✍🏻🥥🥥இயற்கை வாழ்வியல் முறை🥥🥥தேங்காய் எண்ணெயின் நன்மைகள்.
🥥🥥🥥🥥🥥
பண்டைய காலத்தில் மேனி பராமரிப்புக்கு தேங்காய் எண்ணெய்தான் அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்தது இன்றைய நவீன உலகில் பலரும் தேங்காய் எண்ணெயை தலையில் தேய்ப்பதே இல்லை. தேங்காய் எண்ணெயைப் போன்று உடலுக்கு நன்மை செய்யும் ஒரு பொருள் வேறு எதுவுமே இல்லை என்பதே அழகியல் நிபுணர்களின் கருத்தாகும்.
🥥🥥🥥🥥🥥
தேங்காய் எண்ணெய் சருமத்தை பாதுகாப்பதில் மிகச்சிறந்த பலனைத் தருகிறது சரும வறட்சியை போக்குவதில் சிறந்த மாய்ஸரைசராக செயல்படுகிறது. இதில் உள்ள கொழுப்புச்சத்து சரும சுருக்கத்தை போக்குகிறது. இதனால் சருமத்திற்கு எவ்வித பக்கவிளைவும் ஏற்படுவதில்லை. சரும நலனை பாதுகாப்பதில் விலைகுறைவான பாதுகாப்பான பொருள் தேங்காய் எண்ணெயாகும்.
🥥🥥🥥🥥🥥
தலைக்கு தேங்காய் எண்ணெய் தேய்த்துக் கொள்வது மிகவும் நல்லது இதனால் தலையின் தோல் பகுதியை வறண்டு விடாமல் தேங்காய் எண்ணெய் பாதுகாக்கும்.
🥥🥥🥥🥥🥥
பணிச்சூழல் காரணமாக மன அழுத்தம் ஏற்படுவது இயல்பு இதனால் முகமானது களை இழந்து காணப்படும். தேங்காய் எண்ணெய் மன அழுத்தம் நீக்கி முகத்தை பொலிவாக்குகிறது தேங்காய் எண்ணெயை ஊற்றி மசாஜ் செய்வதன் மூலம் உடலில் உள்ள தேவையற்ற வலிகள் நீங்கும்.
🥥🥥🥥🥥🥥
தேங்காய் எண்ணெயில் உள்ள பாக்டீரிய எதிர்ப்புப் பொருள் தோல் பூஞ்சை நோய்களை கட்டுப்படுத்துகிறது உடலுக்கு மட்டுல்லாது குடலுக்கும் பாதுகாப்பு தருகிறது ஜீரண சக்தியை சீராக்கி மலச்சிக்கலை நீக்குகிறது. இதனால் தோல்களில் முகத்தில் கரும்புள்ளிகள் ஏற்படுவது நீங்குகிறது.
🥥🥥🥥🥥🥥
அதிகமாக மேக்-அப் போடும் பெண்கள், இரவில் முகத்தை சுத்தம் செய்து விட்டு தேங்காய் எண்ணெயை தடவிக் கொண்டு படுக்கலாம் இதனால் சருமத்திற்கு நல்ல பொலிவு கிடைக்கும்.
🥥🥥🥥🥥🥥
கேரள மாநிலத்தில் இன்றைக்கும் தேங்காய் எண்ணெயின் பயன்பாடு அதிகம் உள்ளது மேனிக்கு உபயோகப்படுத்துவதோடு அன்றாட சமையலுக்கும் தேங்காய் எண்ணெய் உபயோகிப்பதே அவர்களின் அழகின் ரகசியமாகவும் உள்ளது.
🥥🥥🥥🥥🥥
காயம் ஏற்பட்டு ஆறிக்கொண்டிருக்கும் புண்கள், புதிதாக ஏற்பட்ட ரத்த காயங்களில் அடிக்கடி நீர் படுவதை தவிர்க்க வேண்டியிருக்கிறது. இதற்கு நிவாரணமாக அக்காயங்களில் தேங்காய் எண்ணெயை நன்கு தடவுவதன் மூலம் நீர் புகாமல் பாதுகாப்பு ஏற்படுவதோடுஅப்புண்கள் மற்றும் காயங்களை வேகமாக ஆற்றவும் உதவுகிறது.
🥥🥥🥥🥥🥥
தலைமுடி கொட்டுதல், பித்த நரை அல்லது இளநரை, பொடுகு, வழுக்கை ஏற்படுவது போன்ற தலைமுடி சார்ந்த பிரச்சனைகள் ஏராளம் இருக்கின்றன. மேற்சொன்ன பிரச்சனைகள் இருப்பவர்கள் தினந்தோறும் தலைக்கு சுத்தமான தேங்காய் எண்ணெயை தேய்த்து வருவதன் மூலம் தலை முடி சார்ந்த அத்தனை பிரச்சனைகளும் சுலபமாக தீரும்.
🥥🥥🥥🥥🥥
நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பலமாக இருந்தால் தான் எதிர்வரப்போகும் பல வகையான நோய்களில் இருந்து உடலை காக்க முடியும். தேங்காய் எண்ணெய் கொண்டு செய்யப்பட்ட உணவுகளை அதிகம் சாப்பிட்டு வரும் நபர்களுக்கு உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி பலமடைந்து, எதிர்காலத்தில் நோய்கள் ஏற்படாமல் தடுப்பதோடு, ஏற்கனவே பாதித்திருக்கும் நோய்களை உடனடியாக நீக்கும்.
🥥🥥🥥🥥🥥
நமது உடலில் சாப்பிடும் உணவுகளை ஜீரணம் செய்யும் உறுப்புகளாக வயிறு குடல் போன்றவை இருக்கின்றன. வயிறு மற்றும் குடல்களில் ஏற்பட்டும் அல்சர் குடல்களில் தங்கியிருக்கும் நுண்ணுயிரிகள் நச்சுக்கள் மலச்சிக்கல் அஜீரணம் போன்றவை விரைவில் நீங்க தேங்காய் எண்ணெய் கொண்டு செய்யப்பட்ட உணவுகளை தொடர்ந்து சாப்பிடு வருவதன் மூலம் சிறந்த நிவாரணம் பெற முடியும்.
🥥🥥🥥🥥🥥
தினமும் காலையில் எழுந்த உடன் சிறிதளவு தேங்காய் எண்ணெயை வாயில் ஊற்றிக்கொண்டு ஒரு 20 நிமிடங்கள் வாயை நன்கு கொப்பளித்து பிறகு, அந்த எண்ணையை துப்பி விட வேண்டும். இதற்கு ஆங்கிலத்தில் ஆயில் புல்லிங் என்று கூறுவார்கள். இதை தினந்தோறும் செய்து வருபவர்களுக்கு பற்களில் சொத்தை ஏற்படுதல் ஈறுகள் வலுவிழப்பதுவாய் துர்நாற்றம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதை தடுக்கும்
🥥🥥🥥🥥🥥
சிறுநீரகங்களில் கால்சியம் உப்பு அதிகம் சேர்வதால் சிறுநீரக கற்கள் உருவாகிறது இதை தடுக்க அளவுக்கு மீறிய கால்சிய சத்துக்கள் நமது உடலில் சேராமல் பார்த்து கொள்ள வேண்டும் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தி செய்யப்பட்ட உணவுகளை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு சிறுநீரகங்களில் கற்கள் ஏற்படும் வாய்ப்புகள் வெகுவாக குறைகிறது.
🥥🥥🥥🥥🥥
அடிக்கடி டென்ஷன் மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்கள் கொஞ்சம் தேங்காய் எண்ணையை எடுத்து தலையில் தடவி, ஒரு 20 நிமிடங்கள் இரண்டு கைகளாலும் தலையின் அனைத்து பகுதிகளிலும் நன்கு அழுத்தி, மாலிஷ் செய்து வந்தால் எப்படி பட்ட மனம் சார்ந்த பிரச்சனைகளும் நீங்கி உடல் புத்துணர்வு பெறும்
🥥🥥🥥🥥🥥
தேங்காய் எண்ணெய் இயற்கையிலேயே குளிர்ச்சி தன்மை அதிகம் கொண்டதாகும். தேங்காய் எண்ணையால் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் உடல் உஷ்ணம் நீங்கி உடல் சீக்கிரத்தில் குளிர்ச்சி அடையும் தேங்காய் எண்ணையை உடல் மற்றும் தலைக்கு நன்கு தேய்த்த பின்பு குளிப்பதால் உடலில் இருக்கின்ற உஷ்ண நோய்கள் நீங்கும். கண்களும் குளிர்ச்சி பெறும்
🥥🥥🥥🥥🥥
சூரிய வெப்பத்தால் ஏற்படும் அழற்சிக்கு சிகிச்சை சூரிய வெப்பத்தால் ஏற்படும் அழற்சிக்கு சிகிச்சை அளித்திட தேங்காய் எண்ணெய்யை தடவுங்கள். வரும் முன் காப்பது தானே சிறந்தது அதனால் சூரிய ஒளியில் வெளிப்படுவதற்கு முன் உங்கள் சருமம் முழுவதும் தேங்காய் எண்ணெய்யால் மசாஜ் செய்து கொள்ளுங்கள். இதனால் எண்ணெய்யை தடவுங்கள் மேலும் உங்கள் தினசரி உணவில் கூட தேங்காய் எண்ணெய்யை சேர்த்துக் கொள்ளுங்கள். சரும சுருக்கங்களை தடுக்கும் தேங்காய் எண்ணெய் உங்கள் சருமத்திற்கும் அதிக நன்மையை அளிக்கிறது இயற்கையான மாய்ஸ்சுரைசராக விளங்கும் இது உங்கள் சருமத்திற்கு நீர்ச்சத்தை அளித்திடும். அமைதிப்படுத்தும் பண்பை கொண்ட தேங்காய் எண்ணெய் சருமத்தை மென்மையாக்கும். இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் வளமையாக உள்ளதால் சீக்கிரமே வயதாகும் செயல்முறையை எதிர்த்து போராடும். குழந்தையை போன்ற மென்மையான சருமம் வேண்டும் என்றால் தேங்காய் எண்ணெய்யை கொண்டு வாரம் இருமுறையாவது மசாஜ் செய்யுங்கள் உங்கள் உணவிலும் சேர்த்துக் கொள்ளுங்கள்
🥥🥥🥥🥥🥥
தேங்காய் எண்ணெயில் இவ்வளவு பயன்கள் உள்ளது என என்றாவது நினைத்து பார்த்துள்ளீர்களா தேங்காய் எண்ணெய்யை சரியாக பயன்படுத்தினால், உங்கள் வீட்டில் இருந்த படியே பலவித பிரச்சனைகளுக்கு நீங்கள் நிவாரணம் காணலாம் அதனால் தேங்காய் எண்ணெய்யை இன்று முதல் பயன்படுத்த தொடங்குங்கள்
🥥🥥🥥🥥🥥
🌷🌷🌷🌷🌷
மிகினும் குறையினும் நோய்செய்யும் அளவோடு பயன்படுத்தி நலமோடு வாழ்வோம்.
🌷🌷🌷🌷🌷
உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்
🦚🦚🦚🦚
உடல் நல குறைபாடுகளையும் சரிசெய்ய இயற்கை வாழ்வியல் முறை சார்ந்த ஆலோசனைகள் வழங்கபடும்.
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
எல்லாம் உயிர்களும் நலமுடன் வாழ்க🐟
🦚🦚🦚🦚🦚
நன்றி: பெருசங்கர், 🚍ஈரோடு மாவட்டம், பவானி.
செல் நம்பர் 7598258480, 6383487768.
((வாட்ஸ் அப்)) 7598258480
குரு வாழ்க குருவே துணை
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
N.P. RAMESH: 9489666102.
இது போன்ற தகவல் பெற