Thursday, October 7, 2021

முதன் முறையாக விண்வெளியில் திரைப்பட படப்பிடிப்பு.

முதன் முறையாக விண்வெளியில் திரைப்பட படப்பிடிப்பு.

உலக வரலாற்றில் முதல்முறையாக திரைப்படம் ஒன்று விண்வெளியில் படமாக்கப்பட உள்ளது. "சேலஞ்" (Challenge) என்று பெயரிடப்பட்ட அந்த படத்தில், விண்வெளியில் உள்ள வீரர் ஒருவருக்கு இதயக் கோளாறு ஏற்படுவதாகவும், அவரை குணப்படுத்த பூமியிலிருந்து மருத்துவர் ஒருவர் செல்வதாகவும் கதை அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக ரஷ்ய படக்குழுவினர் பைக்கானுர் விண்வெளி ஏவுதளத்திலிருந்து சோயஸ் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றனர்.

சேலஞ் திரைப்படத்தை பிரபல இயக்குநர் க்லிம் ஷிபென்கோ (Klim Shipenko) இயக்குகிறார். யூலியா பெரெசில்ட் (Yulia Peresild) அவசர மருத்துவராக விண்வெளிக்கு பயணம் செய்யும் அறுவை சிகிச்சை நிபுணராக நடிக்கிறார். விண்வெளி பயணத்திற்காக தூக்கம் மறந்து, உணவு உட்கொள்ளாமல் பயிற்சி எடுத்தாக இயக்குநர் க்லிம் ஷிபென்கோ கூறியுள்ளார். இதுகுறித்து தெரிவித்த இயக்குநர் க்லிம் ஷிபென்கோ, ‘கடந்த 3 மாத காலமாக அற்புதமான உலகில் நாங்கள் உள்ளோம். பயிற்சிகள் கடுமையானதாக இருந்தன. உறங்க நேரமில்லை. பூமியில் நடத்தும் படப்பிடிப்பை விட குறைவான நேரமே இருந்தது. எங்கள் வாழ்க்கை மாறிவிட்டது. விண்வெளி வாழ்க்கையை மாற்றும்’ என்று தெரிவித்தார்.

மருத்துவ சோதனைகள், புவி ஈர்ப்பு சக்தி இல்லாத நிலையில் பயிற்சி, உணவுக் கட்டுப்பாடுகள் என 3 மாத கால கடுமையான பயிற்சிக்குப் பின்னர் படக்குழுவினர் விண்வெளி சென்றுள்ளனர். விண்வெளி வீரர் அன்டன் ஷ்காப்லெரோவ் குழுவின் தலைவராகவும், உடல் நிலை பாதிக்கப்படும் வீரராகவும் நடிக்க உள்ளார். இயக்குநர் க்லிம் ஷிபென்கோ, ஒளிப்பதிவாளராகவும், படத்தில் நடிக்கும் நடிகையே ஆடை வடிவமைப்பாளராகவும் செயல்படுகின்றனர். 12 நாள்கள் படப்பிடிப்புக்கு பின்னர் அனைவரும் பூமி திரும்புகின்றனர். சேலஞ் திரைப்படத்தை ரஷ்யாவின் விண்வெளி மையமான ரோஸ்கோஸ்மோசும் அரசு தொலைக்காட்சி நிறுவனமான சேனல் ஓன்-னும் இணைந்து தயாரிக்கின்றன.


இது போன்ற தகவல் பெற
https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc
இந்த Telegram  குழுவில் இணையவும்.
https://chat.whatsapp.com/FaFcmdwPG6yK8uSDjgUvXQ
இந்த WhatsApp  குழுவில் இணையவும்.

நன்றி.
தகவல்: இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

No comments:

Post a Comment

நெருப்பு வளைய சூரிய கிரகணம் Ring of Fire Solar Eclipse.

நெருப்பு வளைய சூரிய கிரகணம் Ring of Fire Solar Eclipse புதன்கிழமை அக்டோபர் 2- ம் தேதி   வானத்தில் தோன்றவுள்ளது . பூமிக்கும் சூரிய...