Tuesday, April 5, 2022

TNPSC : டிஎன்பிஎஸ்சி தேர்வில் புதிய மாற்றம்: கணினி வழித் தேர்வு அறிமுகம்.

TNPSC : டிஎன்பிஎஸ்சி தேர்வில் புதிய மாற்றம்: கணினி வழித் தேர்வு அறிமுகம்.


மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி பணியிட  வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணயம் வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த பணியிடத்துக்கு கணினி வழித் தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி கணினி வழியில் தேர்வு நடத்துவது இது முதன்முறையாகும். 

தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்தின் கீழ் தமிழ்நாடு அரசுப் பணிகள் பெரும்பாலானவற்றுக்கு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. குரூப் 1, குரூப் 2, குரூப் 4 ஆகிய தேர்வுகளுடன் பிற பணியிடங்களுக்கான தேர்வுகளை டின்பிஎஸ்சி நடத்தி வருகிறது. அதன்படி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி பணியிட வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்பை ஏப்ரல் 1ம் தேதி டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.  16 காலியிடங்களை கொண்ட இந்த பணியிடத்துக்கு ஜூன் 19ம் தேதி இரண்டு பகுதிகளாக தேர்வு நடைபெறுகிறது.

காலை 9.30 முதல்  12.30 மணிவரை பாடத் தேர்வும் பிற்பகல் 2 மணி முதல் 5 மணிவரை தமிழ் தகுதித் தேர்வு மற்றும் பொது அறிவுத் தேர்வு நடைபெறும். இந்த இரு தேர்வுகளும் கணினி வழியாக நடத்தப்பட உள்ளது. தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 30ம் தேதி கடைசி நாள் ஆகும்.

இது போன்ற தகவல் பெற

நன்றி.

இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

🛑📕 3231 பக்கங்கள் கொண்டTNPSC Overall Previous Year Question.

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

No comments:

Post a Comment

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல்லூரி மாணவர்கள்.

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல...