Friday, January 7, 2022

புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியின் வேதியியல் துறையில் கருத்தரங்கம்.

புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியின் வேதியியல் துறையில் கருத்தரங்கம். 


திருச்சி மாவட்டம் புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரியில் வேதியியல் முதுநிலை மற்றும் ஆராய்ச்சி  துறை சுய நிதிப் பிரிவு சார்பில் "அன்றாட வாழ்வில் வேதியலின் பயன்பாடு" பற்றி மெய்நிகர் பயன்முறை காகித விளக்கக்காட்சி கருத்தரங்கம்  இணைய வழியாக 7.1.2022 வெள்ளிக்கிழமை அன்று காலை 10 மணிக்கு துவங்கியது. இந்நிகழ்ச்சியின் வரவேற்புரையை இரண்டாமாண்டு முதுநிலை மாணவி செல்வி. ஜனனி வழங்கினார். இந்நிகழ்ச்சியை மெருகூட்டும் விதமாக கல்லூரியின் தலைவர் Er.பொன். பாலசுப்ரமணியன், கல்லூரியின் செயலாளர் திரு. பொன். ரவிச்சந்திரன், முதல்வர் Dr. A.R.பொன் பெரியசாமி, ஒருங்கிணைப்பாளர் Dr. M.மீனாட்சி சுந்தரம் மற்றும் சுய நிதிப் பிரிவு வேதியியல் துறைத் தலைவி  Dr.A.கஸ்தூரி ஆகியோர் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்.  இந்நிகழ்ச்சியில் 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு தங்களது கட்டுரையை சமர்ப்பித்தனர். இவைகளில் சிறந்த மூன்று கட்டுரைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 

மேலும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இக்கருத்தரங்கினை வேதியியல் துறை உதவிப்  பேராசிரியர்கள் இளவேனில் மற்றும் அம்சா  ஒருங்கிணைத்தனர்.   இந்நிகழ்ச்சிக்கு இளநிலை  மூன்றாம் ஆண்டு மாணவி செல்வி. ஆர்த்தி நன்றியுரை வழங்கினார். வேதியியல் துறை பேராசிரியர்களின் ஒத்துழைப்போடு தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கப்பட்ட கருத்தரங்கம்  நாட்டுப் பண்ணுடன் இனிதே நிறைவுற்றது.

No comments:

Post a Comment

பகுதி சூரிய கிரகணம் மார்ச் 29, 2025- Partial solar eclipse March 29, 2025.

பகுதி சூரிய கிரகணம் மார்ச் 29, 2025 Partial solar eclipse March 29, 2025. சூரிய கிரகணம் என்பது சூரியன் மற்றும் பூமி இடையில் சந்திரன் ஒரே ந...