Wednesday, August 25, 2021

TET - ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும்.

TET - ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும்.

ஆசிரியர் பணியில் சேர்வதற்கு மத்திய, மாநில அரசுகள் மூலம் ஆசிரியர் தகுதித் தேர்வு எனப்படும் டெட் தேர்வுகள் நடத்தப்படுவது வழக்கம். இதில் பெறப்படும் சான்றிதழ் 7 ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும். 7 ஆண்டுகள் முடிந்த பின் மீண்டும் தேர்வு எழுத வேண்டும் அல்லது மறுமதிப்பீட்டு முறை மூலம் சான்றிதழை நீட்டிக்க வேண்டும்.

இதில் மொத்தம் இரண்டு தேர்வுகள் நடத்தப்படும். முதல் தேர்வில் தேர்ச்சி பெற்றால் இடைநிலை ஆசிரியராகவும், 2ம் தேர்வில் தேர்ச்சி பெற்றால் பட்டதாரி ஆசிரியராகவும் பணிக்கு சேர முடியும். இந்த நிலையில் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுபவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ் வாழ்நாள் முழுக்க செல்லும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

7 ஆண்டுகள் என்று இல்லாமல் இனி வாழ்நாள் முழுக்க டெட் சான்றிதழை பயன்படுத்த முடியும். இதற்காக தனியாக சான்றிதழ் பெற வேண்டிய கட்டாயம் கிடையாது. இனிமேல் மீண்டும் மீண்டும் தேர்வு எழுத வேண்டிய கட்டாயம் கிடையாது என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. சமீபத்தில்தான் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ்கள் ஆயுள் முழுவதும் செல்லும் என்று மத்திய அரசு தெரிவித்து இருந்தது. தற்போது தமிழ்நாடு அரசும் தமிழ்நாட்டில் டெட் தேர்வு எழுதியவர்களின் சான்றிதழ் வாழ்நாள் முழுக்க செல்லும் என்று அறிவித்துள்ளது.


இது போன்ற தகவல் பெற
https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc
இந்த Telegram  குழுவில் இணையவும்.
https://chat.whatsapp.com/JLgK0szSQzoGrB39M90W94
இந்த WhatsApp  குழுவில் இணையவும்.

No comments:

Post a Comment

லட்சக்கணக்கில் சம்பளம்.. இஸ்ரோ வேலை! டிகிரி போதும்.. எப்படி விண்ணப்பிப்பது?

லட்சக்கணக்கில் சம்பளம்.. இஸ்ரோ வேலை! டிகிரி போதும்.. எப்படி விண்ணப்பிப்பது? இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவில் (ISRO) Indian Space Re...