Tuesday, December 7, 2021

இன்று முக்கிய அறிவிப்பு வெளியிடுகிறது TNPSC.

இன்று முக்கிய அறிவிப்பு வெளியிடுகிறது TNPSC.


TNPSC தேர்வுகள் குறித்த வருடாந்திர அட்டவணை டிசம்பர் 7 (செவ்வாய்கிழமை) அன்று வெளியிடப்படும் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது. இதனால் தேர்வர்கள் அட்டவணையை மகிழ்ச்சியுடன் எதிர்ப்பார்த்து உள்ளனர்.

தமிழகத்தைப் பொறுத்தவரை அரசுத்துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் போட்டித்தேர்வுகள் நடத்தப்பட்டு நிரப்பப்பட்டு வருகிறது. TNPSC யானது, குரூப் 4, விஏஓ முதல் குரூப் 1 பணியிடங்களுக்கான தேர்வுகளை நடத்துவதோடு, பிற அரசுத்துறை பணியிடங்களுக்கும் தேர்வுகளை நடத்தி வருகிறது. இதற்காக TNPSC ஒவ்வொரு வருடமும் அந்த வருடத்தில் நடைபெற உள்ள தேர்வுகளின் பட்டியலை வருடாந்திர அட்டவணையாக வழக்கமாக வெளியிடும். ஆனால் கடந்த ஆண்டு முதல் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டதால் அட்டவணையில் திட்டமிட்டபடி தேர்வுகள் நடைபெறவில்லை. இதனால் பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இந்த ஆண்டிற்கான வருடாந்திர அட்டவணையும் வெளியாகாமல் இருந்தது.

மேலும், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பல தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்தது. இருப்பினும் உதவி அரசு வழக்கறிஞர், ஜியாலஜிஸ்ட்,  ஐடிஐ முதல்வர் மற்றும் நகர திட்டமிடல் பொறியியலாளர் உள்ளிட்ட ஒரு சில பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகின. இருப்பினும் வருடாந்திர அட்டவணை வெளியிடப்படாததால், தேர்வர்கள் அதிகம் எதிர்ப்பார்க்கும் தேர்வுகளான குரூப் 4, குரூப் 2, குரூப் 1 உள்ளிட்ட தேர்வுகள் எப்போது நடக்கும் என்று எதிர்பார்த்திருந்தனர்.

இந்தநிலையில், 2022 ஆம் ஆண்டுக்கான TNPSC தேர்வுகள் குறித்த வருடாந்திர அட்டவணை டிசம்பர் 7 (செவ்வாய்கிழமை) அன்று வெளியிடப்படும் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

இதன்படி, TNPSC ஆண்டு திட்டம், குரூப்-1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 தேர்வு தேதி செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 7) காலை 11 மணிக்கு வெளியாக உள்ளது. சென்னை டி.என்.பி.எஸ்.சி அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்து தேர்வாணையத் தலைவர் பாலச்சந்திரன் அறிவிக்க இருக்கிறார்.




இது போன்ற தகவல் பெற

நன்றி.

இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

No comments:

Post a Comment

40 ஆண்டுகளுக்குப் பிறகு விண்வெளிக்கு போகும் இந்திய விண்வெளி வீரர்!

40 ஆண்டுகளுக்குப் பிறகு  விண்வெளிக்கு போகும் இந்திய விண்வெளி வீரர்! சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆய்வு செய்ய இருக்கும் முதல் இந்தியர்.  40 ஆ...