Monday, January 10, 2022

தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிப்பு ; கட்டுப்பாடுகள் என்னென்ன? 3 முக்கிய அறிவிப்பு.

தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிப்பு ; கட்டுப்பாடுகள் என்னென்ன? 3 முக்கிய அறிவிப்பு.

வரும் 31-ஆம் தேதி வரையில் கொரோனா நோய்த் தொற்று கட்டுப்பாடுகளை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

கொரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் வகையிலும், பரவி வரும் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் நோயைக் கருத்தில் கொண்டும், மக்கள் நலன் கருதியும் எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் பொதுமக்கள் ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் கூட்டம் கூடுவதால் நோய்த்தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக, மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்த கருத்தின் அடிப்படையிலும் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு பின்வரும் கூடுதல் கட்டுப்பாடுகளுடன் 31-1-2022 வரை நடைமுறைப்படுத்தப்படும்.

>14-01-2022 முதல் 18-01-2022 அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொது மக்களுக்கு அனுமதி இல்லை.

>16-01-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு.

>பொங்கல் பண்டிகைக்காக வெளியூர் செல்லும் பொதுமக்கள் நலன் கருதி பொது பேருந்துகளில் அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் 75% மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாளை காலை 11 மணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாமக்கல் கவிஞர் மாளிகையில் அனைத்து துறை செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. அனைத்து துறைகளின் வளர்ச்சி பணிகள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 









No comments:

Post a Comment

நிலவில் சந்திரயான் கண்டறிந்த ரகசியம்.. உலகமே திரும்பிப்பார்த்த தருணம்.

நிலவில் சந்திரயான் கண்டறிந்த ரகசியம்.. உலகமே திரும்பிப்பார்த்த தருணம். ஒரு நாளைக்கு 16 முறை சூரிய உதயத்தையும் மறைவையும் பார்க்கும் விண்வெளி ...