Saturday, October 30, 2021

புத்தனாம்பட்டி, நேரு நினைவு கல்லூரியில் இந்திய அணுக்கருவியலின் தந்தை, ஓமி பாபா பிறந்த நாள் விழா.

புத்தனாம்பட்டி, நேரு நினைவு கல்லூரியில் இந்திய அணுக்கருவியலின் தந்தை,  ஓமி பாபா  பிறந்த நாள் விழா.


நேரு நினைவு கல்லூரியில் இயற்பியல் துறை சார்பாக 30.10.2021ல் இந்திய அணுக்கருவியலின் தந்தை, ஓமி பாபா பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில்  கதிரியக்க மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பிரிவு தலைவர், IGCAR கல்பாக்கம் டாக்டர் ஆர். வெங்கடேசன், கலந்து கொண்டு  இந்திய அணுக்கருவியலின் தந்தை,  ஓமி பாபா  சாதனை குறித்து பேசினார். 

மேலும் அவர் பேசுகையில் மேலை நாடுகளுக்கு இணையாக, உலகின் 12 வது நாடக அணுசக்தியில் உயர வழிவகுத்தவர் ஓமி பாபா. ஐன்ஸ்டீனின் ஆற்றல் சமன்பாட்டை வைத்து தோரியும் அணுவை பயணிப்படுத்தி ஆற்றல் தயாரிக்கும் முறையை உருவாக்கியவர் ஓமி பாபா. ஏனென்றால் உலகிலேயே 3 வது அதிக தோரியம் கிடைக்கும் நாடு இந்தியா ஆகும். வளிமண்டலத்தில் உள்ள கார்பன் எவ்வாறு சிதைகிறது, அதை வைத்து எவ்வாறு ஒரு பொருளின் வயதை கணக்கிட முடியும் போன்ற பல மாணவர்களின் கேள்விகளுக்கு தெளிவான பதில் கூறினார். அணு கழிவுகள் அதன் கதிரியக்கம் வெளியிட மிக நீண்ட காலம் எடுப்பதால், பாதுகாப்பாக பயன்படுத்தினால் மனிதர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதை தெளிவாக எடுத்து கூறினார்.


கதிரியக்க மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பிரிவு அறிவியல் உதவியாளர் IGCAR கல்பாக்கம், ராமு பேசுகையில் யுரேனியம், புளுட்டோனியம் மற்றும் தெரியும் மூன்றையும் பயன்படுத்தும் அணு உலை உலகிலேயே கல்பாக்கதில் மட்டுமே உள்ளது என்பது மாபெரும் சாதனையாகும் என்பதை எடுத்துக் கூறினார்.  மேலும் தோரியம் எவ்வாறு அணு உலைகளில் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கிறார்கள் என்பது பற்றியும், காமினி பரிசோதனை அணு உலைகளில் எவ்வாறு பரிசோதனை நடைபெறுகிறது என்பது பற்றியும் தெளிவாக எடுத்து கூறினார்.


முன்னதாக கல்லூரி முதல்வர் அ.ரா. பொன்.பெரியசாமி அனைவரையும் வரவேற்றார். துறை தலைவர் பேராசிரியர் நாகராஜன் சிறப்பு விருத்தினரை அறிமுகப்படுத்தி பேசினார்.  கல்லூரி தலைவர் பொறியாளர் பொன்.பாலசுப்ரமணியன்,   கல்லூரி செயலர்  பொன்.ரவிச்சந்திரன், ஒருங்கிணைப்பாளர் முனைவர். மீனாட்சி சுந்தரம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். இறுதியாக பேராசிரியர் இரா.கபிலன் நன்றியரை வழங்கினார். பேராசிரியர் ரமேஷ் விழா ஏற்பாடுகளை செய்து இருந்தார்.








புத்தனாம்பட்டி, நேரு நினைவு கல்லூரியில் இந்திய அணுக்கருவியலின் தந்தை,  ஓமி பாபா  பிறந்த நாள் விழா. http://keelainews.com/2021/10/31/ege-81/

புத்தனாம்பட்டி, நேரு நினைவு கல்லூரியில் இந்திய அணுக்கருவியலின் தந்தை,  ஓமி பாபா  பிறந்த நாள் விழா. https://ntrichy.com/2021/10/31/trichy-nehru-college/

இது போன்ற தகவல் பெற

நன்றி.
இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

No comments:

Post a Comment

லட்சக்கணக்கில் சம்பளம்.. இஸ்ரோ வேலை! டிகிரி போதும்.. எப்படி விண்ணப்பிப்பது?

லட்சக்கணக்கில் சம்பளம்.. இஸ்ரோ வேலை! டிகிரி போதும்.. எப்படி விண்ணப்பிப்பது? இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவில் (ISRO) Indian Space Re...