Monday, October 4, 2021

TNPSC குரூப் 4 VAO தேர்வு – முந்தைய ஆண்டு, வினாத்தாள்கள்.

TNPSC குரூப் 4 VAO தேர்வு – முந்தைய ஆண்டு, வினாத்தாள்கள்.

டிஎன்பிஎஸ்சி சார்பில் நடத்தப்படும் குரூப் 4 தேர்வு மூலம் இளநிலை உதவியாளர் (Junior Assistant), தட்டச்சர் (Typist), சுருக்கெழுத்து தட்டச்சர் (Steno-Typist), கிராம நிர்வாக அலுவலர் (Village Administrative Officer), வரித் தண்டலர் (Bill Collector), நில அளவர் (Field Surveyor), வரைவாளர் (Draftsman) ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த தேர்வுக்கான அறிவிப்புகள் அக்டோபர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2 வருடங்களுக்கு மேலாக குரூப் 4 தேர்வுகள் அறிவிக்கப்படாததால் இந்த வருடம் ஏராளமான பணியிடங்கள் நிரப்பப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.

TNPSC குரூப் 4 தேர்வுக்கான கல்வித்தகுதி:

மேற்கண்ட பணியிடங்களுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சியும், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்தர் பதவிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் அரசு தொழில்நுட்ப தட்டச்சு தேர்வில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை அல்லது முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறிப்பாக தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்தில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கூடுதல் வாய்ப்புகள் வழங்கப்படுவது குறிப்பட்ட தக்கது.

தேர்வு முறை:

எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் பதவி கொடுக்கப்படும். இதில் எழுத்துத் தேர்வு 200 வினாக்களுடன் 300 மதிப்பெண்களை உள்ளடக்கியது. ஒவ்வொரு கேள்விக்கும் 1.5 மதிப்பெண்களுடன் 2 பகுதிகளாக கேள்விகள் கேட்கப்படும். தேர்வர்கள் அவர்களுக்கான மொழியை தேர்வு செய்து தமிழ் அல்லது ஆங்கிலம் பாடத்தில் இருந்து கேட்கப்படும் 100 கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். இவை அனைத்தும் பொது அறிவை சார்ந்ததாக இருக்கும். குறிப்பாக 75 பொது அறிவு வினாக்களுடன், 25 திறனறி தேர்வுகள் அனைத்தும் அப்ஜக்டிவ் வகையில் கேட்கப்படும்.

TNPSC குரூப் 4 2012 ஆம் ஆண்டு வினாத்தாள்கள் (தேர்வு தேதி : 07/07/2012): 

TNPSC குரூப் 4 2013-2014 ஆம் ஆண்டு வினாத்தாள்கள் (தேர்வு தேதி : 25/08/2013): 

TNPSC குரூப் 4 2015-2016 ஆம் ஆண்டு வினாத்தாள்கள் (தேர்வு தேதி : 06/11/2016): 

TNPSC குரூப் 4 2015-2018 ஆம் ஆண்டு வினாத்தாள்கள் (தேர்வு தேதி : 11/02/2018): 

இது போன்ற தகவல் பெற
https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc
இந்த Telegram  குழுவில் இணையவும்.
https://chat.whatsapp.com/FaFcmdwPG6yK8uSDjgUvXQ
இந்த WhatsApp  குழுவில் இணையவும்.

நன்றி.
தகவல்: இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

No comments:

Post a Comment

விண்வெளியில் முளைத்த காராமணி விதை இஸ்ரோ சாதனை

விண்வெளியில் முளைத்த காராமணி விதை இஸ்ரோ சாதனை. நாட்டின் சொந்த விண்வெளி மையம் அமைக்கும் முயற்சியின் ஒருபகுதியாக நுண் புவி ஈர்ப்ப...