இஸ்ரோ ஸ்ரீஹரிக்கோட்டாவில் ராக்கெட் ஏவுவதை நேரில் கண்டு களித்த நேரு நினைவுக் கல்லூரி மாணவர்கள்.
நேரு நினைவுக்கல்லூரி இயற்பியல் மற்றும் வேதியியல் துறை சேர்ந்த 60 மாணவ மாணவியல் ராக்கெட் ஏவுதலை நேரில் பார்வையிட்டனர். இஸ்ரோவால் முதல்முறையாக எஸ் எஸ் எல் வி ராக்கெட் இப்போதுதான் ஏவப்பட்டது. அதாவது சிறிய வகை செயற்கைக்கோள் ஏவுவதற்காக பிறந்த செலவில் இந்த புதிய வகை ராக்கெட் இஸ்ரோவால் தயாரிக்கப்பட்டது. இந்த ராக்கெட்டில் EOS-2 எனப்படும் புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் ஏவப்பட்டது.
பள்ளி மாணவர்கள் தயாரித்த 75 செயற்கைக்கோள்களும் இந்த ராக்கெட் வழியாக வெற்றிகரமாக ஏவப்பட்டது. இந்த ராக்கெட் ஏவுதலை நேரடியாக கண்டு களித்த மாணவர்கள் ராக்கெட் தொழில்நுட்பம் பற்றியும் செயற்கைக்கோள் வேலை செய்வததைப் பற்றியும் மிகவும் விளக்கமாக தெரிந்து கொண்டனர்.
"இஸ்ரோவின் SSLV-D1 தவறான வட்டப்பாதையில் வைத்த செயற்கைக்கோள்கள் இனி பயன்படாது" என்று இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) அறிவித்திருக்கிறது.
தமிழ்நாட்டின் அரசு பள்ளிகளைச் சேர்ந்த மாணவிகளின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்ட செயற்கைக்கோள்களை எஸ்எஸ்எல்வி டி1 ராக்கெட் (லாஞ்ச் வெஹிக்கிள்) சுமந்து சென்றது. குறைந்த எடை கொண்ட செயற்கைக்கோள்களை சுமந்து செல்லும் வகையில் இந்த ராக்கெட் வடிவமைக்கப்பட்டிருந்தது. ஆனால், அதன் முதலாவது பயணத்திலேயே நிர்ணயித்த இலக்கில் உள்ள வட்டப்பாதைக்கு பதிலாக நீள் வட்டப்பாதையில் செயற்கைக்கோள்களை ராக்கெட் வைத்ததால் அவை அனுப்பி வைக்கப்பட்ட நோக்கம் நிறைவேறவில்லை.
இது தொடர்பான 12 முக்கிய தகவல்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.
1. 500 கிலோ எடையுள்ள செயற்கைக்கோள்களை 'லாஞ்ச் ஆன் டிமாண்ட்' அடிப்படையில், தாழ்வான புவி வட்டப் பாதைக்கு ஏவுவதற்கு இஸ்ரோ ஒரு சிறிய செயற்கைக்கோள் ஏவும் ஏவூர்தியை எஸ்எஸ்எல்வி டி1 என்ற பெயரில் உருவாக்கியது. இந்த முதலாவது மேம்பாட்டு ஏவூர்தி SSLV-D1/EOS-02 என அழைக்கப்பட்டது. ஆகஸ்ட் 7ஆம் தேதி ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து இந்திய நேரப்படி காலை 9:18 மணிக்கு (IST) இந்த ஏவூர்தி விண்வெளிக்கு செலுத்தப்பட்டது.
2. எஸ்எஸ்எல்வி-டி1 ஏவூர்தியின் பயணம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, 'எஸ்எஸ்எல்வி-டி2 தொடர்பான தகவல்கள் விரைவில் வெளிவரும் என்று இஸ்ரோ அமைப்பு அதன் ட்விட்டர் பக்கத்தில் கூறியது.
3. அத்துடன், "SSLV-D1 ஏவூர்தி, அது சுமந்து சென்ற செயற்கைக்கோள்களை 356 கிமீ வட்டப்பாதைக்கு பதிலாக 356 கிமீ x 76 கிமீ நீள்வட்ட பாதையில் நிலைநிறுத்தியது. அதில் இருந்த செயற்கைக்கோள்களை இனி பயன்படுத்த முடியாது. இந்த பிரச்னை நியாயமான முறையில் அடையாளம் காணப்பட்டுள்ளது. சென்சார் செயலிழப்பைக் கண்டறிந்து, மீட்பு நடவடிக்கையை மேற்கொள்ளும் முயற்சி தோல்வி அடைந்தது. இதை ஒரு குழு ஆய்வு செய்து வழங்கும் பரிந்துரை அடிப்படையில் மேலதிக தகவல்கள் பகிரப்படும்," என்று மற்றுமொரு தகவலை இஸ்ரோ வெளியிட்டது.
4. ஞாயிற்றுக்கிழமை மதியம் 2.48 மணியளவில், SSLV-D1 ராக்கெட் செயற்கைக்கோள்களை தவறான சுற்றுப்பாதையில் நிறுத்தியதால் அது பயன்படுத்த முடியாததாகிவிட்டதாக இஸ்ரோ தலைவர் சோமநாத் தெரிவித்தார்.
5. "ஏவூர்தி பயணத்தின் அனைத்து நிலைகளும் எதிர்பார்த்தபடியே நடந்தன. முதல் நிலை சரியாக இயங்கி பிரிந்தது. இரண்டாவது நிலையும் மூன்றாவது நிலையும் திட்டமிட்டபடியே நடந்து பிரிந்தன. கடைசியில் செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தும் பணியின் கடைசி கட்டத்தில், சில தரவுகள் இழப்பு ஏற்பட்டது. அந்த விவரத்தை நாங்கள் பகுப்பாய்வு செய்து வருகிறோம். அதன் நிலை மற்றும் ஏவூர்தியின் செயல்திறன் பற்றி விரிவான தகவல்களுடன் மீண்டும் தெரிவிக்கிறோம்," என்று இஸ்ரோ தலைவர் சோமநாத் தெரிவித்தார். பரீட்சார்த்த முறையில் இந்த ஏவூர்தி சென்ற நடவடிக்கை வெற்றிகரமாக இருந்தபோதும், அது செயற்கைக்கோள்களை நிர்ணயித்த இடத்தை விட வேறு இடத்தில் வைத்ததால் அதை பயன்படுத்த இயலவில்லை. மற்றபடி இந்த செயற்கைக்கோள் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட புதிய தலைமுறை தொழில்நுட்ப சாதனங்கள், மென்பொருள்கள், பிற கருவிகள் சிறப்பாக இயங்கின. இந்த ஏவூர்தியால் ஏன் சரியான புவி வட்டப்பாதையில் செயற்கைக்கோள்களை நிலைநிறுத்த முடியவில்லை என்பது குறித்து நிபுணர் குழு ஆய்வு செய்து உரிய பரிந்துரைகளை வழங்கும் என்றும் சோமநாத் கூறினார்.
6. முன்னதாக, இஸ்ரோ தனது புதிய சிறிய செயற்கைக்கோள் முதலாவது ஏவூர்தி ராக்கெட்டை (எஸ்எஸ்எல்வி) புவி வட்டப்பாதைக்கு அனுப்பவுள்ளதாக இஸ்ரோ அறிவித்தது. ஆந்திர பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து SSLV-D1 என்ற அந்த ஏவூர்தி, ஞாயிற்றுக்கிழமை காலை 9:18 மணிக்கு, இரண்டு சிறிய செயற்கைக்கோள்களை, பூமத்திய ரேகைக்கு மேலே சுமார் 365 கிமீ தொலைவில் உள்ள தாழ்வான பூமியின் வட்டப்பாதையில் (LEO) நிலைவைக்க திட்டமிடப்பட்டிருந்தது.
7. SSLV-D1 பணியானது 135 கிலோ எடையுள்ள EOS-02 என்ற செயற்கைக்கோளை, சுமார் 37 டிகிரி சாய்வில், பூமத்திய ரேகைக்கு சுமார் 350 கிமீ தொலைவில் உள்ள குறைந்த புவி வட்டப்பாதையில் நிலைவைப்பதாகும். இந்த திட்டத்தின் அங்கமாக AzaadiSAT என்ற செயற்கைக்கோளையும் எஸ்எஸ்எல்வி டி1 சுமந்து சென்றது. இந்த ஆசாதிசாட் என்பது அறிவியல் தொழில்நுட்ப பொறியியல் கணிதத்தை (STEM) பள்ளி அளவில் மாணவிகளிடையே பிரபலப்படுத்துவதற்கான இஸ்ரோவின் முயற்சியாகும். இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை குறிக்கும் வகையில் இந்த செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டது.
8. SSLV ராக்கெட் மூன்று திட நிலைகளில் இயங்கும் வகையில் செயல்திறனைப் பெற்றிருந்தது. அதாவது, pitch-over time-length எனப்படும் 87 t, 7.7 t மற்றும் 4.5 t நிலைகளில் பிரிந்து வட்டப்பாதைக்குச் செல்லும் வகையில் இந்த ராக்கெட் கட்டமைக்கப்பட்டது. உத்தேசிக்கப்பட்ட சுற்றுப்பாதையில் செயற்கைக்கோள் வைக்க திரவ உந்துவிசை வேகம், டிரிம்மிங் தொகுதி மூலம் எட்டப்படுகிறது. இந்த SSLV ஏவூர்தி குறு, சிறு அல்லது நானோ செயற்கைக்கோள்களை (10 முதல் 500 கிலோ எடை கொண்டவை) 500 கிமீ பிளானர் சுற்றுப்பாதையில் நிலைவைக்கும் திறன் கொண்டது என கூறப்பட்டது. இந்த திட்டம் வெற்றிகரமாக அமைந்திருந்தால், தேவையின் அடிப்படையில் விண்வெளிக்கு குறைந்த கட்டணத்தில் செயற்கைக்கோள்களை அனுப்பும் வசதி, இந்த எஸ்எஸ்எல்வி மூலம் சாத்தியமாகியிருக்கும்.
9. இது குறைந்த டர்ன்-அரவுண்ட் நேர வசதியையும், பல செயற்கைக்கோள்களுக்கு இடமளிக்கும் நெகிழ்வுத்தன்மையுடனும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. 34 மீ உயரம், 2 மீ விட்டம் கொண்ட 120 டன் எடை கொண்ட ஏவூர்தியாக இதை இஸ்ரோ உருவாக்கியிருக்கிறது.
10. இதன் அங்கமாக உள்ள EOS-02 என்பது, இஸ்ரோவால் வடிவமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்ட புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் ஆகும். மைக்ரோசாட் வரிசையில் இடம்பெற்றுள்ள இந்த செயற்கைக்கோள், உயர் ஸ்பேஷியல் ரெசல்யூஷன் கொண்ட அகச்சிவப்பு பேண்டில் (இன்ஃப்ரா ரெட் பேண்ட்) இயங்கும் மேம்பட்ட ஆப்டிகல் ரிமோட் சென்சிங்கை வழங்குகிறது. இதன் உள்கூம்பு, ஐஎம்எஸ்-1 செயற்கைக்கோள் கலனின் வடிவத்தைத் தழுவியது.
11. AzaadiSAT என்பது சுமார் 8 கிலோ எடையுள்ள 8U கியூப்சாட் ஆகும். இது 50 கிராம் எடையுள்ள 75 வெவ்வேறு பேலோடுகளைக் கொண்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள பல்வேறு கிராமப்புறங்களைச் சேர்ந்த மாணவிகள் அங்கம் வகித்த 'ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா' என்ற மாணவர் குழுவின் கூட்டுப்பங்களிப்புடன் இந்த பேலோடுகளை கட்டமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
12. அமெச்சூர் ரேடியோ ஆபரேட்டர்களுக்கு குரல் மற்றும் தரவு பரிமாற்றத்தை செயல்படுத்த ஹாம் ரேடியோ அலைவரிசையில் செயலாற்றக் கூடிய UHF-VHF டிரான்ஸ்பாண்டர், அதன் சுற்றுப்பாதையில் அயனியாக்கும் கதிர்வீச்சை அளவிட 'திட நிலை PIN டையோடு' அடிப்படையிலான கதிர்வீச்சு கவுன்ட்டர், ஒரு நீண்ட தூர டிரான்ஸ்பாண்டர் மற்றும் செல்ஃபி கேமிரா போன்றவை, இதன் பேலோடுகளாகும். 'ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா' உருவாக்கிய தரைத்தள அமைப்பு மூலம் இந்த செயற்கைக்கோளில் இருந்து தரவுகளைப் பெற வசதி ஏற்படுத்தப்பட்டிருந்தது.
இது போன்ற தகவல் பெற
https://chat.whatsapp.com/JLgK0szSQzoGrB39M90W94
இந்த WhatsApp குழுவில் இணையவும்.
நன்றி.
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
மேலும் படிக்க
🛑✍️நீங்கள் நினைத்தவை எல்லாம் நடக்கிற வாழ்க்கை ரகசியம்- காணொளி.
மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.
No comments:
Post a Comment