Wednesday, January 11, 2023

நேரு நினைவுக் கல்லூரியில் விண்வெளி கண்காணிப்பு மற்றும் வாய்ப்புகள் -கருத்தரங்கம்.

நேரு நினைவுக் கல்லூரியில் விண்வெளி கண்காணிப்பு மற்றும் வாய்ப்புகள் -கருத்தரங்கம்.



புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் விண்வெளி கண்காணிப்பு மற்றும் வாய்ப்புகள் குறித்த கருத்தரங்கம் புதன்கிழமை (11.01.23) நடைபெற்றது. விண்வெளி தொடர்பாளர் மற்றும் விண்வெளி புகைப்பட கலைஞரான மோகன்ராஜ், கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இதில் புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் மற்றும் நிலா உருவான விதம் பற்றியும் ஏன் பூமியில் மட்டும் உயிரினங்கள் வாழ்வதற்கான காரணங்கள் உள்ளன என்பது பற்றியும் தெளிவாக விளக்கினார். எந்த காரணத்தால் புளூட்டோவை கோள் என்ற நிலையிலிருந்து அதை எடுத்தார்கள் போன்ற காரணத்தையும் விளக்கினார். லிப்பர்ஷி அறிஞர் குழந்தைகள் விளையாடுவதை பார்த்து லென்ஸ்களை மாற்றி அமைத்து தொலைநோக்கி உருவாக்கினார். இதை வைத்து கலிலியோ கலிலி அதி நவீன தொலைநோக்கி உருவாக்கி வியாழன் கோளையும், வியாழன் நிலாக்களான ஐஓஐரோப்பாகனிமீடு மற்றும் காலிஸ்டோ  ஆகியவற்றை தெளிவாக கண்டறிந்தது எவ்வாறு என்பதை எடுத்துரைத்தார். ஒளி எதிரொளிப்பு மற்றும் ஒளிவிலகல் வகையான தொலைநோக்கிகள் எவ்வாறு அமைக்கப்பட்டுள்ளன எந்த தொழில் நுட்பத்தில் அது வேலை செய்கிறது என்பதை விளக்கமாக எடுத்து கூறினார். ஒரு தொலைநோக்கி வைத்து அந்த தொலைநோக்கியில் எவ்வாறு குவிய தூரம் அமைக்கப்பட்டுள்ளது, எவ்வாறு கண்ணா இருக்கு லென்ஸ் அமைக்கப்பட்டுள்ளது, எவ்வளவு தொலைவில் உள்ள பொருளை பார்க்க முடியும் என்பதற்கான செயல்முறை விளக்கத்தையும் கூறினார்.

நிறப்பிரிகை நிறமாலைமானி மூலம் விண்வெளியில் அணுக்கள், வாயுக்கள் என்னென்ன இருக்கிறது என்பதை எவ்வாறு கண்டுபிடிக்கிறார்கள் என்பதைப் பற்றியும் விளக்கினார். மின்காந்த அலைகள் பற்றியும் அலை நீளம், அதிர்வெண் வைத்து நட்சத்திரங்களை கண்டுபிடிப்பது பற்றியும் கூறினார். அதிக அலை நீளம் கொண்ட ரேடியோ அலைகளை ரேடியோ தொலைநோக்கி வழியாக இரவு பகல் முழுவதும் ஆராய்ச்சி செய்து விண்வெளியில் விண்வெளியில் உள்ள பொருட்களை ஆராய்ச்சி செய்யலாம். ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி அகச்சிவப்பு (IR) கதிர்களை உள்வாங்கி அதன் மூலம் விண்வெளியில் உள்ள விண்வெளி பொருட்களை ஆய்வு செய்கிறது. மேலும் சூரியனில் எவ்வாறு அணுக்கருவு இணைவு வினை நடைபெறுகிறது, சூரியனின் ஆயுட்காலம் எவ்வளவு இருக்கிறது, அணுக்கருவி இணைவு நடைபெறாத இடத்தில் கரும்புள்ளி காணப்படுவது எவ்வாறு என்று கூறினார். தொலைநோக்கி வழியாக அனைத்து மாணவிகளும் நேரடியாக சூரியனின் கரும்புள்ளியை கண்டு மகிழ்ந்தனர். 



முன்னதாக இந்த நிகழ்வை இயற்பியல் துறை தலைவர் வெங்கடேசன்  அனைவரையும் வரவேற்றார். கல்லூரி தலைவர், செயலர், முதல்வர்  மற்றும் சுய நிதி பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி பேராசிரியர் கபிலன் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார். இவ்விழாவைக்கான ஏற்பாடுகளை இயற்பியல் துறை உதவி பேராசிரியர் ரமேஷ் அவர்கள் செய்திருந்தார். இந்த நிகழ்வுகளில் இயற்பியல் துறை சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பங்கு பெற்றனர்.


No comments:

Post a Comment

ஆறு கோள்கள் ஒரே நேர்கோட்டில் வரும் அதிசய விண்வெளி நிகழ்வு - எப்போது, எப்படி பார்க்கலாம்?

ஆறு கோள்கள் ஒரே நேர்கோட்டில் வரும் அதிசய விண்வெளி நிகழ்வு - எப்போது, எப்படி பார்க்கலாம்? ஜனவரி 21 ஆம் தேதி, வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, ...