ATM பயன்படுத்துபவர்களுக்கு அதிர்ச்சி செய்தி.
வரவிருக்கும் ஜனவரி 1, 2022 முதல் வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஏடிஎம் பரிவர்த்தனை கட்டணங்கள் உயர உள்ளது. இந்த கட்டண அதிகரிப்புக்கு பிறகு ஏடிஎம் கார்டு பரிவர்த்தனைகளுக்கு கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் எனலாம். ஜனவரி 1, 2022ல் இருந்து கட்டணத்தினை உயர்த்திக் கொள்ள ரிசர்வ் வங்கி அனுமதி கொடுத்துள்ளது.
இந்த அறிவிப்பின்படி, ஜனவரி 1, 2022 முதல் ஏடிஎம் மூலம் பணம் எடுக்க மற்றும் மற்ற பயன்பாடுகளுக்கு கட்டணங்கள் விதிக்கப்படவுள்ளது. தற்போதைய நிலவரப்படி வங்கிகளில் ஒரு மாதத்திற்கு 5 முறை இலவசமாக பணம் எடுத்துக் கொள்ளும் முறை இருந்து வருகின்றது. அதன் பிறகு பணம் எடுத்தால் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 20 ரூபாயில் இருந்து 21 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்புக்கு பிறகு இனி 5 முறைக்கு மேலாக வித்டிராவல் செய்யும்போது அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். இது குறித்து ஜூன் 10, 2021ல் ரிசர்வ் வங்கி அறிவிப்பினை கொடுத்தது. ஆக 5 பரிவர்த்தனைகளுக்கு மேல் செய்யும் போது கட்டணங்கள் செலுத்த வேண்டியிருக்கும். மேலும் பணம் அல்லாத பரிவர்த்தனைக்கும் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
இதில் மெட்ரோ நகரங்களில் மூன்று முறையும், மெட்ரோ அல்லாத நகரங்களில் 5 முறையும் இலவச பரிவர்த்தனையை செய்து கொள்ளலாம். ஆக ஜனவரி 1ல் இருந்து 21 ரூபாய் கட்டணம் + இதனுடன் வரியும் சேர்த்து செலுத்த வேண்டியிருக்கும். ஆக தற்போதைய கட்டண விகிதங்களை விட, ஜனவரியில் இருந்து கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
இது போன்ற தகவல் பெற
நன்றி.
இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், p.ramesh704@gmail.com மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப் அனுப்பிட வேண்டுகிறோம்.
மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

No comments:
Post a Comment