பொன்தாரணி..போய் வா நீ..😢😢😢-இ.கிருபா BBA-NMC.
போய் வா நீ..
தேவதை உன்
பிஞ்சு மனதில்
நஞ்சு விதைத்த
நயவஞ்சகன் நாளை
தண்டனை பெறலாம்..
சாதிப்பெயர் சொல்லி
தப்பிக்கலாம்..
கட்சிப்பெயர் சொல்லி
உன் வழக்கும்
கடந்து போகலாம்...
பொண்தாரனி...
போய் வா நீ...
எது நடந்தாலும்
நீ வரப்போவதில்லை..
உனக்கான நீதி எதுவோ...?
நீதி தேவதையும்
அறியாது...
கண்கள் கட்டுண்டிருப்பதால்..
பொள்ளாச்சி
கண்ணகிகளின் கற்பு
சூரையாடப்படுகையில்..
மன்னர் சபைகளிள்
அவள்களின் மனுக்கள்
நிராகரிக்கப்பட்டு,
திருநாவுக்கரசர்கள்
காப்பாற்றப்பட்டனர்...
நீ இறந்ததுபோல
உனக்கான நீதியும்
இறந்துபோகலாம்..
பொண்தாரனி
போய் வா நீ..
கல்விக்காய் போன இடத்தில்
கலவி தொந்தரவோ...
அகரம் சொன்னவனின் வாய்களிள்
அநாவஸ்ய பேச்சோ...
எதிர் நாட்டில்
இப்படி நடந்தால்..
ஏழெட்டு படம் எடுப்போம்
இசைப்பிரியா
என்ற தலைப்பில்...
உள்நாடு என்பதால்..
உன் கற்பு ஒரு பெரிய
விஷயம் இல்லை...
பொண்தாரனி..
வளவன்களும்
சீமான்களும்
வாயடைப்பர்...
வரும் தேர்தலில்
உன்னையும் வைத்து அரசியல்
செய்வர்...
பொண்தாரனி
போய் வா நீ...
போன இடத்தில்
கண்ணகியை கண்டால்..
கண்டிப்பாய் சொல்...
மீண்டும் பெண் பிறப்பெடுத்து
பூமி வந்தால்
அவளுக்கும் இதே நிலமை தான் என..
பொள்ளாச்சியையும்
உதாரணமாய் சொல்...
பொண்தாரனி..
போய் வா நீ...
✍️கவிதை✍️:இ.கிருபா BBA, நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
From Sri Lanka.
இது போன்ற தகவல் பெற
நன்றி.
இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், p.ramesh704@gmail.com மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப் அனுப்பிட வேண்டுகிறோம்.
மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

No comments:
Post a Comment