Tuesday, October 12, 2021

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த மூவருக்கு அறிவிப்பு.

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த மூவருக்கு அறிவிப்பு.


2021 ம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பரிசு, அமெரிக்காவை சேர்ந்த டேவிட் கார்டு, ஜோஸ்வா ஆங்கிரிஸ்ட், கெய்டோ இம்பென்ஸ் ஆகிய 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பரிசு தொடர்பான அறிவிப்பை ஸ்வீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரில் ராயல் சுவீடிஷ் அகாடமி நோபல் பரிசு தேர்வுக்குழு அறிவித்திருக்கிறது. அந்த அறிவிப்பின்படி, டேவிட் கார்டுக்கு ஒரு விருது முழுவதுமாகவும், ஜோஸ்வா ஆங்கிரிஸ்ட் - கெய்டோ இம்பென்ஸூக்கு இணைந்து ஒரு விருதும் அளிக்கப்படுவதாக தெரிகிறது. 

தொழிலாளர் தொடர்பான பொருளாதாரத்தில் அளித்த பங்களிப்பிற்காக டேவிட் கார்டுக்கு இந்த பரிசு வழங்கப்பட்டுள்ளது. போலவே ஜோஷுவா ஆங்கிரிஸ்ட் மற்றும் கைடோ இம்பென்ஸ் ஆகியோர், காரண உறவுகள் குறித்து செய்த பகுப்பாய்விற்காக நோபல் பரிசை பெறுகின்றனர். இவர்களால் உருவாக்கப்பட்ட கட்டமைப்பானது அவதானிப்பு தரவுகளுடன் பணிபுரியும் ஆராய்ச்சியாளர்களால் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.





இது போன்ற தகவல் பெற

https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc

நன்றி.
இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

No comments:

Post a Comment

லட்சக்கணக்கில் சம்பளம்.. இஸ்ரோ வேலை! டிகிரி போதும்.. எப்படி விண்ணப்பிப்பது?

லட்சக்கணக்கில் சம்பளம்.. இஸ்ரோ வேலை! டிகிரி போதும்.. எப்படி விண்ணப்பிப்பது? இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவில் (ISRO) Indian Space Re...