Saturday, September 25, 2021

வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘குலாப்’ புயல் – வானிலை ஆய்வு மையம்.

வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘குலாப்’ புயல் – வானிலை ஆய்வு மையம். 

வங்கக்கடலில் புதிதாக ‘குலாப்’ புயல் உருவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி இருந்த நிலையில் அது புயலாக வலுப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, அந்த புயலுக்கு ‘குலாப்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இது பாகிஸ்தானால் பரிந்துரைக்கப்பட்ட பெயராகும். குலாப் புயல் ஞாயிற்றுக்கிழமை மாலை மேற்கு நோக்கி நகர்ந்து கோபால்பூருக்கும் கலிங்கப்பட்டினத்திற்கும் இடையே கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் செப்டம்பர் மாதத்தில் புயல் உருவாவது அரிதான ஒன்று. கடந்த 2005ஆம் ஆண்டு பியார் என்ற புயலும் , 2018ஆம் ஆண்டு டாயி என்ற புயலும் உருவானது. தற்போது மூன்றாவதாக குலாப் என்ற புயல் உருவாகி உள்ளது. புயல் எச்சரிக்கையை தொடர்ந்து நாகப்பட்டினம் துறைமுகம் மற்றும் காரைக்கால் தனியார் துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.







இது போன்ற தகவல் பெற
https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc
இந்த Telegram  குழுவில் இணையவும்.
https://chat.whatsapp.com/JLgK0szSQzoGrB39M90W94
இந்த WhatsApp  குழுவில் இணையவும்.

No comments:

Post a Comment

காப்புப்பிரதி (Backup) செய்ய மறவாதே...!!! இழந்தால் ஏங்காதே!" (World Backup Day).

காப்புப்பிரதி (Backup) செய்ய மறவாதே...!!! இழந்தால் ஏங்காதே!"  (World Backup Day). தரவு காப்புப்பிரதி என்றால் என்ன? தரவு காப்புப்பிரதி எ...