Sunday, October 2, 2022

தமிழ் மொழி இறைமொழி 108 - விண்ணியல் மற்றும் வானியல் தமிழரதா?

தமிழ் மொழி இறைமொழி 108 - விண்ணியல் மற்றும் வானியல் தமிழரதா?


நீங்களே சொல்லுங்கள்! விண்ணியல் மற்றும் வானியல் தமிழரதா? இல்லையா?

  • நிலவு ஒரு நாள் 13.3 திகிரி(பாகை) வானில் நகர்கிறது. 
  • பூமி தன்னைத்தானே 24 மணி நேரத்தில் இந்த வானில் 360 திகிரி(பாகை) சுற்றித் திரும்புகிறது. 
  • அந்த 24 மணி நேரத்தில் நிலா 13.3 திகிரி தூரம் நகர்ந்திருக்கும். இந்த நகர்வுதான், ஒரு நல்சித்திரம், என்பது .
  • 27 நட்சத்திரங்கள், ஒவ்வொரு நல்சித்திரமும், நான்கு பாதங்கள், மொத்தம் 27 x 4 = 108 பாதங்கள்.
  • 108 நிமிடத்தில் , நிலா 1 ஒரு திகிரி(பாகை) நகர்ந்திருக்கும். நிலாவின் ஒரு பாத நகர்வு என்பது 3.33 திகிரி(பாகை). 3.33 x 108 = 360 நிமிடங்கள. அதாவது 3.33 திகிரி நகர 6 மணிநேரம் ஆகும். 
  • பூமியின் ஒரு திகிரி நகர்வுக்கு ஒரு நாள் .( 365.25 / 360    =    0.989 நாள் ) 1 நாள். 
  • சூரியனின் ஒரு திகிரி நகர்வுக்கு 60 ஆண்டுகள் (இது வரை) . 
  • அதே போல் நிலாவின் ஒரு திகிரி நகர்வுக்கு 108 நிமிடங்கள். 
  • ஒரு நாளைக்கு 24X 60 = 1440 நிமிடங்கள். ஒரு நாளைக்குள், 1440 நிமிடங்களில், நிலா, 13.3 திகிரி கடக்கிறது. அப்படியானால் நிலா 1 திகிரி கடக்க , 1440/13.3 = 108 நிமிடங்கள்.

  • ஐம்பூதங்களில் இருந்து உருவான தனிமங்கள் ((elements), காரம், அமிலம், உலோகங்கள், உப்பு)). மொத்தம் 108.
  • நிலாவின் விட்டம் X 108 = பூமிக்கும் நிலவுக்கும் இடையே உள்ள தூரம்.
  • பூமியின் விட்டம் X 108 = சூரியனின் விட்டம்.
  • சூரியனின் விட்டம் X 108 = சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரம்.
  • ஒரு நாளைக்கு நாம் விடும் மூச்சின் எண்ணிக்கை 21600. பகலில் 10800 இரவில் 10800. இதுவும் 108இன் மடங்கு தான்.
  • நம் உடலில் 108 சூட்சுமங்கள் (நெர்வ் பாய்ன்ட்ஸ்- Accupressure pounts) இருக்கின்றன.
  • நம் உடல் சூடு 108° பாரன்ஹீட் ஐ தாண்டும் போது உடல் உறுப்புகள் செயல் இழக்க ஆரம்பித்துவிடும். 108 degrees Fahrenheit is the internal temperature at which the human body's vital organs begin to fail of overheating.
  • ஐங்கோனத்தின் உள் சாய்மானம் 108° (degrees on inner angles of a pentagon). அமெரிக்க இராணுவ ஆய்வகத்தின் பெயர்/அமைப்பு பென்டகன்.
  • இந்தியாவில் உயிர் காக்கும் ஆம்புலன்ஸ் வசதிக்கு 108 என்ற எண் வழங்கப்பட்டுள்ளது.
  • திருக்குறளிலும்(108) 70(பொருட்ப்பால்) + 38(அறத்துப்பால்) = 108    + 25(காமத்துப்பால) =133.
  • ஆயுத எழுத்து, என்பது, மூன்று இனை சூரியன்களை , குறித்த எழுத்துதான். அதுவும் 666 என முக்கோணத்தில், சமமான பக்கங்களைக் கொண்டது. முக்கோணத்தின் மூன்று கோணங்களும், 60 திகிரியாக இருந்தால், மூன்று பக்கங்களும், 6 என சமமாக இருக்கும். ஆக 666 என்றால் , ஃ இதை முருகன் காலத்திலேயே, மூன்று இனை சூரியன்களைக் கொண்டது தான் நம் சூரிய குடும்பம் என தெரிந்து இருக்கிறது. அதனால்தான் அவருக்கு 666 என குறிக்கின்றனர். 
  • இரு தலை முக்கோணத்தை உருவாக்கி, அதை 6 கோண முக்கோனமாக்கி, ஆண் பெண் வடிவமாக்கி, ஆறுமுகம் என பெயர் பெற்றார்.  

  • ஆக நம் தற்போதைய தமிழ் எழுத்துக்களை, உருவாக்கும் பொழுது,  3,800 வருடங்களுக்கு முன்பே, இப்போதைய தமிழ் எழுத்து வடிவங்கள் 247 எழுத்துக்களில், ஃ என்ற ஒரு ஆயுத எழுத்தையும், இனைத்தனர்.  இந்த ஃ மூன்று ஊழிகளையும் குறிக்கும் படியும், உள்ளது. 
  • எப்படி திருக்குறளில் , மூன்று பால்கள், மூன்று ஊழிகளை, குறித்தும், குறிப்பு கொடுக்கிறதோ, அதேபோல் தமிழ் எழுத்துக்களிலும் ஃ என்பது, மூன்று ஊழிகளையும், குறிக்கிறது.  
  • ஃஐ666 என குறித்தால், நம் தமிழ் எழுத்துக்கள் 246.666 எனவும் குறிக்கலாம். இந்த 246.666 என்பது சூரிய சுற்றின், ஒரு பாதம்.
  • சூரிய சுற்று 108 பாதங்களைக் கொண்டது. 108X246.666 = 26,640. ஆண்டுகள்.
  • எவ்வளவோ, ஒலிகள் இருக்க - 12 உயிர் எழுத்துக்களை , பூமியின் ஒரு இல்லத்தை(12 திகிரி) குறிக்கும்படியும், 18- மெய் எழுத்துக்களை, சூரியனின் ஒரு இலுலம்(18 திகிரி) நகர்வை மெய் எழுத்துக்களாக்கினர். 12 + 18 + (12 X 18) 216 + ஃ =246.666.  
  • திருக்குறளில் 1330 x 20 = 26,600(Called Great Year in science) வருடங்கள், என சூரிய சுற்றைத்தான், குறித்திருக்கிறார்கள்
  • ஆக மூன்றாம் ஊழியை, வரவேற்க, தயாராக இருப்போம். நடக்கும் நிகழ்வுகளை, வேடிக்கை பார்ப்போம்.

இது போன்ற தகவல் பெற
https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc
இந்த Telegram  குழுவில் இணையவும்.
https://chat.whatsapp.com/FaFcmdwPG6yK8uSDjgUvXQ
இந்த WhatsApp  குழுவில் இணையவும்.

நன்றி.
தகவல்: இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

No comments:

Post a Comment

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல்லூரி மாணவர்கள்.

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல...