Tuesday, October 12, 2021

சர்வதேச மனநல தினம் (அக்டோபர் 10).

 சர்வதேச மனநல தினம் (அக்டோபர் 10).

உடல் நலனுக்கு மனநலம் மிகவும் அவசியம் என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலம் அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா இன்று கூறினார்மனநல விழிப்புணர்வு பிரச்சார வாரத்தை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் இன்று முதல் அனுசரிக்கிறதுஉலக மனநல தினத்தில் இது நிறைவு பெறுகிறது.

மனநலப் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை சர்வதேச அளவில் ஏற்படுத்துவதற்கும் மனநலத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளைத் திரட்டுவதற்கும் அக்டோபர் 10-ம் தேதி உலக மனநல தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

கொவிட்-19 காரணமாக தினசரி வாழ்க்கை குறிப்பிடத்தக்க அளவில் மாற்றமடைந்துள்ள சமயத்தில் இந்த ஆண்டின் உலக மனநல தினம் வருகிறதுமக்களிடையே பல்வேறு மனநல கவலைகளை கொவிட் ஏற்படுத்தியுள்ளதுமத்திய சுகாதார அமைச்சரின் வழிகாட்டுதலின் கீழ்மனநல கோளாறுகளை சுற்றியுள்ள பிம்பங்களை உடைக்க மக்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் மனநல விழிப்புணர்வு பிரச்சார வாரம் அனுசரிக்கப்படுகிறது.

மனநல விழிப்புணர்வு பிரச்சார வாரத்திற்கான திட்டமிடப்பட்ட நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகயுனிசெப்பின் உலக குழந்தைகள் அறிக்கையை மத்திய சுகாதாரம்குடும்ப நலம்ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா இன்று வெளியிட்டார்.

21-ம் நூற்றாண்டில் குழந்தைகள்இளம்பருவத்தினர் மற்றும் பராமரிப்பாளர்களின் மன ஆரோக்கியத்தைப் பற்றிய ஒரு விரிவான பார்வையை இந்த அறிக்கை வழங்குகிறதுஅறிக்கையில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளபடிகொவிட்-19 தொற்றுநோய் குழந்தைகளின் மன ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.



இது போன்ற தகவல் பெற

https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc

நன்றி.
இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

No comments:

Post a Comment

லட்சக்கணக்கில் சம்பளம்.. இஸ்ரோ வேலை! டிகிரி போதும்.. எப்படி விண்ணப்பிப்பது?

லட்சக்கணக்கில் சம்பளம்.. இஸ்ரோ வேலை! டிகிரி போதும்.. எப்படி விண்ணப்பிப்பது? இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவில் (ISRO) Indian Space Re...