Friday, May 20, 2022

TNPSC Group 2: தேர்வு அறை விதிமுறைகள்.

TNPSC Group 2: தேர்வு அறை விதிமுறைகள்.

குரூப் 2 தேர்வுக்கு 9 மணிக்கு பிறகு வரும் தேர்வர்கள் தேர்வு அறைகளில் அனுமதிக்கப்பட மாட்டார் என டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

இந்தநிலையில்தேர்வு கூடத்திற்கு எத்தனை மணிக்குச் செல்ல வேண்டும்தேர்வறையில் என்னென்ன வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் உள்ளிட்ட தகவல்களை பார்ப்போம்.

தேர்வு மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:

முதலில் தேர்வர்கள் பாசிட்டிவ் ஆன மனநிலையில் தேர்வறைக்குச் செல்ல வேண்டும்தேர்வுக்கு தேவையான ஹால்டிக்கெட்பேனா உள்ளிட்ட பொருட்களை மறக்காமல் எடுத்துச் செல்ல வேண்டும்தேர்வர்கள் இது முதல்நிலை தேர்வு என்பதால்எத்தனை வினாக்களுக்கு விடையளித்தல் நமக்கு நல்லது முன்கூட்டியே தீர்மானித்துக் கொள்ள வேண்டும்மேலும் உங்களுக்கு தெரிந்த வினாக்களாக இருந்தால் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க முயற்சிக்கலாம்.

தேர்வு கூடத்திற்கு முடிந்தவரை 8 மணியிலிருந்து 8.30 மணிக்குள் செல்வதுபோல் தயாராகிக் கொள்ளுங்கள்ஏனென்றால்ஏதேனும் சிறு தாமதம் ஏற்பட்டாலும், 8.59 க்குள் உள்ளே சென்று விடலாம்ஏனெனில் 9 மணிக்குப் பிறகு வரும் தேர்வர்களுக்கு அனுமதி இல்லை என தேர்வாணையம் தெரிவித்துள்ளதுஎனவே கஷ்டப்பட்டுஒரு சில வருடங்களாக படித்து வந்த நிலையில்அது வீணாகாமலும்அடுத்த தேர்வுகளுக்கு காத்திருப்பதைத் தடுக்கவும்தேர்வு மையத்திற்கு முன்னதாகவே சென்று விடுங்கள்.

அடுத்ததாக .எம்.ஆர் தாள் உங்களுக்கு கொடுக்கப்பட்டவுன்அது உங்களுக்கு உரியது தானா என நன்றாக சரிபார்த்துக் கொள்ளுங்கள்ஏனெனில் .எம்.ஆர் மாறியிருந்தால்உங்கள் விடைத்தாள் நிராகரிக்கப்படவோ அல்லது மைனஸ் மதிப்பெண்கள் வழங்கப்படவோ வாய்ப்புள்ளதுபின்னர் .எம்.ஆர் படிவத்தில் தேவையான விவரங்களை கவனமுடன் நிரப்புங்கள்.

தேவைப்படுபவர்கள் கைக்கடிகாரம் அணிந்து செல்லலாம்தேர்வறையில் மேற்பார்வையாளர்கள் உங்களுக்கு நேரம் குறித்த தகவல்களை வழங்கலாம்இருப்பினும் தேவைப்படுபவர்கள் அணிந்து செல்லலாம்ஆனால் ஸ்மார்ட் வாட்ச் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளதுஎனவே சாதாரண வாட்ச்களை அணிந்து செல்லுங்கள்.

வினாக்களை ஒரு முறைக்கு இருமுறை படித்து தெளிவான பின் விடையளியுங்கள்பொது அறிவு சார்ந்த கேள்விகளுக்கு கூடுதல் கவனமுடன் செயல்படுங்கள்மேற்கூறிய வழிமுறைகளை கடைபிடித்து உங்கள் தேர்வை சிறப்பாக எழுதுங்கள்.


இது போன்ற தகவல் பெற

நன்றி.

இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

🛑📕 3231 பக்கங்கள் கொண்டTNPSC Overall Previous Year Question.

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

No comments:

Post a Comment

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல்லூரி மாணவர்கள்.

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல...