Monday, April 4, 2022

நிழல் இல்லா நாள் பயிற்சிப் பட்டறையில் நேரு நினைவு கல்லூரியின் மாணவ மாணவிகள் பங்கேற்பு.

நிழல் இல்லா நாள் பயிற்சிப் பட்டறையில் நேரு நினைவு கல்லூரியின் மாணவ மாணவிகள் பங்கேற்பு.

இந்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பக் கழக விக்ஞான் பிரசாத், தமிழக அரசின் அறிவியல் தொழில் நுட்ப மன்றம், அறிவியல் பலகை, தமிழ்நாடு வானியல் அறிவியல் கழகம் மற்றும் தேசிய கல்லூரி இணைந்து நடத்திய மண்டல அளவிலான நிழல் இல்லா நாள் பயிற்சிப் பட்டறையில் நேரு நினைவு கல்லூரியின் இயற்பியல் பேராசிரியர் பொ. இரமேஷ், இரண்டாம் ஆண்டு முதுகலை இயற்பியல் மாணவன் சு.முரளி, மூன்றாம் ஆண்டு இளநிலை இயற்பியல் மாணவி மு.தனலட்சுமி மற்றும் இரண்டாம் ஆண்டு இயற்பியல் மாணவி த.அருள்ஜோதி ஆகியோர் பங்கு பெற்று நிழலில்லா தினம் நிகழ்வை பரிசோதனை மூலம் ஆய்வு செய்தனர்.




இந்த பயிற்சி பட்டறையில் நிழல் இல்லா நாள் என்றால் என்ன? நமது ஊரில் நிழல் இல்லா நாள் எப்போது வரும்? நிழல் இல்லா நாளை பரிசோதனை மூலம் எவ்வாறு செய்வது? நமது ஊரின் நண்பகல் எவ்வாறு கண்டுபிடிப்பது? சூரியன் உதிக்கும் நேரம் என்ன சூரியன் மறையும் நேரம் என்ன? சரியான கிழக்கு திசை, வடக்கு திசை போன்றவற்றை செயல்முறை மூலம் எவ்வாறு கண்டுபிடிப்பது போன்றவற்றை இப்பயிற்சியில் விளக்கமாக எடுத்துக் கூறினார்கள். மேலும் பூமியின் சுற்றளவை கணித துணைகொண்டு எவ்வாறு கண்டு பிடிப்பது போன்ற பயிற்சியும் கொடுக்கப்பட்டது. இரவில் நட்சத்திரங்களை எவ்வாறு பார்ப்பது சிறந்த நட்சத்திரங்களின் பெயர்கள் என்ன, அவை எவ்வாறு இயங்குகின்றன போன்ற இரவு விண்வெளி நோக்குதலும் நடைபெற்றது.




இது போன்ற தகவல் பெற

நன்றி.

இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

🛑📕 3231 பக்கங்கள் கொண்டTNPSC Overall Previous Year Question.

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

No comments:

Post a Comment

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல்லூரி மாணவர்கள்.

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல...