உலக விண்வெளி வாரம் - இணையவழி கலந்துரையாடல்-அக் 4 முதல் 10 வரை.
ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 4 முதல் 10-ம் தேதி வரை உலக விண்வெளி வாரம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ‘விண்வெளியில் பெண்கள்’ என்ற கருப்பொருளில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.
இதையொட்டி, மத்திய அரசின்விஞ்ஞான் பிரச்சார் நிறுவனம், அறிவியல் பலகை மற்றும் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் இணைந்து இணையவழியில் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளன.
இந்நிகழ்ச்சி நாளை (அக். 4)தொடங்கி அக்.10-ம் தேதி வரை தினமும் மாலை 6 மணிக்கு நடைபெறும். இதில் விண்வெளி குறித்த பல்வேறு தலைப்புகளில் விஞ்ஞானிகள் தமிழில் உரையாற்ற உள்ளனர். இந்த நிகழ்வை ஜும் செயலி வழியாகவும், அறிவியல் பலகையின் யுடியூப் சேனல் (ariviyal palagai) நேரலையிலும் இலவசமாக காணலாம்.
விஞ்ஞானிகள் உரையாடல்
அக்.5-ம் தேதி ‘விண்வெளித் துறையில் பெண்கள்’, அக்.6-ல்‘காகரின் முதல் ககன்யான் வரை’, அக்.7-ல் ‘உலக ஏவு வாகனங்கள்’, அக்.8-ல் ‘இரண்டாவது தேனிலவு ஏன்? எப்படி? ’, அக்.9-ல் ‘ராக்கெட் மீட்பு மறுபயன்பாடு’, அக்.10-ம் தேதி இரவு ‘வான்நோக்குதல்’ ஆகிய தலைப்புகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் விஞ்ஞானிகள் கலந்து கொண்டு பேச உள்ளனர்.
இந்த நிகழ்ச்சிகளில் தரப்பட்டுள்ள ஜூம் செயலியின் அடையாள எண், கடவுச்சொல் (Meeting ID: 867 8031 1101, Passcode: 567091) ஆகியவற்றைப் பயன்படுத்தி கலந்து கொள்ளலாம் என்று அறிவியல் பலகை அமைப்பு தெரிவித்துள்ளது.
Source By: Hindutamil
No comments:
Post a Comment