Saturday, December 25, 2021

பள்ளி, கல்லூரிகளுக்கு முக்கிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.

பள்ளி, கல்லூரிகளுக்கு முக்கிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது மாணவர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் பள்ளிக் கல்வித்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்றால் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. அதனால் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டு அனைத்து மாணவர்களுக்கும் ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருவதால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் கடந்த செப்டம்பர் மாதம் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளும், நவம்பர் மாதம் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது.

அவ்வாறு பள்ளிகள் திறக்கப்பட்டாலும் கொரோனா தொற்று பரவல் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் மாணவர்கள் அனைவரும் அரசு அறிவுவுத்தலின்படி முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி, சானிடைசர் பயன்படுத்தி கைகளை கழுவுதல் உள்ளிட்ட நெறிமுறைகளை முறையே பின்பற்றி வருகின்றனர். ஆனால் தற்போது மாணவர்களின் கற்றல் நலன் கருதி சுழற்சி முறை இன்றி ஜனவரி 3 முதல் தினசரி வகுப்புகள் நடத்த பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதனை தொடர்ந்து தமிழகத்தில் தீவிரமாக ஓமைக்ரான் தொற்று பரவி வருவதால் மாணவர்களுக்கு தொடர்ந்து வகுப்புகள் நடத்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் மாணவர்களின் நலன் கருதி ஓமைக்ரான் தொற்று பரவலை தடுக்கும் விதமாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதில் விடுதிகளில் மாணவர்களுக்கு சில்வர் தட்டுக்கு பதிலாக ஒருமுறை மட்டும் உபயோகப்படுத்தும் வாழ மட்டையிலான தட்டுகளை பயன்படுத்துமாறு அறிவித்துள்ளது. மேலும் வகுப்பறையில் குளிர்சாதன கருவிகள் உபயோகிக்க கூடாது என்றும், கூட்டம் கூடும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.


இது போன்ற தகவல் பெற

நன்றி.

இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

No comments:

Post a Comment

லட்சக்கணக்கில் சம்பளம்.. இஸ்ரோ வேலை! டிகிரி போதும்.. எப்படி விண்ணப்பிப்பது?

லட்சக்கணக்கில் சம்பளம்.. இஸ்ரோ வேலை! டிகிரி போதும்.. எப்படி விண்ணப்பிப்பது? இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவில் (ISRO) Indian Space Re...