய் வரை கல்வி உதவித்தொகை பெற ஓர் வாய்ப்பு -National Scholarship Exam (NSE – 2021).

🛑👏 Facebook, Instagram செயலிகளுக்கு மாற்றாக புதிய  இந்திய செயலி. வீட்டிலிருந்து தினமும் ரூ.500 வரை சம்பாதிக்கலாம்.

🛑✍️நீங்கள் நினைத்தவை எல்லாம் நடக்கிற வாழ்க்கை ரகசியம்- காணொளி.

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

No comments:

Post a Comment

Notification for Student’s Registrations in ISRO START Programme

Notification for Student’s Registrations in ISRO START Programme. இஸ்ரோ ஆன்லைன் படிப்பு பதிவு பதிவுகளுக்கான அறிவிப்பு. ISRO has an active sp...