தமிழகத்தில் கல்லூரி தேர்வுகள் ஒத்திவைப்பு.
கொரோனா பரவல் நாளுக்கு நாள் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. தற்போதுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் இன்றுடன் முடிவுக்கு வரவுள்ள நிலையில் அடுத்தகட்ட ஊரடங்கு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
நோய் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு ஆகியவை அமல்படுத்தப்பட்டுள்ளன. பாதிப்பு அதிகரித்து வருவதால் மேலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன.
இதன் அடிப்படையில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வகுப்புக்கள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு வருகின்றன. கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் காரணமாக ஜனவரி 20 வரை கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
ஜனவரி 21ஆம் தேதி முதல் சென்னை பல்கலைக் கழகத்தில் பருவத் தேர்வுகள் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா பரவ காரணமாக பல்கலைக் கழகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி ஜனவரி 21ஆம் தேதி முதல் தொடங்க இருந்த பருவத் தேர்வுகளை சென்னை பல்கலைக் கழகம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது. நேரடியாக மட்டுமே தேர்வுகள் நடத்தப்படும். ஆன்லைன் மூலம் தேர்வுகள் ரத்து செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.
ஜனவரி 21 முதல் தொடங்கப்படும் அனைத்து பருவத் தேர்வுகளும் ஒத்திவைக்கப்படும் என சென்னைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்படும் போது மீண்டும் தேர்வுகள் எப்போது நடத்தப்படும் என அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இது போன்ற தகவல் பெற
நன்றி.
இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், p.ramesh704@gmail.com மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப் அனுப்பிட வேண்டுகிறோம்.
🛑👍👌 உனக்கான வாய்ப்பை உருவாக்கி கொள்-அனைத்து மாணவர்களும் காண வேண்டிய பதிவு.
மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.
No comments:
Post a Comment