Monday, September 13, 2021

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரையிலான நகை கடன் தள்ளுபடி.

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரையிலான நகை கடன் தள்ளுபடி.

தமிழக சட்டப்பேரவையில் 2021-22ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிதிநிலை அறிக்கையை தாக்கல்செய்தார். இதையடுத்து, நிதிநிலை அறிக்கை குறித்த மானியக்கோரிக்கை மீதான விவாதம் கடந்த 23 நாட்களாக நடைபெற்றது. இதில் 30க்கும் மேற்பட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று மட்டும் 20 மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன. ஆகஸ்ட் 13ஆம் தேதி தொடங்கிய சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் ஐந்து சவரன் வரை அடகு வைத்து பெற்ற கடன் தொகை தள்ளுபடி செய்யப்படும் என்று சட்டசபியில் இன்று முதல்-அமைச்சர்  ஸ்டாலின் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை பெறப்பட்ட நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும். தகுதியின் அடிப்படையில் மட்டுமே நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும். உண்மையான ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் நகைக் கடன் தொகை தள்ளுபடி செய்யப்படும். 

கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்றவர்கள் குறித்து 51 விதமான தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன. கூட்டுறவு வங்ககளில் நகைக்கடன் பெற்றவர்களின் விவரங்கள் கடந்த ஒரு மாத காலமாக சேகரிக்கப்பட்டது.மேலும், கூட்டுறவு சங்கம் சார்பாக யாருக்கெல்லாம் கடன் தள்ளுபடி என்ற விவரம் விரைவில் வெளியிடப்படும் என கூறினார்.

 ரூபாய் 6000 கோடி அளவிற்கான நகை கடன் தள்ளுபடியை முதல்-அமைச்சர் ஸ்டாலின் பேரவையில் அறிவித்தார்.

                                          





இது போன்ற தகவல் பெற
https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc
இந்த Telegram  குழுவில் இணையவும்.
https://chat.whatsapp.com/JLgK0szSQzoGrB39M90W94
இந்த WhatsApp  குழுவில் இணையவும்.

No comments:

Post a Comment

விண்வெளியில் முளைத்த காராமணி விதை இஸ்ரோ சாதனை

விண்வெளியில் முளைத்த காராமணி விதை இஸ்ரோ சாதனை. நாட்டின் சொந்த விண்வெளி மையம் அமைக்கும் முயற்சியின் ஒருபகுதியாக நுண் புவி ஈர்ப்ப...