Saturday, November 27, 2021

முனைவர் பட்டப்படிப்பு (Ph.D) படிக்கும் மாணவர்களுக்கு தலா 1 லட்சம் கல்வி ஊக்கத்தொகை.

முனைவர் பட்டப்படிப்பு (Ph.D) படிக்கும் மாணவர்களுக்கு தலா 1 லட்சம் கல்வி ஊக்கத்தொகை.


தமிழகத்தில் முனைவர் பட்டப்படிப்பு (PhD) படிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித் தொகை ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 2013-2014 ஆம் கல்வியாண்டு முதல், முழுநேர முனைவர் பட்டப்படிப்பு படிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ மாணவியருக்கு கல்வி உதவித் தொகையாக தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. இதையடுத்து, அடுத்து 2017 - 2018 ஆம் கல்வி ஆண்டில் மாணவர்கள் எண்ணிக்கை உயரத்துவங்கியது.

இந்நிலையில், நடப்பு கல்வியாண்டில் கல்வி உதவித்தொகை வழங்க 6 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசு தாக்கல் செய்த புதிய பட்ஜெட்டில், முனைவர் பட்டப் படிப்புகளுக்கான கல்வி உதவித் தொகை திட்டம், அதிகமானவர்கள் தரக்கூடிய வகையில் மறு சீரமைக்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் கல்வி உதவித் தொகைக்கு ஒரு லட்சம் ரூபாய் என்ற அளவில் உயர்த்தப்படும். இந்தத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு 16 கோடி ரூபாயாக உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து நிதி ஒதுக்கீட்டை 16 கோடி ரூபாயாகவும், மாணவர்களுக்கான உதவித் தொகை 50 ஆயிரம் ரூபாயிலிருந்து 1 லட்சம் ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு வருடமும் 1600 மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கவும், தகவல் பெறும் மாணவர்களின் குடும்ப வருமானத்தை 8 லட்சம் ரூபாயாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அரசாணையில் குறிப்பிட்டுள்ளதாவது., "முனைவர் பட்டப் படிப்புகளுக்கான கல்வி உதவித்தொகைத் திட்டமும் அதிக எண்ணிக்கையிலான மாணவர்களுக்குப் பயனளிக்கும் வகையில் மறுசீரமைக்கப்பட்டு, கல்வி உதவித்தொகை வருடத்திற்கு ஒரு இலட்சம் ரூபாய் என்ற அளவில் உயர்த்தப்படும், இத்திட்டதிற்க்கான நிதி ஒதுக்கீடு 16 கோடி ரூபாயாக உயர்த்தப்படும்.


ஆதிதிராவிடர் நல ஆனையர், 2021-2022 ஆம் நிதியாண்டிற்கு ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் வழங்கப்பட்டு வரும் முழுநேர முனைவர் பட்டப் படிப்பிற்கான ஊக்கத் தொகைத் திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிருத்துவ ஆதிதிராவிடர் இன மாணாக்கர்களின் குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ.8.00 இலட்சமாக உயர்த்தி, ஆண்டிற்கு 1600 மாணாக்கர்களுக்கு ஊக்கத் தொகையினை ஒரு மாணவருக்கு ரூ.1,00,000/- ஆக உயர்த்தியும், ரூ.15,59,00,000/-னை கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்தும், அடுத்து வரும் நிதியாண்டு (2022-2023) முதல் ரூ.16,00,00,000/- கோடி ஒதுக்கீடு செய்து தருமாறு அரசைக் கேட்டுக்கொண்டுள்ளார்.


இது போன்ற தகவல் பெற

நன்றி.

இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

No comments:

Post a Comment

13 லட்சம் பார்வையாளர்களை கடந்த நமது மாணவர்கள் கல்விக்களஞ்சியம் குறித்த மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கருத்துக்கள் (Feedback).

  13  லட்சம்  பார்வையாளர்களை கடந்த நமது மாணவர்கள் கல்விக்களஞ்சியம்  குறித்த  மாணவ ,   மாணவிகள்   மற்றும்   ஆசிரியர்கள்  கருத்துக்கள் (Feedba...